![]() |
|
26 நாடுகள் வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத இந்தியா ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 26 நாடுகள் வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத இந்தியா ! (/showthread.php?tid=6057) |
26 நாடுகள் வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத இந்தியா ! - ஊமை - 12-28-2004 கடல் கொந்தளிப்பை உண்டாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும் சுனாமி அலைகளை சாதாரண கருவி களால் கண்டுபிடிக்க இயலாது. அமெரிக்கா இதை கண்டுபிடிக்க நவீன கருவிகளை வைத்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் அந்த கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் சுனாமி அலை கொடூரத்தில் இருந்து அமெரிக்கா தன் மக்களை பாதுகாத்துக் கொள்கிறது. அமெரிக்கா போன்று ஜப்பான், இந்தோனேசியா, கனடா உள்பட பல நாடுகள் சுனாமி அலை கண்டுபிடிப்பு கருவிகளை வைத்துள்ளன. மேலும் இந்த 26 நாடுகளும் சுனாமி பற்றிய தகவல் எப்போது கிடைத்தாலும் ஒருவருக்கொருவர் தெரிவித்து உஷார் படுத்திக்கொள்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடலிலும் சுனாமி அலைகள் தோன்றலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுனாமி ஆபத்தில் உள்ள 26 நாடுகளும் தங்கள் அமைப்பில் சேர்ந்து கொள்ளும்படி தெரிவித்தன. அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் சுனாமி ஆபத்தை கூறி இந்தியாவை வலியுறுத்தின. கனடாவில் சுனாமி பற்றிய ஆய்வை இந்தியரான மூர்த்தி என்பவர் செய்து வருகிறார். அவர் இந்திய அரசை தொடர்பு கொண்டு சுனாமி அலைகளை கண்டுபிடிக்கும் கருவிகளை இந்தியா வைத்து இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். பல தடவை அவர் உஷார் படுத்தியும் இந்திய அரசு எதையும் கண்டுகொள்ள வில்லை. நவீன கருவிகளை வாங்கி நிறுவ எங்களிடம் போதுமான பணம் இல்லை என்று கூறி மத்திய அரசு கை விரித்து விட்டது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல இப்போது சுனாமி எச்சரிக்கை கருவிகளை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கருவிகள் அமெரிக் காவிடம் இருந்து வாங்கப்படு கின்றன. இதுதவிர சுனாமி ஆபத்தை அறியும் 26 நாடுகள் குழுவில் இடம் பெறவும் மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக மத்திய அறிவியல் துறை ராஜாங்க மந்திரி கபில்சிபல் அறிவித்துள்ளார். மேலும்... - anpagam - 12-28-2004 மேலும்... http://tamildesam1.free.fr/27122004/281220...0fast%20play.rm - anpagam - 12-29-2004 <b>மூன்று நாட்களிற்கு முன்னதாகவே பேரழிவு ஏற்படப்போவதை சிறீலங்கா கண்டுபிடித்திருக்க முடியும் - ஐப்பானிய நிறுவனம் </b> ஜப்பானிய ஜெய்கா உதவி நிறுவனம் பேராதெனிய பல்கலைகழகத்துக்கு வழங்கிய புவியதிர்வை அளவிடக்கூடிய கருவி உரிய முறையில பயன்படுத்தப்பட்டிருக்குமானால் கடந்த ஞாயிற்றுக்கிழ்மை ஏற்பட்ட கடல் பெருக்கு அனர்த்த்தினால் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகளை தவிர்;த்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்க்கா நிறுவன பேச்சாளர் இன்று இது தொடர்பாக தகவல் அளிக்கையில் தம்மால் அனபளிக்கப்பட்ட உயர் தொழில்நுட்பம் பொருந்திய புவியதிர்வை அளவிடும் கருவியை பயன்படுத்தியிருந்தால் மூன்று நாட்களுக்கு முன்னரேயே புவியதிர்வு ஏற்படப்போவதை அறிந்து பெருமளவு மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்தார். நன்றி:புதினம் |