![]() |
|
யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம் (/showthread.php?tid=6180) |
யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம் - KULAKADDAN - 12-15-2004 யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம் அனைவரும் பத்திாிகையில் பாா்த்திருப்பீா்கள். யாழ் குடாவின் நிலகீழ் நீா் வளம், வரையறைக்குட்பட்டது, அதன் சமநிலை வருடந்தம் பெய்யும் பருவமழையினால் பெணப்படுகிறது. நன்னீரானது ஒரு குவிவில்லை வடிவில் உவர் நீாின் மேல் மிதந்தபடி காணப்படுகிறது. அளவுக்கதிகமான பாவனை நன்னீா் உவர் நீாி சமநிலையை பாதிப்பதோடு உவர் நீா் மேலெழுந்து நன்னீா் கிணறுகள் உவ÷ நீராக மாற காரணமாகிறது. இதற்கு உ-ம் அாியாலை, தீவு பகுதிகளில் முன்னா் குடிநீருக்கு பயன்படுத்திய கிணறுகள் உவராகியிருப்பது. விவசாய செயற்பாட்டிற்கும் இந்நீரே பயன் படுத்தப்படுகிறது. பாரம்பாிய நீா் பாசன முறையில் அதிகளவு நீ÷ விரையமாகிறது. அத்துடன் பயிா்களுக்கு இடப்படும் உரம், விசிறப்படும் பீடை நாசினிகள் கழுவிச்செல்லப்பட்டு மீண்டும் நிலகீழ் நீரை அடைந்து மாசக்கமடைய காரணமாகிறது. எமது மூதாதையா் இந்நீ÷ சமநிலையை பேண பல குளங்களையும், வீணே மழை நீா் கடலை அடையாது நிலத்தினுள் ஊடு புகசெய்ய பலமுறைகளை கையாண்டுள்ளனா். தற்போது யாருக்கும் இதை பற்றிய தெளிவான அறிவொ, கவனமொ இல்லை. அத்துடன் குழிவகை மலசல கூட கழிவு நீரும் நிலத்தடி நீரை மாசடைய செய்கிறது. மாாி காலத்தில் நீா் மட்டம் மேலெழும் போது இரண்டும் கலக்க முடியும். இவ்வாறு கேள்விக்குள்ளாகிவரும் வளத்தை கைத்தொழிலாக்குவது எமது எதி÷கால சந்நதியை பாதிக்கும் வளங்கள் அருகிவரும் போது பெண்தகு வள முகாமைத்துவம்,பெண்தகு விவசாயம், பெண்தகு அபிவிருத்தி என ஆரம்பிப்பதிலும் தற்போதே அதைபற்றி சிந்திப்பது நன்மை பயக்கும். யாழ் குடாவின் உப்போியை நன்நீராக்கும் தொண்டைமானாறு, நாவற்குழி திட்டம், கனகராயன் ஆற்றை உப்பாறுடன் இணைக்கும் திட்டம் என்பவை கவனத்திலெடுக்கபடவேண்டும். உலக வங்கி இதற்கு உதவ முன்வந்த போதும், யாழ் பல்கலைகழகத்தின் மேதாவிகளால் வழங்கப்பட்ட துரநோக்கற்ற சூழலியல் தாக்கம் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையால் கிடைக்காது பொனமை துா்அதிஸ்டமே Re: யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம் - kuruvikal - 12-15-2004 அப்ப எங்கட மூதாதையர்கள் இப்பத்த பட்டதாரிகள விட அறிவாளிகள் என்றீங்க...அது என்னவோ உண்மை தானுங்க.... அவங்களுக்கு செயன்முறை அனுபவம் பட்டம் வழங்கிச்சு இவங்களுக்கு பாடமாக்கிறது பட்டம் வழங்குது.... அதுதான்.... இந்த நிலை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Re: யாழ்பாணத்தில் புதிய போத்தலில் நீ÷ அடைக்கும் தொழிலகம் - KULAKADDAN - 12-15-2004 தற்போது இதில்லிங்கோ பிரச்சனை, நீா் வள பாதுகாப்பு kuruvikal Wrote:அப்ப எங்கட மூதாதையர்கள் இப்பத்த பட்டதாரிகள விட அறிவாளிகள் என்றீங்க...