Yarl Forum
அராபத்தின் மரணம் தரும் படிப்பினை ??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: அராபத்தின் மரணம் தரும் படிப்பினை ??? (/showthread.php?tid=6189)



அராபத்தின் மரணம் தரும் படிப்பினை ??? - Mathan - 12-14-2004

பாலஸ்தீனம்: அராபத்தின் மரணம் தரும் படிப்பினை

உலக மக்களில் பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்ற விடுதலைப் போராட்டங்கள் என்பன உலகில் சிலவே. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகில் ஆயிரக்கணக்கான இடங்களில் அவ்வப்பகுதி மக்கள் தமது விடுதலைக்கான போராட்டங்களை நடத்திவந்தபோதிலும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டமும்தான் உலகில் பரவலான மக்கள் ஆதரவைப் பெற்றவ. இவற்றிற்கு ஆதரவாகத்தான் உலகமெங்கும் பெருமளவில் மக்கள் இயக்கங்கள் நடத்தப்பட்டன.

ஆனால், இவற்றில் இனவெறியின் பிடியிலிருந்து விடுதலையான தென்னாப்பிரிக்கா இன்று கறுப்பர்களால்தான் ஆளப்படுகிறது. அவர்களால் தந்தை என்று போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் காலத்திலேயே இவை நடந்தேறிவிட்டன. ஆனால்.... அராபத்...?!

நாடற்றவர்களாக்கப்பட்ட யூதர்களுக்கு ஒரு நாடு உருவாக்கும் முயற்சியில், உலகெங்கும் பரவியிருந்த யூதர்களின் ஒருங்கிணைந்த திட்டத்தில் உருவாக்கப்பட்டதே இஸ்ரேல். ஆனால், கொடுமை என்னவென்றால், இதன்விளைவாக பாலஸ்தீனத்து மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். தமது தாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய பாலஸ்தீன மக்களுக்கு உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் ஆதரவளித்தன. குறிப்பாக, அரபு நாடுகள் பெருமளவில் நிதியுதவி அளித்தன. பல்வேறு நாடுகளிலும் இவர்களுக்கு ஆயுதப்பயிற்சிகள், ஆயுத உதவிகள் அளிக்கப்பட்டன.

இந்திராகாந்தியின் காலத்திலேயே இந்தியாவில் பாலஸ்தீன விடுதல இயக்கத்திற்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. அராபத்திற்கு விமான வசதிகள்கூட செய்கொடுக்கப்பட்டன. பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பது தனி இயக்கமல்ல; பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் பல்வேறு போராளிகள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பேயாகும். அதற்கும் அராபத்தே தலைமை தாங்கினார்.

இதன்பின்னர் ஒரு கட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளினூடாகச் சிக்கல்களைத் தீர்ப்பது என்ற அடிப்படையில் சர்வதேச நாடுகளின் தலையீட்டின்பேரில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இராணுவரீதியிலான போராட்டத்திற்குத் தலைமைதாங்கிய அராபத்தே இதற்கும் தலைமை தாங்கினார். மிகக் கவனமாகவே அவர் பேச்சுவார்த்தையில் நடந்துகொண்டபோதிலும் சோவியத் ஒன்றியம் என்ற பின்புல சக்தி வீழ்ந்தது பெரும் சிக்கலாக இருந்தது. அதன்பின்னரான பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் அராபத்தின்மீது திணிக்கப்பட்டன என்றே தோன்றுகிறது. பிற போராளி குழுக்கள் இப்பேச்சுவார்த்தையை எதிர்த்தபோதிலும் அமெரிக்க வல்லாண்மை, அதன் கையாளான இஸ்ரேலின் நிலை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அராபத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இக்கட்டத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இராணுவரீதியிலும் பலவீனமடைந்தது. பேச்சுவார்த்தையில் தாம் திட்டமிட்டதைவிட மிகவும் குறைவான பரப்பளவில் பாலஸ்தீன நாட்டை உருவாக்கிக்கொள்ள அராபத் சம்மதிக்கநேர்ந்தது. இதற்கும் ஒப்புக்கொண்ட நிலையில், அதைக்கூட செயல்படுத்த இஸ்ரேல் அனுமதிக்கவில்ல. அமைதி உடன்பாடு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால் பிற பாலஸ்தீன போராளி குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டன. இதையே காரணமாகக் காட்டி இஸ்ரேல் வழக்கம்போல பாலஸ்தீனம் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டதுடன், கடந்த 3 ஆண்டு காலமாக யாசர் அராபத்தை அவரை தலைமையகத்தைவிட்டு வெளியேற இயலாதவாறு முடக்கியது. அவர் நோய்வாய்ப்பட்ட போதிலும்கூட வெளியேற அனுமதிக்கவில்ல. இறுதியாக வேறுவழியின்றி பாரிஸிலுள்ள இராணுவ மருத்துவமனக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே மரணமடைந்துவிட்டார் யாசர் அராபத்.

அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்திய நார்வேயும் சரி, அமெரிக்காவும் சரி, அராபத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசை அளிக்க பரிந்துரைத்த எந்தவொரு நாடும் சரி இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மயிரையும் ஆட்டவில்லை.

