Yarl Forum
தென்னிந்தியக் கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிக - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: தென்னிந்தியக் கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிக (/showthread.php?tid=6626)



தென்னிந்தியக் கலைஞர் - Nitharsan - 10-12-2004

அன்புறவுகளே!
ஈழத்தமிழ் மக்களின் தார்மீக உரிமைக்கான போரை புறக்கணித்து. தாயகத்தில் துன்பப்படும் உறவுகளைப்பற்றி ஒரு துளியும் சிந்திக்காது தமிழ்பேசி பிழைப்பு நடாத்தும் தென்னிந்திய தொடர் நாடக கலைஞர்கள், ஒரு தமிழ் வசனத்தினுள் மூன்று ஆங்கில வார்த்தைகளை புகுத்தி நகைச்சுவை எனப்பெயர் பெற்றவர்கள் கனடாவில் நடைபெறும் நிகழ்வொன்றுக்கு (கலக்கல்நைற்) ஈழத்தமிழர்களால் அழைக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி:
[size=18]தென்னிந்தியக்கலைஞர்களை ஈழத்தமிழர்களை பணம் கொடுத்து தமது நிகழ்வுக்கு அழைக்கலாமா?
அப்படி அழைக்கலமென்றால் அவர்கள் சேகரித்த பணத்தில் ஒரு துளி யாவது ஈழத்தமழர்களுக்கு உதவியதாக உங்களால் கூற முடியுமா?இது என்னால் மட்டுமல்ல ஏராளமானவர்களால் முன்வைக்கப்பட்ட ஓர் விடையம் எங்கே வாதாடலாமா? :?: :?:
நேசமுடன் நிதர்சன்
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:


- paadai - 10-12-2004

தென்னிந்திய தமிழ்-ஈழதமிழ்

ஐரோப்பியதமிழ்-ஈழதமிழ்

யாழ்பாணதமிழ்-மட்டுதமிழ்

இது மாறினால் தான் கலைஞர்களை ஒரு பார்வையில் புரிந்து கொள்ள முடியும்

எங்கள் கலைஞர்கள் என்று இந்தியா சென்று நிகட்ச்சிகள் தருகிறார்களோ அன்று தான் உங்கள் வாதாட்டம் நிறைவுபெறும்.


- kavithan - 10-12-2004

இது தேவையற்ற பாகுபாடு... வீண்பிரச்சைகளுக்கு வழிவகுக்கும்.... எல்லாரும் தமிழர்களே அண்ணா. இதனால் அவர்கள் இலாபம் தான் அடைகிறார்களா..?


- cannon - 10-12-2004

அப்பு பாடை,

இன்று தென்னிந்தியத் திரைப்படங்களானது எமது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வருவாயை நம்பித்தான் பெருமளவு தங்கியுள்ளது. இதை அவர்களே தெரிவிக்கிறார்கள்.

ஆனால் அதற்கு நன்றிக்கடனாக எதாவது செய்கிறார்களோ? என்றால் இல்லை என்பதே பதில்.

இதற்குப் பிரதியுபகாரமாக எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தல், எமது நடை-உடை-பேச்சு வழக்குகளை கிண்டல் செய்து பணம் சம்பாதிக்க முற்படுகிறார்கள்.

<b>*குஜராத்தில் பூகம்பமேற்பட்ட போது பெரும்மெடுப்பில் நிதி சேகரித்து அனுப்பினார்கள் :!:

*காவிரிப் பிரட்சனைக்கு பெரும் ஊர்வலம் நடத்தினார்கள் :!: </b>
இப்படியெல்லாம் திரைப்படத்துறைக்கு சம்பந்தமே இல்லாத சம்பவங்களில் உணர்வு போர்வமாக செயற்படும் இந்தத் தென்னிந்திய திரைப்படத்துறையினர், அவர்களின் வருமானத்தில் பாரிய பங்கு வகிக்கும் ஈழத் தமிழர்களின்

