![]() |
|
போராடும் பூமிக்கெல்லாம் பாலஸ்தீனம் ஒரு பாடம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: போராடும் பூமிக்கெல்லாம் பாலஸ்தீனம் ஒரு பாடம் (/showthread.php?tid=6378) |
போராடும் பூமிக்கெல்லாம் பாலஸ்தீனம் ஒரு பாடம் - shanmuhi - 11-20-2004 <b>போராடும் பூமிக்கெல்லாம் பாலஸ்தீனம் ஒரு பாடம். - சாந்தி ரமேஷ் வவுனியன் -</b> போர் வடுதாங்கிய பூமியின் பொற்காலம் பிறப்பதற்காய் போராளியானவரே ! உரிமைக்குப் போராடும் உலக இனத்துக்கெல்லாம் இலக்கணம் வகுத்த பெருமானே ! சாவுகளின் மத்தியில் நின்று சரித்திரம் எழுதவந்த சத்தியனே ! காவிகளின் ஆவிகளின் மூச்சுன் நாசிதொடமுன்னர் - உன் மூச்சே பாலஸ்தீன விடுதலைதான். சமாதான து}தர்களின் சாணக்கியம் சபையேற - நீ போர் தந்தோர் வாசலெங்கும் போய் வந்து கைலாகு கொடுத்து பாலஸ்தீனர் விடுதலையில் பாசமுடன்தானே பாரெங்கும் போய் வந்தாய். 'சமாதானம்" அழிபடுவோர் தெருவிறங்கி ஆழ்வோர் வாயுரைக்கும் உக்கிப்போன வார்த்தையிந்தச் சமாதானம். உலகில் விடுதலைக்காய் ஏங்குவோரின் உறுதிமொழி போராட்டம். இது புரியா நிலையில்லை..... புரியாத மாதிரியாய்.... சுயநலங்கள் செய்த வினை..... போராடும் பூமியெல்லாம் ஈடாடும் படியாய்த்தான் இவர்கள் வருகை..... புரிந்தோர் மட்டும் புத்தியுடன் தப்பிவிட இல்லாது இழுபடுவோர் நிலை இப்படித்தான். பரிசு தந்து கௌரவித்து - உம் போராடும் பலத்தையெல்லாம் பலியெடுத்தார் வெற்றிபெற.... போய்விட்டீர் ஐய , உம் பயணம் முடிவாகி..... போராடும் இனமாக பாலஸ்தீனர் இன்னும் விடுதலையே இல்லாமல்..... யாருந்தன் வழிநின்று போர் முடித்து விடுதலையின் பொருளுணர்த்தி பாலஸ்தீனரை மீட்கப் புதிதாய் எழுவாரோ ? புரியா விடையாக.....உம் பூமி..... சதிகாரர் வலைதன்னில் செத்துப் போய்.... விடியலில்லா இனமாக வல்லவர்கள் வருகைகளில் விடுதலையின் கனவு காணும் போராடும் பூமிக்கெல்லாம் பாலஸ்தீனம் ஒரு பாடம். 17.11.04 - kavithan - 11-21-2004 கவிதைக்கு நன்றி பல நாட்களுக்கு பின் சாந்தி அக்காவின் கவிதை கண்டது மகிழ்ச்சி. அதனை இங்கு வழங்கிய சண்முகி அக்காவுக்கு நன்றிகள் Re: போராடும் பூமிக்கெல்லாம் பாலஸ்தீனம் ஒரு பாடம் - kuruvikal - 11-21-2004 இதையே கருத்தா இங்க எங்கையோ எழுத சனம் குய்யோமுறையோ எண்டு வந்திட்டுதுகள்.... கவனம்...! :wink: நல்ல அரசியல் கருத்துச் சொல்லும் கவிதை....! வாசிக்கத் தந்ததற்கு நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-21-2004 தவறான கருத்து இடப்பட்டுவிட்டது...! தவறுக்கு வருந்துகின்றோம்...! - tamilini - 11-21-2004 நன்றிகள் அக்கா... ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 11-21-2004 நன்றிகள் அக்கா |