Yarl Forum
தத்துவ முத்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: தத்துவ முத்துக்கள் (/showthread.php?tid=6243)



தத்துவ முத்துக்கள் - aathipan - 12-09-2004

ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.
மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.

நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம். வள்ளலார்



ஆகாரப் பொன்மொழிகள்

* பசித்த பின் புசிக்க வேண்டும்.

* உண்பதை குறைத்து மெல்லுவதை அதிகப்படுத்த

வேண்டும்.

* வாரம் ஒரு முறையாவது உண்ணாவிரதம் மேற்கொண்

டால் குடல்கள் ஓய்வு பெற்று ஆரோக்கியம் பெருகும்.

* சமைக்கப்படாத, ஆனால் விரைவில் ஜீரணிக்ககூடிய

உணவை உட்கொள்ளப்பழகு.

* கோபத்துடன் உண்ணகூடாது.

* வாய் துர்நாற்றம் பழுதடைந்த வயிற்றின் அறிகுறி.

* இரண்டு வேளையே ஒரு நாளைக்கு போதுமான

உணவு. ஆனால் அந்த வேளை தவறாமல் உண்ண

வேண்டும்.

* நிமிர்ந்து, தரையில் அமர்ந்து வாய் பேசாமல்

ஆண்டவனை தியானித்த பின்பே உண்ண வேண்டும்.


- tamilini - 12-09-2004

உங்கள் தத்துவ முத்துகளிற்கு நன்றி.. தொடருங்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->