![]() |
|
புதுவை இரத்தினதுரையின் உலைக்களம் புத்தகத்தில் இருந்து... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: புதுவை இரத்தினதுரையின் உலைக்களம் புத்தகத்தில் இருந்து... (/showthread.php?tid=6624) |
புதுவை இரத்தினதுரையி - hari - 10-12-2004 <b><span style='font-size:23pt;line-height:100%'>தாயகத்தை காதல் செய்.</b> [size=14]அட பைத்தியக்காரக் கவிஞனே! தாயகத்தை எப்படியடா காதலிக்க முடியும்? பெண்ணை ஆணும் ஆணைப் பெண்ணுமே ஆராதிக்க முடியும். மண்ணுக்கு மாலையிட முடியுமா? கட்டித்தழுவி முத்தமிட முடியுமா? தாயகத்தைக் காதலிக்கச் சொல்லும் கவிஞனே! உனக்குப் புத்தியென்ன பேதலித்து விட்டதா? உண்மைதான். அன்னைபூமி மீது எனக்கு அளவற்ற காதல். எப்படியென்று எடுத்துச்சொல்ல முடியாது அது கற்பனை கடந்தது. என் தாய்மடி எத்தனை அழகு! காலை சேலைகட்டி வந்து பூச்சூடிப் புன்னகைக்கும் போது காணக் கோடி விழிகள் வேண்டும். மாலைவந்து மயக்கும் எழிலில் என்மனம் வசமிழந்து போகும். இங்கு வேர்பிடித்த ஒவ்வொரு புல்லையும் நான் விரும்புகின்றேன். விரிந்து கிடக்கும் பரந்த வயல்வெளிகளையும் வந்து கரைதழுவி தாயவள் சேலை நனைத்து விளையாடும் கடலையும் நான் காதலிக்கின்றேன். வாசமற்றதாயினும் பூவரசம் பூக்களை நான் பெரிதும் விரும்புகிறேன். பனைகளே எனது கற்பனைச் சுனைகள். தென் தமிழீழத்தின் திசையை வணங்குவேன். மட்டக்களப்பின் மடியில் தவழ்வேன். அங்கு முழு நிலாக் காலத்தில் களத்து மேட்டில் கேட்கும் பாட்டும் கும்மியும் குரவையும் அம்மானையும் வசந்தன் பாட்டும் எனக்கு இறக்கை கட்டிப் பறக்க வைக்கும். முறுக்கேறிய இராவணன் பூமி திருக்கோணமலை. அது அழகின் சிகரம். நிலத்தின் முலையென நிமிர்ந்த கோணேசர் மலைக்கு பின்னரே வெய்யில் "வாணிஸ்" பூசும். தம்பலகாமத்து நெல் வயல்களில் வெட்டியடுக்கிய சூட்டின் வாசம் மூக்கு நுனியை முத்தமிடும் போதே நாக்கில் நீருறும். பச்சையரிசிச் சோறு படுருசி. பன் குளத்துத் தயிருக்கு எது நிகர்? வன்னி மண்ணுக்கு என்ன குறை? கொம்புத் தேனும் பாலைப்பழக் காலத்துப் பன்றிக் கொழுப்பும் நந்திக்கடலின் நண்டும் உண்டு மகிழ்ந்;;தவனுக்கே உண்மை தெரியும். "வங்கம் மலிகின்றகடல் மாதோட்டம்" எங்களது என்ற தேவாரப் பாட்டைச் காதோரம் ஏற்று. பாலாவியின் கரையில் பாடு; காற்றில் கலந்து உலகமெங்கும் உலா வரட்டும். தாயகத்தைக் காதல் செய் என்றேன். நிலத்தைக் காதலிப்பது எப்படியென்று நீ என்னைக் கேட்கிறாய். தமிழனே! தாய் மடியில் நீ புரண்டெழவில்லை. அன்னை மண்ணை அன்பு செய்யவில்லை. தாயகத்தைக் காதலிக்கவில்லை. அதனாற்தானே... ஆறுகோடி