Yarl Forum
நிக்கோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: நிக்கோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்! (/showthread.php?tid=6059)



நிக்கோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்! - ஊமை - 12-28-2004

நிக்கோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்!

செவ்வாய், 28 டிசம்பர் 2004
தெற்காசிய நிலநடுக்கத்தாலும், கடல் கொந்தளிப்பாலும் கடுமையான பாதிப்பிற்குள்ளான பெரிய நிக்கோபார் தீவை நேற்று நள்ளிரவு மேலும் ஒரு நிலநடுக்கம் தாக்கியது!

நேற்று இரவு 11.10 மணிக்கு தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமத்திய ரேகையிலிருந்து 6.1 டிகிரி வடக்கும், தீர்க்காம்ச ரேவை 92.2 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் இருந்தது. இவ்விடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் மையப் பகுதிக்கு அருகில் உள்ளது.

அதன் பிறகு நள்ளிரவு 2.6 நிமிடத்திற்கு மற்றொரு நிலநடுக்கம் நிக்கோபர் தீவைத் தாக்கியது. அதன் மையம் 9.3 டிகிரி வடக்கும், 93.3 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில இருந்தது. இத்தகவல்களை இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரைக் கிட்டவில்லை.

நிக்கோபாரில் இதுவரை 4,000 பேர் பலி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கார் நிக்கோபார், பெரிய நிக்கோபார் ஆகிய தீவுகளைத் தாக்கிய கடல் கொந்தளிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000த்தைக் கடந்துவிட்டது. சற்றேரக்குறைய 5,000 பேர் வரை காணவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.