![]() |
|
போதனை வேண்டாம்! புதிய ரிபிசி(பிபிசியாம்) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: போதனை வேண்டாம்! புதிய ரிபிசி(பிபிசியாம்) (/showthread.php?tid=63) |
போதனை வேண்டாம்! புதிய ரிபிசி(பிபிசியாம்) - வினித் - 04-26-2006 [b]போதனை வேண்டாம் திருமலை மாவட்டம் கோமரங்கடவலையில் ஆறு சிங்கள விவசாயிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் குற்றம் சாட்டியுள் ;ளார். அவர் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப்புலி களே இப்படுகொலைகளைப் புரிந்தனர் எனத் தெரிவித்துள்ளார். இதில் உள்ள வினோதம் என்னவெனில் இக்கொலைகள் குறித்து அவர் முதலில் தெரிவிக்கும் போது இத்தகைய சம்பவம் இடம் பெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்து உறுதி செய்யப்பட்டு மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதாவது அப்பேட்டி வழங்கப்படும் போது இக்கொலைகள் குறித்த தகவலை அவரால் முழுமையாக ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை. ஆனால் இக்கொலைகளை விடுதலைப் புலிகளே செய்தார்கள் எனக் கூறுவதில் அவர் எந்தவித தயக்கமும் காட்டவில்லை. ஏனெனில் அது அவர்களின் வழக்கமானதொன்றாகி விட்டது. அதாவது சிங்களவர்களோ சிங்கள இராணுவத்தினரோ தாக்கப்பட்டால் அன்றி கொல்லப்பட்டால் அதற்கு விடுதலைப் புலிகளே காரணம் எனக்குற்றம் சாட்டுவது மரபாகிவிட்ட தொன்று. இத்தனைக்கும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டாலோ, அன்றி விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி ஆயினும் சரி, இராணுவ உயர் பாதுகாப்பு வலயம் ஆயினும் சரி சிறிலங்கா இராணுவத்தரப்பால் கண்டறியப்பட முடியாதவொரு விடயமாகவே அது இருந்து வருகின்றது. குறிப்பாகச் சுட்டிக்காட்டுவதானால் மட்டக்களப்பில் உயர்பாதுகாப்புப் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினரான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதோ திருமலை நகரில் திருமலை மாவட்ட மக்கள்; பேரவைத்தலைவர் மாமனிதர் வ.விக்கினேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதோ திருமலை நகரில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையோ சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்கு புரியாததொன்றாகவே போய்விட்டது. அதாவது சிறிலங்கா ஆயுதப்படையினர் மீதோ சிங்களவர்கள் மீதோ தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதனை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று உறுதிபடக்கூறும் இராணுவப் பேச்சாளரால் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை ஊகிக்கத் தானும் முடியாது போவதுதான் அதிசயமானது. தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கேட்டதும் அவர்கள் மூளை உறைநிலையைக் கடந்து விடுவது ஆச்சரியத்திற்குரியது. இதனை ஒத்ததாகவே இதனைப் பிரச்சாரப்படுத்தும் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும் உள்ளன. ஆனால் இது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஏனெனில் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் சிங்கள மக்களையே ஏமாற்றுவதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கையில் தமிழர்களை ஏமாற்றவும்- சர்வதேசத்தை ஏமாற்றவும் முற்படுவது ஒன்றும் எதிர்பார்க்க முடியாததல்ல. ஆனால் தம்மை நடுநிலைமையான ஊடகங்கள் எனவும் தாம் அரச கட்டுப்பாட்டில் இல்லாத ஊடகங்கள் இவ் ஊடகங்கள் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும் போதோ அன்றி அவர்கள் மீது காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்படும் போதோ அதை அடக்கி வாசிக்கும் அன்றி அவற்றைத் திசை திருப்பி விடமுற்படும் அதேவேளை சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது எந்த விதத்தயக்கமும் இன்றித் தமிழ்த்தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விடுகின்றன. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஒரு சில தமிழர்களை நாடும் இந்நிறுவனங்கள் தமிழ்மக்கள் பாதிப்புறும் போது தமிழர்களை நாடாததுதான் அவர்களின் பக்கச்சார்பின்மையாகவுள்ளது. இவ் ஊடகங்களுக்கும் நோக்கங்கள் இருக்கலாம். தமது அரசுகளின் நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்கலாம். ஆகையினால் அவை மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் பற்றி நாம் விமர்சனம் செய்ய முன்வரவில்லை. ஆனால் தம்மை நடுநிலையான பக்கச்சார்பற்ற ஊடகங்கள் என அவை கூறிக்கொள்ள விளைவதையும் அதனைப்போதிக்க முற்படும் பக்கச்சார்பின்மை குறித்துமே நாம் இங்கு விமர்சிக்க முற்பட்டுள்ளோம். அதாவது இத்தகைய ஊடகங்களுக்கு பக்கச்சார்பின்மை குறித்தோ நடுநிலைமை குறித்தோ பேசுவதற்கு அருகதை இல்லை என்றே கூறுகின்றோம். நன்றி: ஈழநாதம் புதிய ரிபிசி(லண்டன் பிபிசியாம்) - கந்தப்பு - 04-26-2006 பி.பிஸி தமிழோசையில் உள்ள தமிழ் விரோதிகளான தமிழகப் பாப்பானர்கள் இந்தியா றோவின் உதவியுடன் செயற்படுகிறார்கள் ஈழத்துச் செய்திகளுக்கு ஈழத்தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் - vasanthan - 04-26-2006 இலங்கை தொடர்பான பேட்டியெனில் டிபிஎஸ் ஜெயராஜ் தவிர பிபிஸி ஏனையவர்களை பேட்டியெடுப்பது அரிதாகவேயிருக்கின்றது. ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆய்வாளர்கள் இல்லையா? :roll: - கந்தப்பு - 04-27-2006 டி.பி ஸ். ஜெயராஜா தானே எழும்புத்துண்டுக்கு சொந்த மக்களினைக் காட்டிக் கொடுப்பவர். அதுதான் பி.பிஸியும் சந்தோசத்துடன் பேட்டி எடுக்கிறது - alika - 04-30-2006 இந்த BBC கொழும்பு செய்தியாளர்களான. எதிராஜனும், துமித்தா லுத்ரா வும் சிங்கள இனவாதிகள் சொல்வதை அங்கீகரிப்பதுபோல் செய்திகளை குறிப்பிடுவாங்க. ஆனால், புலிகள் எதையாவது நிராகரித்து கூறினால், "but nobody here belives them" அல்லாட்டிக்கு "the hallmark of LTTE" என்று பக்கத்திலே போடுவாங்க. சாதாரண, என்ன, எல்லா வாசகர்களையும் பிழையாக விளங்கிக் கொள்ள வைத்துவிடுவார்கள். நாங்க எல்லாரும் இந்த BBC க்கு இப்படியான செய்திகளுக்கெதிராக மின்னஞ்சல்கள் அனுப்பி எமது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும். இங்கே உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். http://news.bbc.co.uk/newswatch/ukfs/hi/ne...900/3993909.stm |