தமிழர்கள் இருந்தும் உனக்கொரு "தனிவீடு' கிட்டவில்லை. அகதியாகி எத்தனை தெருக்களில் அலைகின்றாய். இரவற் திண்ணையிற்தானே இன்றும் படுக்கின்றாய். முக்குச் சீறக்கூடப் பயந்து பேச்சிழந்து கிடக்கின்றாய். பகைவனின் பாதணிகளுக்குக் கூட பூசை செய்கின்றாய். குடங்கிக் குடங்கிக் கூனாகிப்போனாய். அட தமிழனே! தாய் நிலத்தைக் காதல் செய்து பார் உன் மேனியிலிருந்து பன்னீர் விசுரும். நரைத்த மயிர்கூடக் கறுக்கும். ஆயிரம் கோடிச் சூரியப் பிரகாசம் உன் கண்ணிலிருந்து வீசும். நீ எடுத்து வைக்கும் ஒவ்வோரு காலடிக்குள்ளேயும் நிலம் கசிந்து நீருறும். கீரிமலைக் கேணியை யாரிடமோ கொடுத்துவிட்டு தாயகத்தைக் காதலிப்பது எப்படியென்று என்னிடம் கேட்கின்றாய். தாயகம் பேசாது. ஓரக்கண்ணால் வெட்டி உருவேற்றாது. கடிதம் எழுதாது. கட்டிய ணைத்து முத்தமிடாது. இந்த நாங் கும் இல்லையென்றால் காதலிக்க முடியாதா? எந்தப் பேயன் சொன்னவன்? தாயகம் என் தாய் தாயகம் என் சக்தி தாயகம் என் மூச்சு. வேறொருவன் வீட்டில் விருந்தாளியாக பட்டுவேட்டியுடன் இருப்பதிலும் பார்க்க சொந்த வீட்டில் கோவணத்துடன் இருப்பதே சுகம். இறந்த பின்னர் என்னை எரிக்கக்கூடாது ஏன் தெரியுமா? என் தாயகம் எரிகாயங்களுக்கு உள்ளாகக் கூடாது. என்னைப் புதைப்பதையே விரும்புகின்றேன். புதைக்கும் போதும் புற்களின் வேரறுந்து போகாமல் குழிவெட்டுங்கள் உப்புப் போட்டுப் புதையாதீர் நிலம் உவராகிவிடும் மண்போட்டு மூடினால் போதும். மழை பெய்ததும் வேர்கள் துளிர்த்துக்கொள்ளும். என் மண்ணில் நிற்கும் போது தான் எனக்கு இறக்கை முளைக்கிறது உனக்கும் அப்படித்தான் உணர்ந்துகொள். ஒரு பெண் உன்னையும் நீ ஒரு பெண்ணையும் அல்லது ஒரு ஆண் உன்னையும் நீ ஒரு ஆணையும் காதலிப்பது உன் உரிமை. ஆனால் மண்ணைக் காதலிப்பதே உன்னதம். தமிழனே! தாயகத்தைக் காதல் செய்....! <b><i>புதுவை இரத்தினதுரை</b></i></span> (தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........) - kavithan - 10-12-2004 கவிதைக்கு நன்றி............. அது தொடரும் என்கிறீர்கள் வாழ்த்துக்கள். .. - hari - 10-12-2004 kavithan Wrote:கவிதைக்கு நன்றி............. அது தொடரும் என்கிறீர்கள் வாழ்த்துக்கள். ..நன்றி கவிதன், - வெண்ணிலா - 10-12-2004 <b>அருமையான கவிவரிகள். அதை இங்கு தந்தமைக்கு நன்றி ஹரி</b> - tamilini - 10-12-2004 தொடர வாழ்த்துக்கள் இங்கு இட்டமைக்கு நன்றிகள்..! - Jaya - 11-20-2004 tamilini Wrote:தொடர வாழ்த்துக்கள் இங்கு இட்டமைக்கு நன்றிகள்..!நன்றி hari அன்புடன் Jaya |