![]() |
|
'சுகம் சுகமே" படப்பிடிப்பிற்காக ஈழத்தமிழ் கலைஞர்கள் பயணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: 'சுகம் சுகமே" படப்பிடிப்பிற்காக ஈழத்தமிழ் கலைஞர்கள் பயணம் (/showthread.php?tid=6648) |
'சுகம் சுகமே" படப்பிட - AJeevan - 10-05-2004 <b><span style='color:brown'>'சுகம் சுகமே\" படப்பிடிப்பிற்காக ஈழத்தமிழ் கலைஞர்கள் கனடாவிலிருந்து ஸ்ரீலங்கா, இந்தியா பயணம்</b> ஜனகன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மற்றுமொரு திரைப்படமான 'சுகம் சுகமே" எனும் ஈழத் தமிழர்களின் திரைக்கதையைக் கொண்ட திரைப்படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பிற்காக, ஒக்டோபர் மாதம் 2ம் திகதி மாலை, ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்திலிருந்து இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டு கலைஞர்கள் புறப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே பல திரைப்படங்கள் ஈழத்தமிழர்களால் தயாரிக்கப்பட்டு கனடிய மண்ணிலும் பல நாடுகளிலும் திரையிடப்பட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. அண்மைக் காலமாக வெளிநாடுகளிலும் படப்பிடிப்பிற்காக ஈழத்துத் திரைப்படக் கலைஞர்கள் செல்ல ஆரம்பித்துள்ளார்கள். இவ்வருடம் வெளியான 'மெதுவாக உன்னைத்தொட்டு" என்ற 'பரா" தயாரிப்பில் உருவான திரைப்படம் உட்பட சில படங்கள் வெளிநாட்டிலும் படமாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதை-வசனத்தில் உருவாகும் 'சுகம் சுகமே" திரைப்படத்தின் சில படப்பிடிப்புக்கள் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை இந்திய படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் இக்குழுவில், தயாரிப்பாளர் எஸ்.ஸ்ரீமுருகன், இயக்குனர் ரவி அச்சுதன், டெமிசன் அல்வின் ஆகியோரும் அடங்குகின்றனர். இலங்கையிலுள்ள பல முன்னணிக் கலைஞர்களும், தென்னிந்திய தொலைக்காட்சித் தொடர் மற்றும் திரையுலக நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் பங்கேற்கவுள்ளார்கள் என்பதோடு பல கனடிய முன்னணிக் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளார்கள் என இதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இக்குழுவினர் மீண்டும் கனடா திரும்பிய பின்னர் மேலதிக படப்பிடிப்புக்கள் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடரும் என்றும், வருகிற வருடத்தில் 'சுகம் சுகமே" திரைப்படம் திரைக்கு வரும் என்றும் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஸ்ரீமுருகன் மேலும் தெரிவித்துள்ளார். </span> http://www.eelampage.com/index.shtml?id=20...051949487259&in Thanks:"Saldhaanj" - shanmuhi - 10-05-2004 ±õÁÅâý ¾¢¨ÃôÀ¼õ º¢ÈôÀ¡¸ «¨Á šúòÐ츨Çò ¦¾Ã¢Å¢òÐ즸¡ûŧ¾¡Î... À¼ò¨¾ì ¸¡Ïõ ¬ÅÖ¼ý þÕ츢ý§Èý. - kavithan - 10-05-2004 சுகம் சுகமாக வர வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 10-06-2004 kavithan Wrote:சுகம் சுகமாக வர வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 10-06-2004 vennila Wrote:kavithan Wrote:சுகம் சுகமாக வர வாழ்த்துக்கள் என்ன சிரிப்பு மருமகளே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |