Yarl Forum
dvd இல் நல்ல தரம் கிடைக்குமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26)
+--- Thread: dvd இல் நல்ல தரம் கிடைக்குமா? (/showthread.php?tid=6377)



dvd இல் நல்ல தரம் கிடைக்குமா? - sayanthan - 11-21-2004

வணக்கம். என்னுடைய டிஜிற்றல் கமெராவிலிருந்து வீடியோவினை கணணிக்குள் கொண்டு வரவேண்டுமென்ற ரொம்ப நாள் ஆசையை இன்று நிறைவேற்றினேன். i-ling ஊடாக கணணிக்குள் ஏற்றிய வீடியோ கணணியில் மிகச் சிறந்த தரத்தில் avi format இல் கணணியில் அது இருக்கிறது. இப்போது அதனை cd இல் வெளி கொண்டு வர வேண்டும். என்னிடம் dvd writter கிடையாது. சாதாரணமாக vcd இல் கொண்டு வந்தேன். தரமிழந்து வந்தது அது. கணணிக்குள் சேமித்த தரம் அதில் இல்லை.

dvd writter ஒன்றை காசு கொடுத்து வாங்கி அதனை dvd ஆக்கினால் நல்ல தரம் வருமா? வராதென்றால் சொல்லுங்கப்பா.. வாங்காமல் விடுவதற்கு!

vcd இல் பெட்டி பெட்டியாக வருகிறது..


- Ilango - 11-21-2004

சாதாரண cd யிலும் dvd video வை பதியலாம். ஆனால் வெறும் 15 நிடமிடங்களுக்கே இதனை பதியலாம். இதற்கு mpeg2 வை பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் svcd தரத்தில் பதிவு செய்தால் தரமான vcd யையும் பெறமுடியும்.


நீண்ட நேர video வை dvd தரத்திற்கு மாற்ற வேண்டுமெனில் dvd writer வாங்குவது நல்லது.


- kavithan - 11-21-2004

Quote:சாதாரண cd யிலும் dvd video வை பதியலாம். ஆனால் வெறும் 15 நிடமிடங்களுக்கே இதனை பதியலாம். இதற்கு mpeg2 வை பயன்படுத்த வேண்டும்.


இளங்கோ அண்ணா இதனை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க DVD றைற்ரர் இருக்கு ஆனால் சாதாரண CD இல் கொப்பி பண்ணலாம் என்றது தெரியாதுகொஞ்சம் சொல்லுங்கள்


- Ilango - 11-21-2004

dvd writer இருந்தால் ஏன் சாதாரண cd யில் பதிகிறீர்கள்?

cd writer இல் தான் dvd யை எரிக்க முடியாது. ஆனால் dvd writer இல் cd, dvd இரண்டு disc களும் எதுவித பிரச்சினை இல்லாமலும் எழுதமுடியும். உங்கள் பிரச்சினை எது?


- kavithan - 11-22-2004

Quote:சாதாரண cd யிலும் dvd video வை பதியலாம். ஆனால் வெறும் 15 நிடமிடங்களுக்கே


இப்படி வீடியோவை சாதாரண CD றைற்ரறர் மூலம் சாதாரணCD இல் பதியும்போது என்னவாக வரும். அது svcd / VCD/ ஆகவோ தானே வரும். அல்லது அது DVD தரத்துடன் வருமா..... அதனை DVD/VCD பிளேயர் எல்லாம் பிளே பண்ணுமா என்பது தான் எனக்கு விளங்கவில்லை.


- sayanthan - 11-22-2004

svcd இல் பதிவு செய்தால் dvd player இல் பாா்க்கலாமா? கிட்டத்தட்ட 15 நிமிட avi file capture பண்ணினேன். 2GB இடத்தை அது கணணியில் பிடித்தது. இதுக்கு என்ன காரணம்?

சாதாரண window movie maker இல் தான் capture பண்ணினேன்.

mpeg1 mpeg 2 avi DV இவை பற்றி சொல்ல முடியுமா? அச்சு அசல் பளிங்கு மாதிாி dvd தயாாிக்க எந்த format இல் சேமிக்க வேண்டும்.


- Ilango - 11-23-2004

இருவரின் கேள்விகளுக்கும் ஆழமாக விளக்கமாக எழுத வேண்டும் இப்போது நேரமில்லை மிகவிரைவில் பதில் எழுத முயற்சிக்கிறேன்.

ஆனாலும் சுருக்கமாக

கவிதன் cd dvd எல்லாம் தகவலைச்சேமிக்கும் தட்டுக்களே இதில் எந்தவிதத்தகவலையும் சேமிக்கலாம். cd யில் dvd(mpeg2) படத்தையும்
dvd யில் vcd(mpeg1) படத்தையும் சேமிக்கலாம்.

