Yarl Forum
பிரதமரை மக்கள் விரட்டியடித்துள்ளனர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: பிரதமரை மக்கள் விரட்டியடித்துள்ளனர் (/showthread.php?tid=6018)



பிரதமரை மக்கள் விரட்டியடித்துள்ளனர் - vasisutha - 12-30-2004

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் காட்ட வடக்கிற்கு வந்த பிரதமரை மக்கள் விரட்டியடித்துள்ளனர்

கடற்புவி நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்தவொரு உதவியையும் வழங்காது இனவாத ரீதியாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா அரசின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குழுவினர் யாழ் மந்திகை நலன்புரி நிலையத்திற்கு வந்தபோது அங்கிருந்த மக்கள் அவர் மீது பழம்சோற்றை வீசி விரட்டியடித்துள்ளனர்.

இராணுவத் தொடரணி பாதுகாப்பு மூலம் ஸ்ரீலங்கா பிரதமர் ராஜபக்ச அமைச்சர் பெர்னான்டோபுள்ளேயும் அடங்கிய குழுவினர் மந்திகை நலன்புரி நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.

அவ்வேளை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மகிந்த ராஜபக்ச மீதி பழம்சோற்றைக் கொட்டியும் பெர்னான்டோபுள்ளேயையும் தள்ளியும் விரட்டினர்.

தமக்கான உதவிகள் யாவற்றையும் இனவாத ரீதியில் வழங்காது தடுத்துவிட்டு இப்பொழுது மேற்கொள்ளும் அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்தும் முகமாகவே இக்காரியத்தைச் செய்தனர்.

மக்கள் விரட்டியடித்ததை அடுத்து அங்கிருந்து சென்ற மகிந்த ராஜபக்ச குழுவினரை வரணியில் வைத்து ஊர்திகளில் சென்று இளைஞர் குழு ஒன்று விரட்டியது.

அப்போது அங்கிருந்து வேகமாக ஓடிய ராஜபக்ச குழுவினர் வரணி ஸ்ரீலங்கா இராணுவமுகாமிற்குள் நுழைந்தனர்.

அங்கிருந்து அவர்களை வெளியேறச் செல்லாது மக்கள் பார்த்து நின்றனர். இதன் பின் பலாலியிலிருந்து உலங்குவானூர்தி ஒன்று வரணி இராணுவமுகாமிற்கு வந்து மகிந்த ராஜபக்சவையும் பெர்னான்டோபுள்ளையையும் ஏற்றிச்சென்றது.

இது போல் ஈ.பி.டி.பி தேசவிரோதிகளும் ஜே.வி.பியினரும் மற்றும் ரில்வின் சில்வா விமல் வீரவன்ச ஆகியோர் உதவிகளை மக்களுக்கு வழங்குகின்ற போர்வையில் இன்று நெல்லியடிக்கு வந்தபோது அவர்களை மக்கள் விரட்டியடித்தனர். அப்போது நெல்லியடியிலுள்ள ஈ.பி.டி.பி தேசவிரோதிகள் முகாமிற்குள் சென்று அவர்கள் ஒழிந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா பிரதமர் குழுவினர்ää ஈபிடிபி குழுவினர்ää ஜே.வி.பி. குழுவினர் என்று தற்போது தனித்தனிக் குழுவாக வௌவேறு சர்வதேச பிரதிநிதிகளுடன் வடக்கிற்கு வரமுயலும் இவர்கள் தெற்கில் வாழும் மக்களுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் காண்பிப்பதற்காக வீடியோ படப்பிடிப்பை நடாத்திக்கொண்டே உதவி வழங்க முயன்றுள்ளார்கள் என்று தெரியவருகிறது.

thatstamil.com


- tamilini - 12-30-2004

நல்ல வேலை செய்தார்கள்... !


- shanmuhi - 12-30-2004

சிங்கள மக்களின் பிரதமருக்கு தமிழீழத்தில் விளக்குமாத்து அடி மலசலகூட கழிவில் மூழ்கினர்.

(வியாழக்கிழமை) 30 டிசெம்பர் 2004 , ( நாவலன் )
சிங்கள மக்களின் அரசியல் தலைவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் ஜே.வி.பி இன்; பிரசாரச் செயலாளர் விமல் விரவின்ச ஆகியோரை தமிழ்ப் பெண்கள் விளக்குமாற்றால் அடித்தும் மலசலகூடக் கழிவால் வீசியும் துரத்தியுமுள்ளனர். மகிந்த ராஜபக்ச மற்றும் ஜெயராஜ் பனான்டோ புள்ளை ஆகியோரைப் பொதுமக்கள் பலமாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் தமிழ் மக்களின் அவலத்தை அரசியலாக்க வடமராட்சிக்குப் பயணம் செய்த பிரதமர் உட்பட ஜே.வி.பி யினரையும் ஈ.பி.டி.பி யினரையும் வெளியேறுமாறு வடமராட்சி மக்கள் கோரிவருகின்றனர் என்றும் ஆனால் ஈ.பி.டி.பி தேசத்துரோகிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றது.

மேலதிக தகவல் விரைவில் தருவோம்.

நன்றி : நிதர்சனம்


- Mathan - 12-30-2004

shanmuhi Wrote:சிங்கள மக்களின் பிரதமருக்கு தமிழீழத்தில் விளக்குமாத்து அடி மலசலகூட கழிவில் மூழ்கினர்.

Confusedhock:


- aathipan - 12-30-2004

சரியான செயல்தான். உலகநாடுகளுக்கு புகைப்படம் எடுத்துக்காட்ட இந்த நாடகம் இதற்கு ஈபிடிபி கூலிகளைப்பயன்படுத்துகின்றனர்.நல்லபாடம்


- aathipan - 12-30-2004

இந்த உதவிகளை மறுத்தால் இவர்களது ஊடகங்கள் புலிகள் தான் பின்னின்று உதவிகள் வழங்குவதைத்தடுத்தார்கள் என்று ஒரு செய்தியைப்பரப்பக்கூடும்.


- KULAKADDAN - 12-30-2004

¿øÄ §Å¨Ä...


- tamilini - 12-30-2004

:evil: :twisted:


- இராவணன் - 12-31-2004

பக்கம் மூடப்படுகிறது.