Yarl Forum
ஜே.வி.பி. சமாதானத்திற்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டுள்ளது - க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜே.வி.பி. சமாதானத்திற்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டுள்ளது - க (/showthread.php?tid=6176)



ஜே.வி.பி. சமாதானத்திற்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டுள்ளது - க - KULAKADDAN - 12-15-2004

ஜே.வி.பி. சமாதானத்திற்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டுள்ளது - கொடையாளி நாடுகள் கண்டன அறிக்கை


போர்நிறுத்த ஒப்பந்ததிற்கு எதிராக ஜே.வி.பி.யினர் ஆர்ப்பாட்டம்
இலங்கை சமாதானத்திற்கு எதிரானதும், நோர்வேயின் அனுசரணை முயற்சிகளுக்கு எதிரானதுமான ஒரு நிலைபாட்டை ஜே.வி.பி. கட்சி கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டியும், கண்டனம் தெரிவித்தும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இலங்கை கொடையாளி நாடுகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

நேற்று செவ்வாய்கிழமையன்று இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்திருந்த இக்கொடையாளி நாடுகளின் பிரதிநிதிகள், அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு குறித்து தாங்கள் விசனமடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதி கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி மேற்கொள்ளும் முன்னெடுப்புகளுக்கு தங்களது முழு ஆதரவு உண்டு என்று இக்கொடையாளி நாடுகளின் பிரதிநிதிகள் உறுதி வழங்கியுள்ளனர்.

அரசின் மீதோ அரசின் இடம்பெற்றுள்ளக் கூட்டணிக் கட்சிகள் மீதோ அழுத்தம் தரும் வகையில், இவ்வாறான கடும் தொனியுடன் சர்வதேச சமூகமோ அல்லது வேறு எந்த வெளிநாடுமோ அறிக்கை விடுவது என்பது இதுவே முதல் முறை.

இந்த அறிக்கை தொடர்பான உத்தியோகப்பூர்வ பதில் எதுவும் இதுவரை அரசிடம் இருந்தோ ஜே.வி.பி.யிடம் இருந்தோ இதுவரை வரவில்லை.

பத்திரிகையாளர் கருத்து

சமாதான முன்னெடுப்புகளுக்கு சாதகமான ஒரு சூழல் தென்னிலங்கை அரசியலில் நிலவவில்லை என்பது சர்வதேச கொடையாளி நாடுகள் அறிந்த விடயம்தான். அது குறித்து இந்த நாடுகள் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்த கண்டன அறிக்கை அமைந்துள்ளதென 'வீரகேசரி' பத்திரிகை ஆசிரியர் தேவராஜ் தெரிவித்தார்.

சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்பட்டால்தான் நிதி உதவி கிடைக்கும் என்று கூறி சலிப்படைந்து விட்ட இந்த நாடுகள் இலங்கையின் மீது நேரடியாக அழுத்தம் தரத் துவங்கியுள்ளன என்று தான் கருதுவதாக குறிப்பிட்டார் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் அரசுக்கும் அதில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. கட்சிக்கும் மட்டுமின்றி, தென்னிலங்கையின் அரசியல் சக்திகள் அனைத்திற்குமே இந்த அறிக்கையில் செய்திகள் அடங்கியிருப்பதாகவும்; நேரடியாக இல்லாவிட்டாலும் விடுதலைப் புலிகளுக்குண்டான செய்தியும் கூட இதில் பொதிந்திருப்பதாகவும் தேவராஜ் கருத்து தெரிவித்தார்
from BBC tamil


- hari - 12-16-2004

நன்றி


- kuruvikal - 12-16-2004

<b>இலங்கை: நிதியளிக்கும் நாடுகள் ஜேவிபிக்கு கண்டனம்</b>

விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையைக் சீர்குலைக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சி முயற்சிக்கிறது என ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு புலிகள் விதித்த சில நிபந்தனைகளை ஜே.வி.பி. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் கட்சியின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ள அதிபர் சந்திரிகாவும் அந்தக் கட்சியின் நிபந்தனைகளுக்கு தலையாட்டி வருகிறார்.