ஆனால் இங்குள்ள பிரச்சினை வாசிப்பது மட்டுமே அனேகமான <b>dvd player</b> களில் இரண்டு வகை disc களையும் வாசிக்கும். ஆனாலும் சிலவகை cd யில் எழுதிய mpeg2 வாசிக்காது.

<b>vcd player</b> இல் cdயில் எழுதிய dvdதர(mpeg2) படத்தை வாசிக்காது. <b>vcd player </b>க்கு இந்த வகை படத்தைத்தெரியாது

அதே போல் dvd யில் எழுதிய vcd(mpeg1) படத்தை வாசிக்காது.<b>vcd player</b> க்கு இந்த வகை disc ஐ தெரியாது
இந்தப்பிரச்சினை தனியே vcd player மட்டுமே கணணியில் இந்தப்பிரச்சினையில்லை.


- vasisutha - 11-23-2004

sayanthan Wrote:svcd இல் பதிவு செய்தால் dvd player இல் பாா்க்கலாமா? கிட்டத்தட்ட 15 நிமிட avi file capture பண்ணினேன். 2GB இடத்தை அது கணணியில் பிடித்தது. இதுக்கு என்ன காரணம்?

சாதாரண window movie maker இல் தான் capture பண்ணினேன்.

mpeg1 mpeg 2 avi DV இவை பற்றி சொல்ல முடியுமா? அச்சு அசல் பளிங்கு மாதிாி dvd தயாாிக்க எந்த format இல் சேமிக்க வேண்டும்.

சயந்தன் உங்களுக்கு இந்த தகவல் உதவுமா என்று பாருங்கள்.

http://www.dinamalar.com/2004nov19compumalar/index.asp


- sayanthan - 11-23-2004

நன்றி வசி.. யாழ்..வீடியோவைச் சேமிக்கும் போது avi file ஆக சேமிப்பதனால் அது என் கணணியின் அதி கூடிய இடத்தை பிடித்துக் கொள்கிறதே.. இதனை எப்படி தீா்க்கலாம்? capture பண்ணும் போதே mpeg 2 வடிவில் சேமிக்கலாமா? cd இல் data ஆக பதிவதற்கும் vcd format .dat file ஆக பதிவதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா?


- sinnappu - 11-28-2004

மெதுவாக ஆனால் உறுதியாக சொல்லுறன் அப்பு பெரிய harddisk ஆ வாங்கிப்போடு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- குத்தூசி - 12-03-2004

Mpeg மிகவும் குறைந்த இடத்தை பிடிக்கும் ஒரு Format AVI format அதிகஇடத்தை பிடிக்கும் நீங்கள் ஒரு நிமிட வீடியோ படத்தை பதிவுசெய்ய 200 MB இடத்தைபிடிக்கும்.
நீங்கள் உங்களுடைய Cd writer மென்பொருள்மூலம் SVCD or VCD
யாக பதிவுசெய்து வைத்திருப்பது நல்லது.


Re: dvd இல் நல்ல தரம் கிடைக்குமா? - ragavaa - 01-18-2005

sayanthan Wrote:கணணிக்குள் ஏற்றிய வீடியோ கணணியில் மிகச் சிறந்த தரத்தில் avi format இல் கணணியில் அது இருக்கிறது. இப்போது அதனை cd இல் வெளி கொண்டு வர வேண்டும். என்னிடம் dvd writter கிடையாது. சாதாரணமாக vcd இல் கொண்டு வந்தேன். தரமிழந்து வந்தது அது. கணணிக்குள் சேமித்த தரம் அதில் இல்லை.

dvd writter ஒன்றை காசு கொடுத்து வாங்கி அதனை dvd ஆக்கினால் நல்ல தரம் வருமா? வராதென்றால் சொல்லுங்கப்பா.. வாங்காமல் விடுவதற்கு!

vcd இல் பெட்டி பெட்டியாக வருகிறது..


கணணியில் ஏற்றிய தரத்தில் வீடியோ vcd இல் வேண்டும் என்றால் இங்கு குறிப்பிடவும்.(பழைய விடையம் என்பதால் கூறவில்லை)


Re: dvd இல் நல்ல தரம் கிடைக்குமா? - manimaran - 01-19-2005

ragavaa Wrote:கணணியில் ஏற்றிய தரத்தில் வீடியோ vcd இல் வேண்டும் என்றால் இங்கு குறிப்பிடவும்.(பழைய விடையம் என்பதால் கூறவில்லை)

ஆம் இராகவா அதனை குறிப்பிட்டீர்களானால் உதவிகரமாயிருக்கும். அத்துடன் DVDல் எழுதக்கூடியவாறு எப்படி தரமான ஒளிப்படங்களை camcorderல் இருந்து மாற்றியமைக்கலாம் என்பதனையும் முடிந்தால் கூறவும்.


- ragavaa - 01-20-2005

கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்றும் முறைக்கு

http://www.yarl.com/forum/viewtopic.php?p=55365#55365