Yarl Forum
இரசாயன விஞ்ஞானம் - உலகின் மிகச் சிறிய பரிசோதனைக் குழாய் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: இரசாயன விஞ்ஞானம் - உலகின் மிகச் சிறிய பரிசோதனைக் குழாய் (/showthread.php?tid=6348)



இரசாயன விஞ்ஞானம் - உலகின் மிகச் சிறிய பரிசோதனைக் குழாய் - kuruvikal - 11-24-2004

<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/04/sci_nat_enl_1101213564/img/laun.jpg' border='0' alt='user posted image'>

பச்சையாக இருப்பது பரிசோதனைக் குழாய் உள்ளே இருப்பது தாக்கமுறும் மூலக் கூறுகள்...! இதைப் பார்வையிட இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron microscope) அவசியம்...!

பென்சில் கரியின் (graphite) ஒரு அணு பருமனுடைய படைகளைக் (sheets) கொண்டு உருவாக்கப்பட்ட காபன் பிறதிருப்பமான நனோ ரியூப்கள் கொண்டு ஆக்கப்பட்ட மிக நுண்ணிய இரசாயனக் குழாய்களில் நிகழத்தப்பட்ட இரசாயனத் தாக்கத்தின் வாயிலாக கிளை கொண்ட நீண்ட மூலக்கூறுகளுக்குப் பதில் நீண்ட சங்கிலி அமைப்பான மூலக்கூறுகளை உருவாக்கி பிரித்தானிய ஒக்ஸ்பேட் மற்றும் நொட்டின்காம் பல்கலைக்கழக இரசாயன ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்...!

இத் தொழில்நுட்பத்தை எதிர்காலத்தில் தொழில்துறையில் புகுத்தி குறைந்த செலவில் பயன்மிக்க இரசாயன விளைவுகளை (polymers) பெறமுடியும் என்று கருத்துக் கூறப்பட்டுள்ளது...!

இந்த பரிசோதனைக் குழாயின் (test tube) பருமன் என்ன தெரியுமா...

உள்விட்டம் (inner diameter) 1.2 X 10^-9 m (nano) ரும் நீளம் (length) ( 2 x 10^-6 m (micro) ரும் ஆகும்...!

கனவளவு (volume) கிட்டத்தட்ட 2 ஜிப்ரோ லீற்றர்கள் (zeptolitres) ... பாவனையில் உள்ள கனவளவுக்கான இரண்டாவது சிறிய அலகு...!

For more details

<span style='font-size:16pt;line-height:100%'>This is an exclusive post in tamil for yarl forum...!
Source bbc.com</span>


- tamilini - 11-24-2004

நன்றிகள் உங்களது.. தகவலுக்கு...!


- hari - 11-25-2004

நன்றிகள் உங்கள் விஞ்ஞான தகவுலுக்கு உங்கள் சேவை தொடருட்டும், எப்படி ஏவுகனை தயாரித்தல் என்ற தகவல் இருந்தால் சொல்லவும், என் அரண்மனையை நவீன மயப்படுத்த வேண்டும், எத்தனை நாளுக்கு தான் வாளும் குதிரையுமாக காவல் நிக்கிறது. அந்த குட்டிப்பயலையும் கொஞ்ச நாளாக காணவில்லை, என்னைத்தை செய்து துளைக்கப்போறானோ??! :roll:


- kuruvikal - 11-25-2004

நாங்கள் எவுகணைத் தயாரிப்புப் பற்றி எழுத சர்வதேச பயங்கரவாதிகள் இணையத்தளத்தினூடு ஏவுகணை தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள் என்று நாளை சி ஐ ஏ அறிவிக்காதா....???! இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஏன் வீண் வம்பென்றுதான் உந்த இராணுவ சமாச்சாரங்களில் கை வைக்கிறதில்ல... வாசிக்கிறதோட சரி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->