அது என்னவோ உண்மை தானுங்க.... அவங்களுக்கு செயன்முறை அனுபவம் பட்டம் வழங்கிச்சு இவங்களுக்கு பாடமாக்கிறது பட்டம் வழங்குது.... அதுதான்.... இந்த நிலை...! <!--emo& நீா் வள பாதுகாப்பு - kuruvikal - 12-15-2004 இதுதாங்க அடிப்படை... இயற்கை வள முகாமைத்துவம் பற்றிய தெளிவான அறிவின்மையும் அறிவுறுத்தல் இன்மையும்...அதற்கு காரணம்... நாம் மேலே சொன்னது... இது பற்றி யாழ்பல்கலைக்கழகத்தை மட்டும் நம்பி இருக்காமல் பேராதனைப் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் நெருங்கி தேவையான ஆய்வுகளைச் செய்து உருப்படியான முடிவுகளையும் வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்குதல் அவசியம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-15-2004 யாழில் கடந்த மாா்கழியில் Environment Management in north east sri lanka எண்டொரு சா்வதேச கருத்தரங்கு நடந்தது, உலகிலுள்ள நம்மூா் பேராசிாிய÷களும் கலந்து கொண்டாா்கள் விளைவு..????????? - kuruvikal - 12-15-2004 சில பேராசிரியர்மாருக்கு இருக்கிற தலைக்கனத்துக்கு தலைக்க இருக்கோ தெரியாது... பட்டம் வாங்கின உடன பலதும் பறந்திடுது... உலக வெப்ப முறுதல் காரணமாக கடல்மட்டம் அதிகரிப்புப் பற்றி எப்பவோ எச்சரிச்சுப் போட்டாங்கள்... ஆனா யாழ்குடாநாட்டிலும் சரி மட்டக்களப்பு அம்பாறைக் கரையோரங்களிலும் சரி கடலரிப்பு தொடருது... மணல் அகழ்வு...அரசியல் வியாபாரம் ஆகிட்டுது...கடற்கரையோர தாவர அழிப்புகள் வகைதொகையில்லாமல் அதிகரிச்சிருக்குது...உதுகளக் கட்டுப்படுத்தாம கடல்நீர் உட்புகுவது தடுக்க முடியாது...அதைத் தடுக்காமல் நன்னீர் உவர்நீராவதைத் தடுக்க முடியாது...அதுபோக இலங்கை உட்பட முருகைக்கற் பாறைகள் உலக வெப்ப முறுதலால் அழிந்து வருவது கடலரிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யப் போகுது...இது தொடர்பாக என்ன ஆய்வுகள் வடக்கு கிழக்கு கரையோரங்களில் செய்யப்பட்டுள்ளன....???! இதே வேகத்தில் உலக வெப்பமுறுதல் தொடர்ந்தால் மாலைதீவைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கடலுக்குள் போவது உறுதி...அது தெரிந்துதான் அசைலம் அடிக்க பேராசிரியர்மார் திட்டம் வகுக்கினம் போல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-15-2004 மணலகழ்வால் வல்லிபுர கோவில் கடற்கரை சோபை இழந்து, எதிர் கால கண்ணாடி உற்பத்திக்கான முதலிழந்து, உல்லாச பயணத்துகான வாய்ப்பிழந்தது கண்கூடு..... இது நிலமேற் பரப்பால் கடல் நீா் உட்புக வழி வகுக்கும்..... ஆனால் அதிகாித்த நீா் இறைப்பு... எம்மால் புறத்தே உணர முடியாது நிலக்கீழான ஊடுருவல்..... - kuruvikal - 12-15-2004 KULAKADDAN Wrote:மணலகழ்வால் வல்லிபுர கோவில் கடற்கரை சோபை இழந்து, எதிர் கால கண்ணாடி உற்பத்திக்கான முதலிழந்து, உல்லாச பயணத்துகான வாய்ப்பிழந்தது கண்கூடு..... அதுவும் உண்மைதான்...