Yarl Forum
உரிந்துபோன உரிமைகள் !! -- தொ. சூசைமிக்கேல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உரிந்துபோன உரிமைகள் !! -- தொ. சூசைமிக்கேல் (/showthread.php?tid=6258)



உரிந்துபோன உரிமைகள் !! -- தொ. சூசைமிக்கேல் - hari - 12-07-2004

[size=16]உரிந்துபோன உரிமைகள் !!

-- தொ. சூசைமிக்கேல்
<img src='http://www.c-r.org/accord/sri/accord4/images/refugees.gif' border='0' alt='user posted image'>
[size=14]
மானிடனாய் வாழுதற்கு ஞாலமதில் உரிமை!
மறத்தமிழன் ஆளுதற்கு ஈழமதில் உரிமை!
ஊனுயிரைப் பேணுதற்கு யாவருக்கும் உரிமை
உள்ளதடா, செந்தமிழா! உணர்வாய், உன் உரிமை!

ஊனென்றும் உயிரென்றும் உள்ளது நம் மண்ணே!
உலகிலெவன் அதைப்பறிக்க வருவான், நம் முன்னே?
ஏனென்று கேட்காமல் இருப்பவனோ கோழை:
ஈழமதன் உரிமைக்காய் ஏந்திடடா, வாளை!

உரித்தான பொருட்களுக்கே உரிமையெனும் நாமம்:
உரிந்துவிட்டால் மானமிகு மனிதனுக்கோ நாணம்!
மரித்தாலும் மறித்தாலும் உரிமைகளின் நியாயம்
மறுபடியும் மறுபடியும் மலையளவு பாயும்!...

தங்கையரும் தமக்கையரும் தந்தையரும் தாயும்
தன்னிறைவாய் நடம்புரிந்த நாடெங்கள் உரிமை!
பொங்கிவரும் யாழ்நாடன் புலம்பெயராப் பாணன்
போற்றிவந்த பொன்ஈழ நாடெங்கள் உரிமை!

எனதுநிலம் எனதில்லம் எனக்கில்லை என்றால்
என்னபொருள் காண்பாய், ஏ! "உரிமை" எனும் சொல்லே!
கனல்விழியின் அனல்வழியே காட்சிதரும் ஈழம்
கண்டெடுக்கும் நாள்வரைக்கும் "உரிமை" வெறுஞ் சொல்லே!!...

உரிந்துபோன உரிமைகளே, உயிர்த்தெழுங்கள் மீண்டும்!
உதிராத மலர்க்கொத்தாய் உலவுங்கள் யாண்டும்!
எரிந்தபடி யாம்புரியும் உரிமைகளின் வேள்வி,
எத்தனைநாள் என்பதுதான் ஈழமகன் கேள்வி!

முந்தைய கவிதை
என்ன செய்யும் ?...


- tamilini - 12-07-2004

நன்றி கவிதையை இணைத்தமைக்கு..." <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-07-2004

இணைத்தமைக்கு நன்றி
கவிஞாின் பெய÷ அறிமுகமில்லை


- kavithan - 12-07-2004

நன்றி மன்னா அருமையானக இருகிறது... அதனை தட்டச்சு செய்து வழங்கிய உங்களுக்கு எங்கள் நன்றிகள்


- hari - 12-08-2004

KULAKADDAN Wrote:இணைத்தமைக்கு நன்றி
கவிஞாின் பெய÷ அறிமுகமில்லை
அவர் சவுதியில் SOFCON என்ற நிறுவனத்தில் ஓர் அமைச்சுப் பணியாளராய் வேலை செய்து கொண்டிருக்கிறார், தமிழ் மேல் அளவற்ற பற்று உடையவர், தனது ஓய்வு காலத்தில் இந்தியாவில் இருந்து பல எழுச்சிக் கவிதைகள் எழுதவேண்டும் என்பதே அவரின் ஆசை. உங்கள் கருதுக்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ளவிரும்பினால் கீழ் காணும் மின்னஞலுடன் தொடர்பு கொள்ளுங்கள்
tsmina2000@yahoo.com,