![]() |
|
உயிர் கொடுக்கும் வீரர்களும் உயிர் காக்க மறுப்போரும்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: உயிர் கொடுக்கும் வீரர்களும் உயிர் காக்க மறுப்போரும்...! (/showthread.php?tid=6357) |
உயிர் கொடுக்கும் வீரர்களும் உயிர் காக்க மறுப்போரும்...! - kuruvikal - 11-23-2004 [b]யாழ். மருத்துவ பட்டதாரிகள் வடக்கு கிழக்கில் பணியாற்ற பின்னடிப்பு யாழ். பல்கலைக்ழகத்திலிருந்து வெளியேறும் மருத்துவ பட்டதாரிகள் வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்ற பின்னடிப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.குமாரவேற்பிள்ளை கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு புது முகத்துவாரத்தில் மத்திய மருந்தகமொன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர், மக்களின் தேவைக்கேற்ப வைத்திய சேவைகள் விஸ்தரிக்கப்பட்டாலும் பணியாற்றுவதற்கு வைத்தியர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து வருடமொன்றிற்கு 100 பேர் வெளியேறுகின்றார்கள். குறைந்த வெட்டுப்புள்ளி மாவட்ட ரீதியான சலுகை ஆகியவற்றின் மூலம் இந்த அனுமதியைப் பெறும் மாணவர்கள் வைத்தியர்கள் ஆன பின்பு வருமானத்தையே இலக்கு வைத்து செயல்படுகின்றார்கள். கடந்த 30 வருட காலமாக பணம் சம்பாதிப்பதே இந்த வைத்தியர்களின் இலக்காக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார். ---------------------------- இச்செய்தி உங்களின் விசேட பார்வைக்காவும் கருத்துக்காகவும் புதினத்தில் இருந்து எடுத்து வைக்கப்படுகிறது...! - tamilini - 11-23-2004 பரிச்சுத்தமான சேவை இவர்கள் இப்படி சுயநலமாய் இருந்தால் எப்படி.. இவர்களைப்போன்றவர்கள் தானே உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|