Yarl Forum
ஈ.பி.டி.பி குழுவினர் என்று நினைத்தே விரட்டினோம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: ஈ.பி.டி.பி குழுவினர் என்று நினைத்தே விரட்டினோம் (/showthread.php?tid=6004)



ஈ.பி.டி.பி குழுவினர் என்று நினைத்தே விரட்டினோம் - Mathan - 12-31-2004

'ஈ.பி.டி.பி குழுவினர் என்று நினைத்தே பிரதமர் குழுவினரை விரட்டினோம்"

தெ.அருணன் வெள்ளிக்கிழமை 31 டிசம்பர் 2004 15:01 ஈழம்

யாழ் குடாநாட்டுப் பகுதிக்கு நேற்று இராணுவத்தினரின் பாதுகாப்புடன் வந்தவர்களை ஈ.பி.டி.பி. குழுவினர் என்று நினைத்தே தாம் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவென நேற்று வரணிப் பகுதிக்குச் சென்ற சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரை ஊர்திகளி;ல வந்த இளைஞர் குழுவொன்று விரட்டிவிட்டது. இதனை அடுத்து வரணி இராணுவ முகாமினுள் ஓடி ஒளிந்த பிரதமர் குழுவினர் பின்னர் அங்கிருந்து பலாலி ஊடாக கொழும்பு திரும்பினர்.

இது தொடர்பாக மக்கள் கருத்துத் தெரிவி;க்கையில்-

'வழக்கமாக இராணுவப் பாதுகாப்புடன் குடாநாட்டில் ஈ.பி.டி.பியினர் திரிவதுதான் வழக்கம். ஆகவே நேற்றைய தினம் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் வந்த குழுவினரை ஈ.பிடி.பி. யினர்தான் என்று நினைத்தே நாம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.

'அரசு வடக்கு கிழக்குக்கு உரிய நிவாரணங்களை வழங்கவில்லை என்ற ஆத்திரம் எமக்கு உள்ளபோதும்ää நேற்று இடம்பெற்ற சம்பவம் அரசுக்கு எதிரான எமது அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பவம் அல்ல. அது ஈ.பி.டி.பியினர் எனத்தப்பாக எடைபோட்டு விட்டதால் ஏற்பட்ட துர்ப்பாக்கிய விபத்து.

'ஆனாலும்ää மக்கள் மீளாத்துயரில் மூழ்கியுள்ள வேளையில்ää அரசினர் இவ்வாறு தரிசனம் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இதை அரசு உணரவேண்டும்."- என்றனர்.

http://www.eelampage.com/index.shtml?id=20...11501518719&in=


- Nada - 01-01-2005

கொஞ்சநேரம் மகிழ்ச்சியாக இருந்தாம் அதை கெடுத்துவிட்டீர்களே. பொய் சொல்லாதீர்கள் பிரதமர் என்றுதானே விரட்டினீர்கள்?


- tamilini - 01-01-2005

எப்படி நினைச்சோ செய்ய வேண்டியதை செய்தாச்செல்லோ அது போதும்..!


- KULAKADDAN - 01-01-2005

þÐ ºõÀóòÁ¡¸ °¼í¸Ç¢¨Ä (À¢À¢º¢) ¸¡¦½ø¨Ä


- Nanthaa - 01-01-2005

மக்கள் பிரதம் என்பதைப்புரிந்துதான் அடித்தார்கள் என்பதை தாயகத்து ஊடகமான புலிகளின் குரல் உட்பட்ட செய்திகள் தெரிவித்தன. ஆனால் உந்த புதினம் ஏன் உப்பிடி புழுகுது ? சனத்தை ஏமாத்துது உப்பிடியொரு செய்தியைப்போட்டு Idea


- thamizh.nila - 01-01-2005

விழுந்தாலும் மீசையில மண் முட்ட கூடாது தானே...இவங்கட கூத்து எங்களுக்கு என்ன புதிதா?