இந் நிலையில் அமைதி முயற்சியைக் குலைக்கும் ஜே.வி.பியின் செயல்களை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக இலங்கை புனரமைப்புக்கு நிதியளிக்கும் நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண சந்திரிகா குமாரதுங்கா விரும்பினால் ஜேவிபி கட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நாடுகள் நிபந்தனை விதித்துள்ளன.

இலங்கையில் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தையில் புலிகள் பக்கமிருக்கும் நியாயத்தை சர்வதேச நாடுகள் உணர்ந்துள்ளன என்று மாவீரர் தினத்தன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

thatstamil.com


- Mathan - 12-16-2004

பெரிய மற்றும் சிறிய ஜனநாயக நாடுகளிடம் ஒரு கேள்வி

இலங்கைக்கான டோக்கியோ உதவி வழங்கும் நாடுகள் மாநாட்டில் இணைத்தலைமை வகித்த நாடுகளின் பிரதி நிதிகள் கூட்டாக கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள்.

சமாதான முயற்சிகள் தொடர்பில் அரச பங்காளிக் கட்சியான ஜே வி பி யின் செயற்பாடுகள் சந்தேகத்தினைத் தருவதாக அந்த அறிக்கையின் சாராம்சம் அமைந்திருக்கிறது. இது தொடர்பாக அரசு தனது தீர்க்கமான நிலையினை தெளிவு படுத்த வேண்டும் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.

சென்ற பதிவில் நான் கூறிச் சென்றது உலக நாடுகளின் இவ்வாறான இலங்கையை நோக்கிய கேள்விகளைத் தான்.

நியாயமான ஒரு தீர்வினை, தழிழர் தரப்பு ஏற்கின்ற ஒரு தீர்வினை மனமுவந்து வழங்குவதற்கு சிங்கள இனவாதம் என்றைக்குமே விரும்பியதில்லை. அதே வேளை அதன் உண்மையான முகத்தை உலக அரங்குகளில் தோலுரித்து காட்டுவதற்கான வெளிச் செயற்பாடுகளில் தமிழர் தரப்பும் பெரிய அளவில் முயன்றதில்லை.

ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தைகளில் சிங்களத் தரப்பு இழுத்தடிப்பு ஏமாற்று வித்தைகளை கைக் கொள்கின்ற போது தமிழர் தரப்பு யுத்தத்தினை ஆரம்பித்தனர். அதனையே சிங்களத் தரப்பு புலிகள் யுத்தத்தினை ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு வன்முறையைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்கிற ரீதியில் உலக நாடுகளில் பரப்புரை செய்தது.

ஆனால் இம்முறை வரலாறு மாறி நிற்கிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் யுத்தநிறுத்தத்தை கைக் கொள்கின்றனர்.

கடந்த 95 இல் சந்திரிகா அரசு இம்முறை போலவே இழுத்தடிப்புக்களுடனும், வெறும் பேச்சளவிலும் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் போது யாழ்ப்பாணத்திலிருந்த மக்களின் இயல்பு பயணத்திற்கு ஏற்ற வகையில் பூநகரி (அப்போது இராணுவ வசம் இருந்தது.) ஊடான பாதையை திறந்து விடுதல் உட்பட சில கோரிக்கைகளை புலிகள் முன்வைத்தனர்.

அரசு அவற்றினை நிராகரித்த போது முறைப்படியாக அரசுக்கு அறிவித்து விட்டு அவர்கள் யுத்தத்தினை ஆரம்பித்தனர்.

இம்முறை யுத்த நிறுத்த காலத்தில் பல போராளிகளை இழந்த பின்னும் ஒரு வித கடினம் நிறைந்த அமைதியோடு பேச்சுக்களுக்கு வாருங்கள், எதுவாயினும் பேசி முடிவு காணலாம் என்கிறார்கள்.