விட்டுக்கொடுத்தல்களினால் அராபத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது. பாலஸ்தீன மக்களுக்கு...?

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகியுள்ளது இந்நிகழ்வு. வியட்னாமும்கூட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் தனது படைவலுவைக் குறைக்காமலேயே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது படை பலத்தோடேயே பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. ஆனால், யாசர் அராபத் இத்தகைய நிலையில் இல்லாமல் தனது படைவலுவை இழந்தார். இதுவே எதைக்கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளும் மனநிலைக்கு அவரைத் தள்ளியது.

அப்போதே அரசியல்ரீதியாக அராபத் கொல்லப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

நீண்டகாலமாக போராட்ட களத்தில் நிற்கும் இயக்கங்கள அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நீண்டகாலம் களம் காணவிடாது அமைதியின் பிடிக்குள் வைத்துக்கொண்டால் அவர்களின் போராட்ட மனநிலை "சாந்தப்பட்டுவிடும்" என்பதே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு களம் அமைத்துக்கொடுப்பவர்களின் எண்ணம் என்றால் மிகையில்லை. எந்நிலையிலும் விட்டுக்கொடுக்காது போராடினால் மட்டுமே விடுதலை நிச்சயம் என்பதே பாலஸ்தீனமும், தென்னாப்பிரிக்காவும் வியட்நாமும் தரும் பாடமாகும்.

நன்றி -அசுரன்


Re: அராபத்தின் மரணம் தரும் படிப்பினை ??? - Mathan - 12-14-2004

Quote: <b>நீண்டகாலமாக போராட்ட களத்தில் நிற்கும் இயக்கங்கள அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நீண்டகாலம் களம் காணவிடாது அமைதியின் பிடிக்குள் வைத்துக்கொண்டால் அவர்களின் போராட்ட மனநிலை \"சாந்தப்பட்டுவிடும்\" என்பதே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு களம் அமைத்துக்கொடுப்பவர்களின் எண்ணம் என்றால் மிகையில்லை. எந்நிலையிலும் விட்டுக்கொடுக்காது போராடினால் மட்டுமே விடுதலை நிச்சயம் என்பதே பாலஸ்தீனமும், தென்னாப்பிரிக்காவும் வியட்நாமும் தரும் பாடமாகும்.</b>

ஔஅசுரனின் இந்த கருத்து குறித்து உங்கள் கருத்து என்ன?


- selvanNL - 12-14-2004

´Õ º¢Ä ¾¨Ä¨Á¸¨Ç ¦À¡ÚòÐ... ¾Á¢Æ¢Æò¾¢ø «Ð ¿¨¼ ¦ÀÈ º¡ò¾¢ÂÁ¢ø¨Ä... ¸¡Ã½õ «í§¸ ´Õ «Ãº¡í¸§Á ¿¨¼ ¦ÀüÚ즸¡ñÊÕ츢ÈÐ.. ¸¢Æì̾£§Á¡÷ Á¡¾¢Ã¢ ¿¡Î ¸¢¨¼ò¾ý À¢ÈÌ «ó¾ ¿¡ðÎ «¾¢À÷ Ü颃 Á¡¾¢Ã¢ "±É¢ ¿¡ý ±ôÀÊ þó¾ ¿¡ð¨¼ ÅÆ¢ ¿¼ò¾§À¡¸¢§È§É¡" ±ýÚ.. «É¡ø ¾Á¢Æ¢Æò¾¢ø ¾ü§À¡Ð ÁüÈ ¿¡Î¸¨Ç §À¡ø(þÄí¨¸ þó¾¢Â¡¨Å) ¾Å¢÷òÐ (±¦ÉñÈ¡ø «í§¸ ܼ þñ¨¼ì§¸¡ ¿¡¨Ç째¡ º¡¸ §À¡¸¢Èиû ¾¡§É ¬ðº¢ ¦ºöÔиû) ±ôÀÊ ÁüÈ «Ãº¡í¸û þÂí̸¢ýÈɧš (¸¼üÀ¨¼ ¾¨ÃÀ¨¼ ÒÄÉ¡ö× Ð¨È)..«¾¢Öõ ÒÄ¢¸Ç¢ý ÒÄÉ¡ö× Ð¨È¨Â ¾ü§À¡Ð ±ó¾ ´Õ ¿¡ðμÛõ ´ôÀ¢¼ ÓÊ¡¾ «Ç×ìÌ ¦ÀÕ ÅÇ÷ «¨¼óÐûÇÐ..(±¦ÉÉ¢ø ´Õ ¿¡ðÎìÌ ÒÄÉ¡ö×Ð¨È «Åº¢Âõ) «ôÀÊ ¾ü§À¡Ð ¾Á¢Æ¢Æò¾¢Öõ ¿¼óЦ¸¡ñÎ þÕ츢ýÈÉ.. þÕó¾¡Öõ ´Õ þÕ ÅÕ¼í¸Ç£ø «Åü¨È ¾É¢ ¾Á¢Æ¢Æõ ¯Ä¸ò¾¢ý «í¸¢¸¡Ãò§¾¡Î þÂíÌõ ±ýÀ¾¢ø ¾Á¢Æ÷¸û «¨ºì¸ ÓÊ¡¾ ¿õÀ¢ì¨¸..