ஆனால் சரியான நீர் முகாமைத்துவம் இருந்தா அதைக்கட்டுப்படுத்தலாம்...ஆனால் நாங்க சொன்ன முன்னையவை இழக்கப்பட்டால் ஈடுசெய்ய முடியாதவை....! உலகில் அருகிவரும் வளங்களில் நன்னீரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-15-2004 kuruvikal Wrote:சில பேராசிரியர்மாருக்கு இருக்கிற தலைக்கனத்துக்கு தலைக்க இருக்கோ தெரியாது... பட்டம் வாங்கின உடன பலதும் பறந்திடுது... அவரவா் தங்கடை பதவியுயா்வுக்கெல்லோ ஆராய்ச்சி கட்டுரை வாசிச்சவை - KULAKADDAN - 12-15-2004 சாியான நீா் முகாமைத்துவம் பாதுகாக்கும் ... அது தான் யாழில்லை... தென்மராட்சியின் நிற நீரை போக்க ஆழ் குழாய் கிணறுகள் கிணற்றினுள் இறுக்க படுகிறன... இது அப்பிரச்சனையை தீ÷க்கவுமில்லை..கிணற்று நீரை உவராக்கி எற்கனவே பயிரப்பட்டிருந்த தேசி போன்ற பயிா்கள் அழிந்தது தான் விளைவு..... - kuruvikal - 12-15-2004 எங்களுக்கு யாழ்ப்பாணத் தரைத்தோற்றம் பற்றிப் படிக்கக் கிடைக்கவில்லை... நாங்கள் சிந்திப்பதில் இருந்து நிலத்துக்கடியில் தேங்கும் மழை நீர்த்தேக்கங்களில் இருந்து கூடிய அளவு நிலத்தடி நன்னீர் கிடைப்பதாகவே கொள்ள வேண்டும்...இப்போ கழிகமுகங்கள் அல்லது நன்னீரோட்டம் உள்ள சமுத்திர ஓட்டங்கள் இருப்பின் பாறைப்பிளவுகள் ஊடு உட்புகும் நன்னீர் உவர்ப்புப் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு... ஆனால் நிலத்தடி மழை நீர்த் தேங்கு நிலைகளில் உள்ள குறிப்பிட்ட அளவு நீரை சேகரிக்கப்படும் வேகத்தை விட அதிக அளவில் வெளியில் எடுத்தால் அவ் நீர்நிலைகள் வற்ற நிலத்தின் இரசாயன நிலமை மாறி அந்நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு உகந்ததல்லாததாக மாறலாம்... யாழ்ப்பாண நிலம் படிவுவீழ்த்தப்பட்ட பாறைகளை (sedimentary rocks) கொண்டது...அதில் நீரில் கரையக் கூடிய வன்னீர் மென்னீருக்கான இரசாயனக் கூறுகள் இருக்க வாய்ப்புண்டு... அவை நீரில் செறிவாக்கம் அடைவதன் காரணமாக (இப்போ உப்பளங்களில் நிகழ்த்தபப்டும் பொறிமுதைக்கமைய ) உவர்த்தன்மை அடைவதற்கும் சாத்தியம் உண்டு....! எனவே நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்பது யாழில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்..இன்றேல் கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்று இந்த தொழிற்சாலைகளை அமைக்கலாம்..ஆனால் உற்பத்திச் செலவு கண்டியில் ஆற்று நீரைப் பெற்று போத்தல்களில் அடைப்பதை விட அதிகமாக இருக்கும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-15-2004 கரைந்த கூறுகளை விட..... இயற்கையில் குடாவில் நன்னீா் உவா் நீாின் மேல் குவிவில்லை வடிவில் மிதந்து காணப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் நிலகீழ் ஆறாக கடலுடன் கலக்கிறது. உ-ம் கீரிமலை நீா் வில்லை