Yarl Forum
நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது (/showthread.php?tid=6198)



நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது - ஊமை - 12-13-2004

தினேஸ் இராஜரத்தினம் விடுதலை தொடபர்பாக கையெழுத்திட்ட உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்களுக்கும் / வெளிநாட்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேலதிக விபரங்களுக்கு நீங்கள் கையொப்பமிட்ட பகுதிக்கு சென்று பார்வையிடலாம்.

பிற்குறிப்பு: தினேஸ் இராஜரத்தினத்தை விடுவிக்கும் முயற்சிக்கு இறுதிவரை எதிரான கருத்துக்களை வெளியிட்ட நிதர்சனம் இணையம் அந்த தமிழர் விடுதலையான பின் விடுத்தலையான செய்தியைக்கூட வெளியிட விருப்பமிலாது போனதென்ன? ஏன் அவர்களுக்கும் விடுதலை செய்யப்பட்டவருக்கும் ஏதும் தனிப்பட்ட விரோதம் உண்டோ ?

உலகமே இந்த விடுதலையை குறித்து மகிழ்ச்சி கொண்டாடும் போது ஏன் இந்த நிதர்சனம் இணையம் மெளனம் சாதிக்கிறது ?


- Vaanampaadi - 12-13-2004

நிதர்சனத்தின் மெளனம் எந்தவிதத்திலும் எவரையும் பாதிக்காது
நடப்பவைகள் எப்போதுமே நடந்து கொண்டே இருக்கும் அதேபோல் நடகாதவைகளும் எப்போதுமே நடைபெறமாட்டாது
இதையிட்டு ஊமையார் நீர் பயம் கொள்ளத்தேவையில்லை


ஊமை - Nitharsan - 12-13-2004

ஊமை ஒருக்கா உங்கட சகோதர இணையத்திட்டப்போய்ச் சொல்லீட்டு வாங்க ராஜரத்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று அவையள் இப்பவும் அந்த லிங்கப் போட்டிருக்கினம்.
நிதர்சனத்திற்கும் எவரும் தனிப்பட்ட விரோத மில்லை அண்ணா, ஆனால் உங்கள் இணையம் ஆரம்பப்பதற்க்கு ஆலொசனை வழங்கியதே நிதர்சனம் தான் என்பதை மறவாதீங்க செய்தியப் முதல்ல போட்ட பதினத்தின் செய்தியையே நீங்கள் விடலேல்ல பிறகு செய்தி போடா நிதர்சனத்தின் மேல ஏன் பாயிறீங்க...
உங்களுக்கும் நிதர்சனத்திற்கும் ஏதாவது கருத்து முரண்பாடு இருந்தால் அது உங்கள் பிரச்சினை
-நேசமடன் நிதர்சன்-


Re: ஊமை - ஊமை - 12-13-2004

ஊமை ஒருக்கா உங்கட சகோதர இணையத்திட்டப்போய்ச் சொல்லீட்டு வாங்க ராஜரத்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று அவையள் இப்பவும் அந்த லிங்கப் போட்டிருக்கினம்.

நிதர்சன் யார் அப்பு எனது சகோதர இணையம். தயவுசெய்து அதை எனக்கு தெரியப் படுத்திவீர்களா ? தினேஸ் இராஜநத்தினம் ஓர் தமிழன் என்ற வகையில் தான் நாம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தோம். தமிழர்களாகிய நாம் தமிழனுக்காக குரல் கொடுக்கவில்லையென்றால் ஏன் எமக்கு தனிநாடு ?