![]() |
|
பாவம் இவர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: பாவம் இவர்கள் (/showthread.php?tid=6603) |
பாவம் இவர்கள் - Jude - 10-15-2004 நானும் அவர்களும் நான்: (ஒஸ்லோவில்) நான்தான்.... விநாயகமூர்த்தி! பெயருக்கேற்றாற் போல்தான் கட்டைப் பிரமச்சாரி. வயது நாற்பதைத் தொட்டாயிற்று வழுக்கை விழுந்ததுதம் வசதிதான் வெள்ளி முடிகள் வெளிப்படவில்லை. ஒற்றை அறை வாழ்வு. இண்டைக்கும் "ஓவர்ரைம்" தான் பாரிய சலவைத் தொழிலகம் முழங்காலும் மூட்டுக்களும் வலிக்கின்றது இனிப் போய் சமைக்க முடியாது நல்ல வேளை - குளிர்ப்பெட்டியில் பலநாளாய் பாதுகாக்கப்பட்ட பருப்புக்கறியும் கோழிக்கறியும் பசியாற்றப் பயன்படும். அவர்கள்: (கொழும்பில்) அம்மாவும் அத்தானை இழந்த அக்காவும் அவள் பிள்ளைகளும் தங்கச்சிமார் இருவரும் எல்லாரும் என்னை நம்பித்தான் வசதியான வீடு வாழ்வை மீறிய வசதிகள் புதிய காலை ஒவ்வொன்றிலும் புத்தம் புதிதாய் மரக்கறிகளும் மாமிசமும் முதல்நாள் மீதமானதை மறுநாள் உண்ண முடியாதாம் சமையலுக்கு மாத்திரமல்ல சலவை செய்திடக்கூட சம்பளத்திற்கு ஒருத்தி வந்து வந்து போகின்றாள் பிகு: நேற்றும்..... நிமிடங்களைத் தின்னும் தொலைபேசி அட்டையொன்றோடு சமர் பகீரதப் பிரயத்தனமாய் பலமுறை முயன்று தொடர்பு கிடைத்தபோது "அண்ணாமலை தொடர் பார்க்கிறம் ராசா ஆறுதலாய் எடு....." அவசரமாய்த் தொடர்பைத் துண்டித்தாள் அம்மா! சோதியா இந்தக் கவிதை பல வருடங்களுக்கு முன் கனடாவில் ~~மணியண்ணை ரைட்'' புகழ் பாலச்சந்திரன் எடுத்த திரைப்படமான ~~எங்கோ தொலைவில்'' படத்தை நினைவுக்கு கொண்டு வந்தது. எனக்கு ஒரு கேள்வி. ஏன் இவர்கள் தெரிந்தும் அளவுக்கதிகமான வாழ்வுக்கு பணம் அனுப்புகிறார்கள்? எனது குடும்பத்தினரும் அங்கே தான். தேவையான போது, அவர்களது தேவைக்கேற்ற அளவு அனுப்பி, தாம் மிச்சம் பிடிப்பதில் முதலீடுகளை செய்து இவர்கள் தாமும் முன்னேற முடியுமே? யாருக்காவது பதில் தெரியுமா? - kavithan - 10-15-2004 கவிதைக்கு நன்றி.... சூரியனில் வாசித்தேன்.... உறவிழந்து புலத்தில் வாழும் அவர்களுக்கு தம் உறவுகளின் விருப்பத்தை தட்ட முடியாது இருக்கின்றது..... ஆனால் ... இடையில் கிடைத்த சொகுசு வாழ்க்கை சிலரை பணம் அனுப்பினால் மட்டும் தான் உறவு நிலைக்கும் என்று சொல்ல வைக்கிறது.... இதில் இவன் விரும்புவது உறவு... அவர்கள் விரும்புவது பணம்.. இரண்டுக்கும் இடையில் சிக்கியது அவன் வாழ்க்கை... - Vannam - 10-16-2004 சத்தியமாக சொல்லுறன் இதற்க