<b>1) படுகொலைகள், இடப்பெயர்வுகள், இரானுவ நடவடிக்கைகள் போன்ற எதாவது ஒன்றுக்காகவேனும் ஒருதரம் குரல் கொடுத்தார்களா :?:

2) பிரபல முன்னால் அரை குறை ஆடை கவற்ச்சி நடிகையும், இன்னால் முதலமைச்சருமான செல்வி! ஜெயலலிதா, எம்மைப்பற்றி, எமது போராட்டத்தைப்பற்றி கேவலமான பொய்யான கருத்துக்களை இன்றும் கூறிக்கொண்டிருக்கும் போது, இவர்கள் செய்தது என்ன? எங்கிருந்தார்கள் :?: </b>
நாங்கள் தென்னிந்தியக் கலையர்களை முற்று முழுதாக ஒதுக்கச் சொல்லவில்லை. நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும். இனியாவது ஏதாவது செய்யுங்கள் என உரிமையுடன் கேட்போம்.


தமிழர்களைப் பிரித்து - Nitharsan - 10-12-2004

<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->இது தேவையற்ற பாகுபாடு... வீண்பிரச்சைகளுக்கு வழிவகுக்கும்.... எல்லாரும் தமிழர்களே அண்ணா. இதனால் அவர்கள் இலாபம் தான் அடைகிறார்களா..?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எமக்கு பணமோ,சொத்துக்களே அவர்கள் தரவேண்டாம். எமக்காக ஒரு வார்த்தை பேசலாமல்லவா?
இதைத்தான் நான் கேட்டது
எம்மைப்பற்றி அக்கறையில்லாதவர்கள்
தமிழ் உணர்வில்லாதவர்கள்
தமிழர்களது நிகழ்வுக்கு வருவது நியாயமா?
தமிழர்கள் அவர்களை அழைப்பது முறையா?
தமிழர்களைப் பிரித்து பேச நான் தயாரகவில்லை ஆனால் தமிழ்பேசி பிழைப்ப நடத்துவோரை விட்டு வைக்க தமிழினம் தாயாரய் இல்லை....
<span style='color:brown'>கடந்த மார்ச் மாதம் பாகரின் தீவகற்ப்பத்தில் நடந்தது என்ன....

தெரியாவிட்டால் கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்....
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1231

சில நேரம் நீங்கள் யாராவது தமிழகத்தைச் சேர்ந்தவர்களாயின் உங்களிடம் நான் வேண்டுவது

[size=24]நாங்கள் உங்களை எமது உடன் பிறப்புக்களாகவே என்னுகின்றோம். </span>
[b]-நேசமுடன் நிதர்சன்-


- kavithan - 10-12-2004

<span style='font-size:22pt;line-height:100%'>இது அறிந்தது தான் அண்ணா..! அவர்கள் பக்கத்திலும் ஏதாவது பிரச்சனை இருக்கலாம்.. ஈழபிரச்சனை பற்றி கதைத்தால் அதனை தமது தொலைக்காட்சியில் ஒலிபரப்ப மாட்டோம் என்று தொலைக்காட்சி நிர்வாகம் கூறி இருக்கலாம்..... ஈழத்தமிழ்ர் பிரச்சனை பற்றி கதைத்தால் தமிழ்நாடு போலீசில் இருந்தோ அரசிடம் இருந்தோ பிரஷ்ஷனையை எதிர் நோக்கலாம்.. இப்படி ஏராளமான பிரஷ்ஷனைகள் திரமறைவில் இருக்கலாம்..எனவே அவர்களை சொல்லி குற்றம் இல்லை... சாதாரண மனிதனில் இருந்து அரசியல் வாதிவரை தமிழ்நாடு அரசின் அச்சுறுத்தலுடனே தான் வாழும் இச் சூழலில் அவர்கள் ஈழதமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்கள் நிலமை..?