உவா் நீாின் மிதந்து காணப்படுகிறமையை நிலாவரை கிணற்றில் அறியலாம்... இவற்றை விளக்கும் படம் கைவசமில்லை, என்னால் வரையமுடியும் களத்தில் இணைக்கமுடியாது - Kanani - 12-15-2004 Quote:வளங்கள் அருகிவரும் போது <b>பெண்தகு வள முகாமைத்துவம்,பெண்தகு விவசாயம், பெண்தகு அபிவிருத்தி</b> என ஆரம்பிப்பதிலும் தற்போதே அதைபற்றி சிந்திப்பது நன்மை பயக்கும் அதென்ன பெண்தகு விவசாயம் பெண்தகு அபிவிருத்தி... புதுச்சொல்லாக இருக்குது....கொஞ்சம் விளக்குங்கோ :? - kuruvikal - 12-15-2004 KULAKADDAN Wrote:கரைந்த கூறுகளை விட..... இந்தக் கருத்துக் குறித்து நண்பர்களுடன் விவாதிக்கும் போது நீங்கள் கூறிய முறையில் இருக்கலாம் என்றும் எடுத்துச் சொல்லி இருந்தோம்...தென்னிலங்கை தரைத்தோற்றம் பற்றித்தான் எமக்கு அதிகம் தெரியும்...யாழ்ப்பாணத் தரைத்தோற்றம் பற்றி நீரோட்டங்கள் பற்றி ஆழமாக அறியவாய்ப்புக் கிடைக்கவில்லை... குறிப்பாக ஆற்றுக் கழிமுகங்களுக்கு அருகில் நீரின் அடர்த்தி வேறுபாட்டாலும் தரைத்தோற்ற அம்சங்கள் காரணமாகவும் நன்னீர் ஊற்றுக்கள் தரையில் பெறப்படுவது மிகுந்த சாத்தியப்பாடான விடயங்கள்..இதை நீர்கொழும்புப் பகுதியில் தெளிவாகக் காணலாம்...! இப்போ பிரச்சனை என்னவென்றால் கடலரிப்பால் கடல் உட்புகுதல்....கடல் உவர்நீர்மட்ட நிலையான அதிகரிப்பென்பன...இந்த நன்னீர் ஊற்றுக்களின் வரவை உவர்நீராக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு...அதுமட்டுமன்றி கரையோர தரைத்தோற்றம் மாற்றி அமைக்கப்படுதலும் இதைப் பாதிக்கும்....குறிப்பாக மணல் அகழ்வுகள்....! எனவே வெறும் நீர்முகாமைத்துவம் என்பது நீரைப் பயன்படுத்துதல் சம்பந்தப்பட்டதோ நீரோடு மாசுகள் கலப்பது சம்பந்தப்பட்டதோ அல்ல... சூழல் வெப்பமுறுதல் உள்ளடங்களாக பல அம்சங்கள் சார்ந்தவை என்பதையே நாம் தெளிவாக குறிப்பிட விரும்புகிறோம்...இவை யாவற்றிலும் ஒரே தடவையில் கண்ணோட்டம் செலுத்தியே புதிய கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க வேண்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-16-2004 வள முகாமைத்துவம் என வரும் போது நிச்சயமாக பால்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை. கடலாிப்பு யாழ் குடாவில் இல்லை என்று அடித்து கூற முடியாது, ஆயினும் பாக்கு நீாிணையுள் இருப்பதால் தாக்கம் குறைவு. இலங்கையிலும் மேற்கு கரை கடலாிப்புக்குட்பட கிழக்கு கரை மணல் படிவுக்குட்படுவதாக படித்த ஞாபகம். வல்லிபுர பகுதியில் கடலலை மணலை சே÷க்க காற்று அள்ளி நிலபகுதியில் குவிக்கிறுது. இலங்கையின் ஏனைய பகுதியில் -வன்னி உட்பட- புத்தளத்தின் கற்பிட்டி நீங்கலாக - நிலகீழ் நீாின் இருப்பு ஆறுகள், குளங்களின் நீ÷ இருப்பிலேயே தங்கியுள்ளது. இங்கு முக்கியமானது ஏற்கனவே அருந்தலுக்குள்ளாகிவரும் வளத்தை கைத்தொழிலாக்குவது சாியா ? யாழில் முதலிட பல