வெளநாட்டில் உள்ளவா்களும் காாரணம் தான். ஏனென்றால் வெளிநாட்டில் உள்ள அஅனேகமான எங்கள் சொந்தங்கள் என்னசெய்கின்றா÷கள் என்பது இங்குள்ள அவ÷களின் உறவுகளுக்கு தொிவதல்லை. வெளிநாட்டில் உள்ள ஒரு மகனைப்பாத்து அவனது தாயா÷ என்னவேலை தம்பி செய்யிறாய் என்று கேட்டால், எயா÷போ÷ட்டில் என்றுதான் மகன் சொல்லுவா÷. தாய் நினைப்பது மகன் பயிலெட் எண்டு. எங்கடை ஆக்கள் செய்யும் தொழிலை தெய்வமாக நினைப்பதில்லை. அப்படி நினைத்தால் தாம் என்னசெய்ததாலும் இதைத்தான் செய்கின்றோம் என்று நெஞ்சை நிமி÷த்தி சொல்ல முடியும். நிங்கள் அவதானித்தீகளோ தொியாது வெளிநாட்டில் உள்ள தனது மகனது நண்பளை பா÷த்து என்ர மகன் என்ன செய்கின்றான் என்று கேட்டலால் அவரும் உண்மை சொல்லமாட்டா÷. இது வெளி நாட்டில் உள்ளவ÷களுக்கிடையில் உள்ள இனம்புாியாத ஒற்றுமை. இந்த நிலை மாறினால் மட்டுமே இங்குள்ளவ÷கள் திருந்த சந்த÷ப்பம் உண்டு. வேலைக்கு போகும் போது நடந்து போனால் காாசை மிச்சம் பிடிக்கலாம் என்று வெளிநாட்டில் உள்ள அண்ணன் நினைக்க, உடற்பயிற்சிக்காக பந்து விளையாட நினைக்கும் இங்குள்ள தம்பி கீரோ கொண்டா சீபிசற் இல் தான் மைதானம் செல்கின்றாான். - kavithan - 10-16-2004 Quote:வேலைக்கு போகும் போது நடந்து போனால் காாசை மிச்சம் பிடிக்கலாம் என்று வெளிநாட்டில் உள்ள அண்ணன் நினைக்க, உடற்பயிற்சிக்காக பந்து விளையாட நினைக்கும் இங்குள்ள தம்பி கீரோ கொண்டா சீபிசற் இல் தான் மைதானம் செல்கின்றாான். இப்படி நானும் அறிந்தேன்.....நியம்... - sOliyAn - 10-17-2004 Vannam Wrote:சத்தியமாக சொல்லுறன் இதற்க வெளநாட்டில் உள்ளவா்களும் காாரணம் தான். ஏனென்றால் வெளிநாட்டில் உள்ள அஅனேகமான எங்கள் சொந்தங்கள் என்னசெய்கின்றா÷கள் என்பது இங்குள்ள அவ÷களின் உறவுகளுக்கு தொிவதல்லை. வெளிநாட்டில் உள்ள ஒரு மகனைப்பாத்து அவனது தாயா÷ என்னவேலை தம்பி செய்யிறாய் என்று கேட்டால், எயா÷போ÷ட்டில் என்றுதான் மகன் சொல்லுவா÷. தாய் நினைப்பது மகன் பயிலெட் எண்டு. எங்கடை ஆக்கள் செய்யும் தொழிலை தெய்வமாக நினைப்பதில்லை. அப்படி நினைத்தால் தாம் என்னசெய்ததாலும் இதைத்தான் செய்கின்றோம் என்று நெஞ்சை நிமி÷த்தி சொல்ல முடியும். நிங்கள் அவதானித்தீகளோ தொியாது வெளிநாட்டில் உள்ள தனது மகனது நண்பளை பா÷த்து என்ர மகன் என்ன செய்கின்றான் என்று கேட்டலால் அவரும் உண்மை சொல்லமாட்டா÷. இது வெளி நாட்டில் உள்ளவ÷களுக்கிடையில் உள்ள இனம்புாியாத ஒற்றுமை. இந்த நிலை மாறினால் மட்டுமே இங்குள்ளவ÷கள் திருந்த சந்த÷ப்பம் உண்டு.