நானும் ஒரு ஈழத்தமிழன் தான்.. ஜேர்மனியில் ஈழத்தமிழ் உடகவியலாளர் சாந்தி ரமேஸ் வவுனியன் அவர்களையே குற்றம் செய்யதவர், பயங்கரவாத நடவடிக்கையோடு தொடர்புடையவர் என தவறான தகவல் கொடுத்து அவரின் மனதையும் நோகடித்ததுடன், அவருக்கு அலைச்சலையும் அழித்த எம் ஈழத்தமிழர் முன் அவர்கள் எவ்வளவோ மேல்.. அத்தோடு இவருக்காக குரல் கொடுக்காதா ஜேர்மன் தமிழ் அமைப்புக்களை விட அவர்கள் எவ்வளவோ மேல்....எனவே இதை தென்னிந்திய தமிழரிடம் இருந்து எதிர் பார்பது தவறு என்றே நான் சொல்வேன்... இது என்கருத்து..

இன்னும் ஒன்று நான் அறிந்த விடையம் பல நடிகர்களை கலைஞ்ஞர்களை கனடாவுக்கு அழைத்து நிகழ்ச்சிகளை வாழங்கிய பலர் எல்லா வற்றையும் இழந்து நட்டம் அடைந்தார்களாம்... ஒரு சிலர் தான் நடத்திய நிகழ்ச்சியில் இலாபம் அடைந்திருக்க வேண்டும்.....</span>


மன்னிக்கனும் கவிதன் அ - Nitharsan - 10-13-2004

மன்னிக்கனும் கவிதன் அண்ணா..
நீங்கள் ஒன்றைக் கூறினீர்கள். நீங்கள் கூறிய இந்த வார்த்தையே என்னை மீண்டும் உங்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் தந்துள்ளது. கவிதனண்னை சொன்னார் தமிழ் நாட்டு அரசு அவர்களை அடக்கு முறைக்குள் வைத்திருக்கிறது என்று கவிதன் தமிழகத்தின் முதல்வர் யார் என்று தெரியுமா?
சரத்குமார் யார் தெரியுமா?
நெப்போலியன் யார் தெரியுமா?
ராதா ரவி யார் தெரியுமா?
ரோஜா யார் தெரியுமா?
ஏன் ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பேசினால் மட்டுந்தான் பிரச்சினையா? வீரப்பன் பிரச்சினையால் பிரச்சினை இல்லையா?
அண்மையில் பா.மா.க ரஜினி மற்றும் விஜயகாந் ஆகியோருக்கிடையில் என்ன நடந்தது அது ஏன் நடந்தது? அவர்களின் அரசியல் யுக்கி தமது சுயநலத்திற்காய் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இவர்கள் ஏன் சமூக பிரச்சினைக்காய் பிரச்சினைகளை எதிர் கொண்டால் என்ன?
-நேசமுடன் நிதர்சன்-


- kirubans - 10-13-2004

தமிழகக் கலைஞர்கள் தமிழீழ மக்களுக்கு குரல் கொடுப்பது குறைவுதான். எனினும் குரல் கொடுக்க நினைப்பவர்களையும் தடா, பொடா என்று சட்டங்கள் மிரட்டும்போது அதிகம் எதிர்பார்க்க முடியாது. பெரிய கட்சித் தலைவரான வைகோ கூட சிறை சென்றது ஈழத் தமிழருக்கு குரல் கொடுத்துத்தான். திரைப்படக் கலைஞர்கள் சிறைசெல்ல விரும்ப மாட்டார்கள்.

விவாதத்திற்கு வந்த விடயம் வேறு என்று நினைக்கிறேன். அதாதவது புகலிடத் தமிழர்கள் இந்திய தொடர் நாடகங்களையும் திரைப்படங்களயும் ஆதரிப்பதினால்தான், திரைப்படக் கலைஞர்கள் இங்கு கலை நிகழ்ச்சி நடாத்த வருகின்றார்கள்.

