Yarl Forum
மரண வாசல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மரண வாசல் (/showthread.php?tid=6105)



மரண வாசல் - தமிழரசன் - 12-25-2004

மரணம் என்னை முத்தமிடும் வேளை,
உடல் விட்டு உயிர் பிரியும் நேரத்தில்;
வாழ்வை திரும்பிப் பார்கிறேன்...
கரடு முரடான பயணத்தை,
கால் தடம் வைத்து வந்த பாதையில்;
கண்ணீர் கடலை காண்கிறேன்...

கண்ணீரால் வளர்த்த வாழ்கைச் செடி,
கரையில்லா கங்கை நதியில்;
அழித்தேன், உயிரை கரைத்தேன்
மனதில் இருக்கும் காயங்களை,
கண்ணீர் வரையும் காவியத்தில்;
கருத்தாக தன்னையே, என்னையே வைத்தேன்

அனைவராலும் கைவிடப்பட்டதை,
தனிமையில் தத்தளித்த காலத்தில்;
கண்மணியே உன் கதலை மட்டும் காதலித்தேன்
என்னை பறிகொடுத்து, மறந்த நிலை,
கண்களை மூடி கனவுலகில்;
உன்னை தேடித் தேடி உயிரை தோலைத்து விட்டேன்

இரவும், பகலும் தொடரும் உன் நிழலை,
பிடித்தேன், அணைத்தேன், அரவணைத்து புதைத்தேன் உள்ளத்தில்;
இரு உலகிலும் உன்னை மனதில் வைத்து அபிசேகித்தேன்
இமை வேலி தண்டிவரும் உன் ஞாபகத்தை,
கனவிலும், நனவிலும் வைத்துள்ளேன் இதயத்தில்;
காதலே உன்னை கண்ணீரால் ஆராதித்தேன்

இரவுதோறும் உளறுகிறேன் உறக்கமின்றி,
காலம், காலமாய் காதலின் சிறையில் அதன் கருவரையில்;
கலங்கினேன், காயப்பட்டேன், காதல் சிலுவையில் அறையப்பட்டேன்!
கண்களுக்கு த்ரையிட்டும் வ்ழிந்தோடும் நதிக்கரை,
காதல் விதை இதயக் கதவை தட்டித் திறக்கையில்;
மரணத்தில் ஆழமதை மனதின் மெளனத்தில் கண்டறிந்தேன்

சோகத்தை சொல்ல சொற்களில்லை,
கதறி அழுகிறேன் மெளத்தில்;
இன்று மரணத்தின் பாதை வழி செல்கிறேன்
மரணத்தின் மணியோசை,
இதயக் கதவை தட்டுகையில்;
மரணத்தின் மணியோசை,
இதயக் கதவை தட்டுகையில்;
உன்னை திரும்பிப் பார்கிறேன்...
www.geetham.net


- sinnappu - 12-25-2004

அப்பு தமிழ்!!!!!! கவிதைகள் மிகவும் நல்லா இருக்கு
அப்பு குறைநினைக்காமல் இந்த பயனுள்ள கவிதைகளை
கவிதை எண்ட பக்கத்தில போடலாமே
பிள்ளை கோவிக்காதையப்பு சரியோ தமிழீழத்தில இருந்து எழுதுறாய் ஒழுங்கான இடத்தில இருந்தால் எல்லாரும் படிக்க வசதியா இருக்கும்
சரியா தமிழரசு
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kavithan - 12-25-2004

நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்கள் தமிழரசன் .. உங்கள் கவிதைகளைப்படிக்க ஆவலாய் உள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 12-25-2004

தமிழரசன் கவிதை நன்றாய் இருக்கிறது.. தொடர்ந்து கவிதை வழங்க எமது வாழ்த்துக்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-26-2004

¸Å¢ìÌ Å¡úòÐìû


Re: மரண வாசல் - வெண்ணிலா - 12-26-2004

தமிழரசன் Wrote:கால் தடம் வைத்து வந்த பாதையில்;
கண்ணீர் கடலை காண்கிறேன்...

கண்ணீரால் வளர்த்த வாழ்கைச் செடி,
கரையில்லா கங்கை நதியில்;
அழித்தேன், உயிரை கரைத்தேன்
மனதில் இருக்கும் காயங்களை,
கண்ணீர் வரையும் காவியத்தில்;
கருத்தாக தன்னையே, என்னையே வைத்தேன்

உண்மையான கடலையே காணக்கூடியதாக இருக்கே.


நீங்களாக அழிக்கவும் தேவையில்லை கரைக்கவும் தேவையில்லை. வேணுமென்றால் கங்கையே கரைக்கு வந்து அழித்துவிடும். கரைத்தும்விடும்.

[b]அருமையான கவிவரிகள் வாழ்த்துக்கள் நண்பரே


- KULAKADDAN - 12-26-2004

¬Á¡ ¿¼ôÒ «ôÀ¢Ê¾¡ý ¦¾Ã¢Ô <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 12-26-2004

KULAKADDAN Wrote:¬Á¡ ¿¼ôÒ «ôÀ¢Ê¾¡ý ¦¾Ã¢Ô <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

:?: Cry :?:


- kuruvikal - 12-26-2004

இயற்கை அன்னை சீறிவிட்டாள்
எழிற்கோலம் குலைத்துவிட்டாள்
எளிமையாய் கண்ட
வாழ்வுக் கனவும் கலைத்துவிட்டாள்
மரணம் தலைமேல் ஊசலாட
தருணம் அறியா மனிதன் மட்டும்
போடுறான் எத்தனை நாடகங்கள்
பாவம் ஏமாளியாக....!


- KULAKADDAN - 12-26-2004

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry :?:


- shanmuhi - 12-26-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மரணம் என்னை முத்தமிடும் வேளை,  
உடல் விட்டு உயிர் பிரியும் நேரத்தில்;  
வாழ்வை திரும்பிப் பார்கிறேன்...  
கரடு முரடான பயணத்தை,  
கால் தடம் வைத்து வந்த பாதையில்;  
கண்ணீர் கடலை காண்கிறேன்...  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
¸Å¢¨¾ «Õ¨Á.
Å¡úòÐì¸û...


- Mathan - 12-27-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இயற்கை அன்னை சீறிவிட்டாள்
எழிற்கோலம் குலைத்துவிட்டாள்
எளிமையாய் கண்ட  
வாழ்வுக் கனவும் கலைத்துவிட்டாள்
மரணம் தலைமேல் ஊசலாட
தருணம் அறியா மனிதன் மட்டும்
போடுறான் எத்தனை நாடகங்கள்
பாவம் ஏமாளியாக....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பொருத்தமான கவிதை