Yarl Forum
இந்திய வீரத்தமிழனுக்கு வீரவணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இந்திய வீரத்தமிழனுக்கு வீரவணக்கம் (/showthread.php?tid=6169)



இந்திய வீரத்தமிழனுக்கு வீரவணக்கம் - Nada - 12-17-2004

தமிழகத்திலிருந்து தமிழீழத் தமிழருக்காகத் தீக்குழித்து தியாக மரணம் எய்திய வீரனுக்கு தமிழீழத்தில் நினைவெழுச்சி நிகழ்வு.
ஜ வியாழக்கிழமைஇ 16 டிசெம்பர் 2004 ஸ ஜ நாவேந்தன் ஸ
ஈழத்தமிழ் உறவுகளுக்கு சிங்கள பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும் அழிவுகளுக்கு எதிராக தென்னிந்தியத் தமிழர்கள் சார்பாக இந்திய அரசின் அரசியல் முகத்திற்கு எதிராகத் தன்னையழித்த மாவீரன் அப்துல் ரவுூப்பின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. தியாகி அப்துல் ரவுூப் கடந்த 1995 ம் ஆண்டு 15ம் திகதி மார்கழிமாதம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் தீக்குளித்துத் தியாக மரணம் எய்தினார். சுூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது இலங்கை பௌத்த பேரினவாதப் படைகள் யாழ்மாவட்டத்தை ஆக்கிரமித்து வலிகாமத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையும் இடம்பெயர்ந்து வெளியேறிய ஒரு முக்கியமான காலத்தில் 24 வயதான இளைஞர் அப்துல் ரவுூப் ஈழத்தமிழ் உறவுகளுக்காகத் தியாகச்சாவை எய்தினார்.

தனது இறுதி மடலில் ஈழத்தமிழர்களுக்குக் குரல் கொடுக்க ஆயிரம் ஆயிரம் அப்துல் ரவுூப்கள் எழுவார்கள் என்று வரைந்துவிட்டு தன் இறுறுதி மூச்;சை எம்மினத்துக்காகத் தந்துவிட்டுப் போய்விட்ட அப்துல் ரவுூப்பை நிதர்சனமும் நினைவுகூர்ந்து வணங்குகிறது.
இந்திய வீரத்தமிழனுக்கு வீரவணக்கம்

நன்றி நிதர்சனம்


- aathipan - 12-17-2004

எமக்காக தனது இன்னியுரை ஈந்த எமது சகோதரர் அப்துல் ரவூப் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள்.