எவரும் தமிழக நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடாது என்று சட்டம் போட முடியாது (கர்நாடகத்தில் பிர மொழிப்படங்களுக்கு, முக்கியமாக தமிழ்ப் படங்களுக்கு தடை உள்ளதுபோல் இங்கு செய்ய முடியாது).

தமிழக நிகழ்ச்சிகள் குறைவான சில தொலைக்காட்சிகள் தள்ளாடும் நிலையிலிருந்தே, நாம் எவ்வளவு தூரம் தமிழக தொடர் நாடகங்களுக்கு அடிமையாகி விட்டோம் என்பதை உணரமுடியும்.

இதற்கு ஒரே வழி, இங்குள்ளவர்கள் சில தொடர்களை தயாரிக்க முன்வரவேண்டும். அவற்றில் யதார்த்தமான புகலிடக் கதைகளையோ, அல்லது தமிழீழக் கதைகளையோ கருப் பொருளாக்கலாம். இத் தொடர்களை பிரபலமான தமிழகக் கலைஞர்களின் பங்களிப்புடன் செய்தால், அவர்கள் எங்களுக்காகக் குரல்கொடுக்கவில்லை என்ற கருத்தும் அடிபட்டுப் போய்விடும்.


விவாதத்திற்கு வந்த வி - Nitharsan - 10-13-2004

<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->தமிழகக் கலைஞர்கள் தமிழீழ மக்களுக்கு குரல் கொடுப்பது குறைவுதான். எனினும் குரல் கொடுக்க நினைப்பவர்களையும் தடா, பொடா என்று சட்டங்கள் மிரட்டும்போது அதிகம் எதிர்பார்க்க முடியாது. பெரிய கட்சித் தலைவரான வைகோ கூட சிறை சென்றது ஈழத் தமிழருக்கு குரல் கொடுத்துத்தான். திரைப்படக் கலைஞர்கள் சிறைசெல்ல விரும்ப மாட்டார்கள்.

விவாதத்திற்கு வந்த விடயம் வேறு என்று நினைக்கிறேன். அதாதவது புகலிடத் தமிழர்கள் இந்திய தொடர் நாடகங்களையும் திரைப்படங்களயும் ஆதரிப்பதினால்தான், திரைப்படக் கலைஞர்கள் இங்கு கலை நிகழ்ச்சி நடாத்த வருகின்றார்கள்.

எவரும் தமிழக நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடாது என்று சட்டம் போட முடியாது (கர்நாடகத்தில் பிர மொழிப்படங்களுக்கு, முக்கியமாக தமிழ்ப் படங்களுக்கு தடை உள்ளதுபோல் இங்கு செய்ய முடியாது).

தமிழக நிகழ்ச்சிகள் குறைவான சில தொலைக்காட்சிகள் தள்ளாடும் நிலையிலிருந்தே, நாம் எவ்வளவு தூரம் தமிழக தொடர் நாடகங்களுக்கு அடிமையாகி விட்டோம் என்பதை உணரமுடியும்.

இதற்கு ஒரே வழி, இங்குள்ளவர்கள் சில தொடர்களை தயாரிக்க முன்வரவேண்டும். அவற்றில் யதார்த்தமான புகலிடக் கதைகளையோ, அல்லது தமிழீழக் கதைகளையோ கருப் பொருளாக்கலாம். இத் தொடர்களை பிரபலமான தமிழகக் கலைஞர்களின் பங்களிப்புடன் செய்தால், அவர்கள் எங்களுக்காகக் குரல்கொடுக்கவில்லை என்ற கருத்தும் அடிபட்டுப் போய்விடும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விவாதத்திற்கு வந்த விடையம் வேறு என்பது சரியே
இதற்காய் மன்னிக்கவும்
-நேசமுடன் நிதர்சன்-