Yarl Forum
தமிழகம், புதுவையை கடல் கொந்தளிப்பு மீண்டும் தாக்கலாம் ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: தமிழகம், புதுவையை கடல் கொந்தளிப்பு மீண்டும் தாக்கலாம் ! (/showthread.php?tid=6058)



தமிழகம், புதுவையை கடல் கொந்தளிப்பு மீண்டும் தாக்கலாம் ! - ஊமை - 12-28-2004

தமிழ்நாடு, புதுவை கடலோரப் பகுதிகளை தாக்கி பெரும் நாசத்தை விளைவித்த கடல் கொந்தளிப்பு அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது!

தெற்காசியாவில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய கடல் கொந்தளிப்பிற்கு காரணமான சுமத்ரா அருகே ஏற்பட்ட நிலநடுக்கப் பகுதியில் மேலும் 15 முதல் 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், அதேபோல, அந்தமான், நிக்கோபார் தீவுப் பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இதன் விளைவாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை கடற்பகுதிகளில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் சென்று குடியேறவேண்டாம் என்றும், கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6-க்கும் அதிகமாக இருந்தால் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்திய வானியல் ஆய்வுத்துறையும் இதேபோன்றதொரு எச்சரிக்கையை டெல்லியில் விடுத்துள்ளது. நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு மீண்டும் தாக்கும் அபாயம் இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலிற்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.