Yarl Forum
கணணிகளை மூளையும் இயக்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: கணணிகளை மூளையும் இயக்கும் (/showthread.php?tid=6253)



கணணிகளை மூளையும் இயக்கும் - kuruvikal - 12-08-2004

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40604000/jpg/_40604755_brain_cursor203b.jpg' border='0' alt='user posted image'>

பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்ட கேசர் அசைவுகள்...நீலம் குறிப்பது வேகம் குறைந்த அசைவுகளையும் சிவப்பு குறிப்பது அதிவேக அசைவுகளையும்...!(இமேஸ் பிபிசி.கொம்)

மூளையில் இருந்து எழும் சிந்தனைக்கு ஏற்ப நிகழும் மின்னிரசாயனம் மாற்றங்களின் அடிப்படையில் கணணிகளை இயக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்...!

குரங்குகளின் மூளையுள் சத்திரசிகிச்சை மூலம் பதிக்கப்பட்ட மின்முனைகள் (Electrodes) பெறும் மின் அழுத்த வேறுபாடுகளுக்கு ஏற்ப கணணியில் கேசர்களை (cursor) இயக்க முடிந்ததை அடிப்படையாகக் கொண்டு 64 மின்முனைவுகள் கொண்டமைக்கப்பட விசேட தலைக்கவசத்தை அணிந்த இரண்டு சாதாரண நபர்களினும் இரண்டு பகுதியாக மூளைத் தொழிற்பாடு செயலிழந்தவர்களிலும் இப்பரிசோதனை செய்யப்பட்ட போது அவர்களால் இரு பரிமாமன கேசர் அசைவுகளை துல்லியமாக செய்ய முடிந்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது....! குறிப்பாக பகுதி மூளைத் தொழிற்பாடுழந்தவர்கள் அதிகம் கணணியில் கேசர்களை இயக்கி உள்ளமையானது...எதிர்காலத்தில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு பொருத்தப்படும் வெளி உறுப்புக்களை (கை கால் போன்றவை) இயக்க வசதி செய்ய இவ்வாராய்ச்சி அதிகம் பலனளிக்கும் என்றும் ஆனால் முப்பரிமான அசைவுகள் இன்னும் சாத்தியமாகவில்லை என்றும் தெரிவிக்கிறது அவ்வாய்வறிக்கை....!

இங்கு சிந்தனைக்கு ஏற்ப மூளையில் நிகழும் மின்னிரசாயன மாற்றங்கள் மூலம் பெறப்படும் மின்னிலை மாற்றம் மின்முனைகளால் உணரப்பட்டு நுட்பமான சிக்கல் மிக்க பகுப்பாய்வு (Complex algorithms) மின்சுற்றுக்களால் அவை கணணியை இயக்கும் மின்னலைகளாக மாற்றம் செய்யப்படுவதாக எளிய முறையில் இவ்வாராய்ச்சியின் அடிப்படையை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்...!

மேலதிக தகவலுக்கு...


- hari - 12-08-2004

தகவலுக்கு நன்றி குருவிகளே!


- kavithan - 12-09-2004

நன்றி குருவிகளே


- KULAKADDAN - 12-09-2004

நன்றி