இந்த முதிர்ச்சியூடான செயற்பாடடடின் மூலம் புலிகள் மிகத் தெளிவான ஒரு இலக்கினைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள் போல தெரிகிறது.

அதாவது இலங்கை இனவாத அரசியலுக்குள் இயல்பாகவே இருக்கின்ற தமிழர் விரோதப் போக்கை, அதன் உண்மைத் தன்மையை மிகச் சரியாக உலக அரசுகளுக்கு உணர வைப்பது என்ற இலக்கே அது.

கோபமூட்டுகின்ற செயற்பாடுகளின் மூலம் புலிகளை யுத்தத்தினை ஆரம்பித்தல் என்னும் நிலைக்கு தள்ளிவிட்டு பின்னர் குய்யோ முறையோ.. புலிகள் சண்டையைத் தொடங்கி விட்டார்கள் என வழமை போலவே தாம் என்னவோ தீர்வினை வழங்க தயாராக இருப்பதாகவும் புலிகளுக்கு வன்முறையிலேயே விருப்பம் என்பது போலவும் உலக நாடுகளிடம் நடிக்க அரசு விரும்பியிருக்க கூடும்.

ஆனால் சுமார் 3 வருடங்களைத் தொடும் புலிகளின் பொறுமையடனான காத்திருப்பு அரசுக்கு மட்டுமல்ல மக்களுக்கு கூட ஆச்சரியம் தான்.

ஈழப் பிரச்சனையில் இதுவே அதி கூடிய சமாதான காலம்.

என்றுமில்லாத வகையில் உலக நாடுகளின் உறவினையும் நட்பினையும் புலிகள் பெற்றுக் கொண்ட காலம் இது.

கொழும்பு வருகின்ற வெளிநாட்டு அரச பிரதி நிதிகள் அப்படியே கிளிநொச்சிக்கும் ஒரு தடவை வந்து புலிகளின் பிரதி நிதிகளைச் சந்தித்துவிட்டு செய்தியாளர் மத்தியில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறிச் செல்கின்றனர்.

புலிகளும் பிற நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் பிரதி நிதிகளைச் சந்தித்து செல்கின்றார்கள்.

மொத்தத்தில் புலிகள் தமது சம பங்காளர் என்னும் அந்தஸ்த்தை உயர்த்தியிருக்கிறார்கள். உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

-------------

நான் மேற்சொன்ன அறிக்கையில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் யப்பான் நாட்டு பிரதிநிதிகள் கையெழுத்து இட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.

அரசின் குறிப்பாக அரச கட்சியான ஜே வி பி யின் சமாதான விரோத போக்கினை உலக நாடுகள் உணர்ந்து கொள்ளத் தொடங்குகின்றன எனபதனை இது உணர்த்துகிறது.

இவ்வாறான அறிக்கைகளும் கேளிவிகளும் இலங்கை அரசை அழுத்தத்துக்குள் இட்டுச் செல்லும். இந்தியாவிலிருந்தும் இவ்வாறான கேள்விகள் எழ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

ஒரு வேளை இலங்கை அரசை சமாதானத்துக்கு போகும் படி வற்புறுத்துவது புலிகளின் அந்தஸ்த்தை ஏற்றுக் கொள்வதாய் விடுமோ என இந்தியா அஞ்சுகிறதோ என்னவோ?

ஆனால்.. சமஷ்டித் தமிழ் ஆட்சி அல்லது தனி நாடு எதுவாயினும் இந்தியாவின் பங்களிப்பினை தமிழர்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள். அது போலவே இலங்கைப் பிரச்சனையில் புலிகளும் ஒரு புறக்கணிக்க முடியாத சக்தி என்பதனை இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டும்.

<b>நன்றி - மயூரன்</b>