Yarl Forum
மறம் விளைந்த மண்ணில்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மறம் விளைந்த மண்ணில்... (/showthread.php?tid=6597)



மறம் விளைந்த மண்ணில்... - kuruvikal - 10-17-2004

<img src='http://www.tamilnet.com/img/publish/2003/10/p22_17792_435.jpg' border='0' alt='user posted image'>

<b>கடத்தி வந்த நபரைக் கண்டதுண்டமாக வெட்டி
பரலுக்குள் போட்டு எரித்தார் இராணுவ மேஜர்
மன்னாரில் நடந்த கொடூர சம்பவம் அம்பலமாகிறது </b>

அனுராதபுரத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்தி வந்து, அவரை மயக்கமுறச் செய்து, உடலைக் கண்டதுண்டமாக வெட்டி தீக்கிரையாக்கியிருக்கிறார் ஓர் இராணுவ மேஜர்.

மன்னாரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

உயிலங்குளத்தில் உள்ள பிரஸ்தாப இராணுவ மேஜரின் தங்குமிடத்தில் இருந்து ஆயுதங்கள் பல மீட்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரிவிக் கப்படுவதாவது:-

கண்டி, வத்தேகமவில் இடம்பெற்ற வாகனக் கடத்தல் சம்பவம் தொடர்பாக மன்னார் உயி லங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த மேஜர் டபிள்யூ.ஏ.அனுருத்த சம்பிக்க என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். தெல்தெனிய நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட இவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த இராணுவ மேஜர் தொடர்பாக இராணுவப் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
உயிலங்குளம் இராணுவ முகாமில் உள்ள அவரது அறையைச் சோதனை செய்த இராணுவப் பொலீஸார், அங்கு இரத்தக்கறைகளையும் சவரக்கத்தி போன்ற ஆயுதங்களையும் கண்டுபிடித்தனர்.

சந்தேகம் கொண்ட இராணுவப் பொலீஸார் அந்த மேஜரின் உதவியாளரான கோப்ரல் குமாரதிலக என்பவரை விசாரணைக்குட்படுத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி அனு ராதபுரத்தில் வைத்து கார் ஒன்றுடன் காமினி லலித்(வயது40) என்ற 2 பிள்ளைகளின் தந்தையை பிரஸ்தாப மேஜர் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

கடத்தி வந்த நபரை தமது அறையில் தங்கவைத்து அவருக்கு நித்திரைக் குளிகைகளைக் கொடுத்து மயக்கமடையச் செய்தபின் அவரை துண்டுதுண்டாக வெட்டினார் என்று கூறப்படுகிறது. பின்னர் உடல் பாகங்களை ஒரு பரலுக்குள் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். எஞ்சிய எலும்புகளைக் குழி ஒன்றுக்குள் போட்டு மூடிவிட்டார்.

*********************************************************

<b>பூநகரியில் வயல் உழுதபோது
மனித எலும்புக்கூடுகள் மீட்பு...! </b>

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி, ஞானிமடம் பகுதியில் நேற்று இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெரும்போக நெல்விதைப்புக்காக அங்குள்ள வயல் ஒன்றை உழுதபோது இந்த எலும்புக்கூடுகள் வெளியே வந்தன. அவற்றின் மண்டை ஓடுகள் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டன. இவற்றுடன் சிதைந்த நிலையில் தலைக்கவசம் போன்ற ஒரு பொருளும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1991ஆம் ஆண்டு வலம்புரி நடவடிக்கையின் மூலம் இப்பகுதியைக் கைப்பற்றிய படையினர் அப்பகுதியில் பாரிய மண் அணைகளை ஏற்படுத்தி அதில் காவல் அரண்களையும் நிறுவி இருந்தனர். நேற்று அவ்விடத்தில் வயலை உழுதபோதே எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த 11ஆம் திகதி பூநகரி வில்லடிப் பகுதியில் வயல் ஒன்றை உழுதபோது அங்கும் ஒரு மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது.

செய்திகள் : உதயன்


*************************************************************

<b>மண்தோண்டி மருதம் வளர்த்து
மடி நிரப்பி மகிழ்ந்த மண்ணில்
மண்டை ஓட்டுக் குழிகள்...!
"மகிந்த" வழி வந்த மங்கிகள்
மலிந்த விலையில் ஆயுதம் வாங்கி
மறத்தமிழன் மண் கைப்பற்றி
மானத்தமிழன் மண்டை கொய்யுதுகள்
மானம் கெட்ட தமிழனோ
மடி நிரப்ப
மண்ணின் மகிமை மறந்து
மறம் தொலைத்து
மானம் ஏலம் விட்டு
மறைந்திருந்து காட்டிக் கொடுத்து
மந்திகளுடன் மாக்களாய்....!
மறம் விளைந்த மண்ணில்
மணிக்குமணி அநியாயங்கள் பெருகுது
மாநிலம் போற்றிய மண்
மகிமை மங்கி கொலைக்களமாய்...!
மண்ணின் மைந்தரோ
மலிவான வேலை தேடி மேற்குலகில்
மலிவான பிரஜைகளாய்...!
மறக்காமல் "நான் தமிழன்" பொங்கு தமிழில்
மார் தட்டலுக்கு குறைவில்லை
மண்டை கழன்றதுகளுக்கு தான்
மண்ணில்லா அநாதை என்பது
மனதில் இல்லவே இல்லை....!
மானம் தொலைத்தோரே
மண்றாடிக் கேட்கிறேன் நில்லும் ஒரு கணம்
மாதா உம்மை உருவாக்கிய
மண்ணின் நிலை எண்ணும்
விடுமுறைக்குச் செல்ல விடுதிக்காகவல்ல
வீரமண் விடுதலை பெற்று வாழ்ந்திட
வினைத்திறனாய் ஏதாச்சும் செய்திடும்...!</b>

நன்றி... http://kuruvikal.yarl.net/


- tamilini - 10-17-2004

Quote:மண்தோண்டி மருதம் வளர்த்து
மடி நிரப்பி மகிழ்ந்த மண்ணில்

மண்ணின் மகிமையை
மனதில் கொண்டு...
மண்ணில் மாந்தர்..
மாக்களாய் மாறி..
செய்திடும் சேட்டைகள் கண்டு
வடித்த கவி நன்று...
தொடந்திட வாழ்த்துக்கள்....!


- hari - 10-17-2004

Quote:மண்ணின் மகிமை மறந்து
மறம் தொலைத்து
மானம் ஏலம் விட்டு
மறைந்திருந்து காட்டிக் கொடுத்து
மந்திகளுடன் மாக்களாய்....!
வாழ்த்துக்கள்


- kavithan - 10-17-2004

ம்ம்....வாழ்த்துக்கள் கவிதைக்கு


- phozhil - 10-19-2004

மலர் நேசிக்கும் மனிதம்;
மண் நேசிக்கும் மறம்;
மொழி நேசிக்கும் தமிழம்:

புரட்சிப் பாவலோய் !
தமிழினம் ஏற்றம் பெற்றிட ,பெற்றியும் வெற்றியும் அணியாகிட காற்றில் கலக்கட்டும் இக்கீதம்.