உண்டு... பழ பதனிடல்.... மரக்கறி...... இந்நீா் ஏற்றுமதியாக போகிறது புலத் தமிழ÷களை நோக்கி - KULAKADDAN - 12-16-2004 Kanani Wrote:Quote:வளங்கள் அருகிவரும் போது <b>பெண்தகு வள முகாமைத்துவம்,பெண்தகு விவசாயம், பெண்தகு அபிவிருத்தி</b> என ஆரம்பிப்பதிலும் தற்போதே அதைபற்றி சிந்திப்பது நன்மை பயக்கும் புத்தகங்களிலுள்ளது போல் அச்சொட்டாக வரைவிலக்கணம் ?? பெண் தகு- விவசாயம் ஒருங்கிணைந்த பயி÷, விலங்கு உற்பத்திநுடு நீண்ட காலப்போக்கில் மனிதனின் உணவு உடை தேவையை பூா்த்தி செய்வதுடன் சூழலின் தரத்தையும், மீளப்பெறப்படமுடியாத வளங்களிலிருந்து உச்ச பயன் பெறுவதோடு, இயற்கை உயிா்வட்டங்களை ஒருங்கிணைத்து, பண்ணையின் நிலையான பொருளாதாரத்தை பேணி, விவசாயிகளதும் சமூகத்தினதும் வாழ்கை தரத்தை உயா்த்துவதுமாகும். :wink: :wink: - kuruvikal - 12-16-2004 KULAKADDAN Wrote:வள முகாமைத்துவம் என வரும் போது நிச்சயமாக பால்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை. மணல் படிவு என்பது கிழக்குக் கரையில் ஒரு சிறிய பகுதியில்தான் நிகழ்கிறது...பொத்துவில் பக்கம் கடலரிப்பு அதிகம்...வீடுகளே கடலுக்குள் சென்றிருப்பதை சமீபத்தில் ஒரு விபரணத்தில் பார்த்தோம்... யாழ்குடாநாட்டில் கடலரிப்பு ஒப்பீட்டளிவில் அதிகம் மேற்குக்கரை தெற்குக்கரை கருங்கற் கொண்டு செயற்கைமுறையில் முக்கிய பகுதிகள் கடலரிப்பு வேகத்தைக் குறைக்க பாதுகாப்பிடப்பட்டுள்ளது.. அந்த முறைப் பாதுகாப்புக் கூட யாழ் குடாவிலோ கிழக்குக் கரையிலோ கிடையாது குறிப்பாக அம்பாறை நோக்கிய கரை....! நீங்கள் கேட்ட கேள்விக்கு குறிப்பாக அருகிவரும் நன்னீர் வள ஏற்றுமதித் தொழில் முதலீட்டுக்கு யாழ் குடா நிலத்தடி நீரை மையமாக வைத்து உகந்ததல்ல...ஆனால் கடல்நீர் தரைக்குள் வந்திருப்பதால்...கடல்நீரை நன்னீராக்கும் செயன்முறை மூலம் இதைச் செய்யலாம்...ஆனால் உற்பத்திச் செலவு அதிகமாகும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-16-2004 இப்போது ஆரம்பித்தவ÷கள் நன்னீரை பயன்படுத்த போகிறா்கள், விழாவிற்கு போனது பொருளியல் பேராசிாியா்..... என்ன பொருளியலோ....... - KULAKADDAN - 01-29-2005 நில கீழ் நீர் வள மாதிரிப்படம் - Jude - 01-31-2005 அண்மையில் வன்னிக்கு போன ஒருவர் கொழும்பிலிருந்து போத்தலில் அடைக்கப்பட்ட நீர் வன்னியில் இறக்குமதியாகி வெளிநாட்டாருக்கு பரிமாறப்படுவதை கண்டு தான் வன்னியில் நீரடைக்கும் தொழிற்சாலை அமைக்க கேட்டார். விடுதலைப்புலிகளின் நிருவாகத்தினர் தாம் ஏற்கனவே இவ்வாறான தொழிற்சாலை அமைக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அங்கே அடைக்கப்படும் நீர், உள்ளுர் வரும் வெளிநாட்டவருக்கு தான். ஏற்றுமதியாகும் அளவுக்கு நீரும் இல்லை. ஐரோப்பிய அமெரிக்க தரத்தில் நீர் சுத்திகரிப்பது மிகுந்த செலவாகும். ஆகவே, அந்த தரத்தில் தயாரிக்கவும் முடியாது. |