இது 80களில்.. இப்போ எந்த நாட்டில எவளவு சமூக உதவிப் பணம் (சோசல்) என்ற விடயம் அங்குள்ள கிழடுகட்டைகளுக்குக்கூடத் தெரியும்! ஆகவே.. கொஞ்சம் தற்காலத்துக்கு இறங்கி வாங்க! - Thusi - 10-17-2004 நீங்கள் சொல்லுறது சரிதான். எண்டாலும் எங்கடை ஆக்கள் இந்த விடயத்திலை மட்டும் தற்காலத்திற்கு வர மறுக்கிறா÷கள். அதாவது வெளிநாட்டுக் காசு என்ற விடயத்தில். அதை எப்படிச் செலவு செய்யுறது எண்ட விடயத்திலை நல்லாய் மொடேனைஸ் ஆகிவிட்டா÷கள். ஆனாலும் அந்தக் காசை உழைக்கிறதுக்கு அங்கை உள்ளவ÷கள் எவ்வளவு பாடுபடுகிறா÷கள் என்பதை எள்ளளவும் நினைத்துப் பா÷க்கிறா÷கள் இல்லை. இன்னொரு விடயமும் இருக்கு. வெளிநாட்டிலை இருக்கிற மகனுக்கு அவனுடைய சம்மதம், விருப்பம், எதி÷பா÷ப்புகள் எதையும் கணக்கிலெடுக்காது நல்ல சீதனத்தோடு (????) கலியாணம் பேசியும் (விலைபேசி) வருமானம் எடுக்கிறா÷கள். - kuruvikal - 10-17-2004 ஊதாரித்தனமாச் செலவு செய்யாம உபயோகமாச் செலவு செய்து நல்லா மகிழ்ச்சியா சந்தோசமா இருந்தாச் சரி... எல்லோரும் கஸ்டப்பட வேண்டும் என்றில்லைத்தானே... புலகத்தில் உள்ளவர்கள் கஸ்டப்பட்டாலும் அங்குள்ள அவர்களின் உறவுகள் நிம்மதியா சந்தோசமா மகிழ்ச்சியா இருக்குதுகள் என்று எண்ணும் போதே ஒரு சந்தோசம் வரும் தானே... அதுபோதும் இங்குள்ளவர்கள் தங்கள் வருத்தம் நீங்கி உற்சாகம் பெற....! மனம் மகிழத்திருக்கத்தானே சாதாரண மனிதம் உழைக்கின்றான் வாழ்கின்றான்... அதை ஏன் மற்றவர்கள் பெரிதாக்கி உங்கட மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்.... வேண்டும் என்றால் மகிழ்ச்சியை வளமாகப் பெற வழிக்காட்டுங்கள்... அது உபயோகமாக இருக்கும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 10-17-2004 [quote=kuruvikal]ஊதாரித்தனமாச் செலவு செய்யாம உபயோகமாச் செலவு செய்து நல்லா மகிழ்ச்சியா சந்தோசமா இருந்தாச் சரி... எல்லோரும் கஸ்டப்பட வேண்டும் என்றில்லைத்தானே... புலகத்தில் உள்ளவர்கள் கஸ்டப்பட்டாலும் அங்குள்ள அவர்களின் உறவுகள் நிம்மதியா சந்தோசமா மகிழ்ச்சியா இருக்குதுகள் என்று எண்ணும் போதே ஒரு சந்தோசம் வரும் தானே... <b>குருவிகள் அண்ணா நன்றாக சிந்திக்கிறீர்கள்.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-17-2004 இக்கருத்தொன்றும் குருவிகளின் சிந்தனையல்ல... ஊரில உலகத்தில நடக்கிற நடைமுறை... அவதானித்தத சொன்னதுதான் குருவிகள் வேலை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|