![]() |
|
ஹார்வர்ட் - கூகிள் புத்தக மின்னாக்கத் திட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: ஹார்வர்ட் - கூகிள் புத்தக மின்னாக்கத் திட்டம் (/showthread.php?tid=6170) |
ஹார்வர்ட் - கூகிள் புத்தக மின்னாக்கத் திட்டம் - Mathan - 12-16-2004 ஹார்வர்ட் - கூகிள் புத்தக மின்னாக்கத் திட்டம் இலங்கை இனப்போராட்டத்தில் என்னை அதிகமாகப் பாதித்த விஷயங்கள் இரண்டு; ஒன்று இருபது வருடங்களாக, இரண்டு/மூன்று தலைமுறைகளில் இளம் பிஞ்சுகளும், இளைஞர்களும் நிம்மதியான கல்விபெற வாய்ப்பில்லாமல் போனது. மற்றது யாழ்ப்பாணத்தில் எரியூட்டப்பட்ட நூலகம். நாளை சமாதானம் வந்தவுடன் எல்லா விஷயங்களின் தாக்கமும் நீர்த்துப் போகலாம். ஆனால் கல்வியின் இழப்பையும் அரிய நூல்களின் இழப்பையும் யாராலும் ஈடுசெய்ய முடியாது. மனித உரிமைகளில் மிகவும் முக்கியமாக நான் கருதுவது கல்வி பெறும் உரிமை. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் , கூகிள் இரண்டும் இணைந்து ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் புத்தகங்களை கூகிள் தன்னுடைய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னாக்கம் செய்ய இறங்கியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவின் 'லைப்ரரி ஆஃப் காங்க்ரஸ்'. அடுத்தபடியாக இரண்டாவது ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகம். இங்கே பதினைந்து மில்லியன் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் பல மிகமிக அரிய புத்தகங்கள். இவற்றை மின்னாக்கம் செய்வது மிகவும் முக்கியமான காரியம். ஆமாம், இதில் நமக்கு என்ன ஆர்வம் என்று கேட்கிறீர்களா? தெரிந்தெடுக்கப்படும் நூல்களில் பல காப்புரிமை கடந்த அல்லது காப்புரிமை இல்லாத நூலகளாக இருக்கும். அந்த நூல்கள் திறந்த வடிவில் யார் வேண்டுமானாலும் இறக்கிக் கொள்ள கூகிள் தளத்திலிருந்து கிடைக்கப் போகிறது. பிற புத்தகங்களின் காப்புரிமையை கவனமாகப் பாதுகாப்போம் என்று கூகிள் உறுதியளித்திருக்கிறது. ஹார்வர்ட்டைத் தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்ட், ஸ்டான்ஃபோர்ட், மிச்ஷிகன் பல்கலைக்கழகங்கள், நியூயார்க் நகரப் பொது நூலகம் இவையும் கூகிளால் மின்னாக்கம் செய்யப்பட இருக்கிறன. யாழ் நூலகத்திற்கு ஏற்பட்ட அழிவு உலகில் வேறெங்கும் நிகழக்கூடாது. <b>நன்றி - வெங்கட்</b> - KULAKADDAN - 12-16-2004 நல்லது, நன்றி - MEERA - 12-17-2004 நன்றிகள். - MEERA - 12-17-2004 நன்றிகள். - hari - 12-17-2004 நன்றிகள். - kavithan - 12-18-2004 நல்ல விடயம் செய்யட்டும் - AJeevan - 12-20-2004 நல்லவை தொடரட்டும். வாழ்த்துகள். தமிழர்களும் இது போன்ற ஒரு முயற்சியில் இறங்கலாம். புலம் பெயர் தமிழர் கதைகளை சில தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ளன. அனைத்து இணையங்களது பெயர்களும் தெரியாததால் தெரிந்த இணையங்களை குறிப்பிட்டு எழுதாமைக்கு வருந்துகிறேன். அவர்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாக வேண்டும். இப்படியான தமிழர் இணைய தளங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் களத்தில் நிச்சயம் இருப்பீர்கள். முடிந்தால் அவற்றை வெளியே கொண்டு வருவது நாம் அவர்களுக்கு செய்யும் கடனாகும். |