![]() |
|
என்ன கொடுமை இது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: என்ன கொடுமை இது (/showthread.php?tid=5995) |
என்ன கொடுமை இது - Vaanampaadi - 01-01-2005 இயற்கை அனர்த்தத்தால் காப்பாற்றப்பட்ட இரு சிறார்கள் விலைபேசி விற்பனை! மட்டக்களப்பு ஈழநாதம் சனிக்கிழமை 01 சனவரி 2005 13:59 ஈழம் இயற்கை அனர்த்தத்தினால் நிர்கதியான இரு சிறார்களை நபர் ஒருவர் காப்பாற்றி விற்பனை செய்துள்ளதாக தெரிவந்துள்ளது. கொழும்பு வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த கஸ்தூரி-7 கரன்-5 ஆகிய இரு சிறார்களுமே இவ்வாறு விற்பனை செய்யபட்டுள்ளதாக இரு பிள்ளைகளையும் பறிகொடுத்து பரிதவிக்கும் தயார் வாசுகி தெரிவித்துள்ளார். வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டக்களப்பு டச்பார் பகுதியின் உள்ள உறவினர் வீடொன்றிற்கு நத்தார் பண்டிகைக்காக வந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்குண்டதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு திராய்மடுவைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த சிறார்களை விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட நபர் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - thamizh.nila - 01-01-2005 அடக் கடவுளே... மற்றவர் துன்பத்தில் இப்படி இன்பம் கொள்கிறார்களே... :twisted: - aathipan - 01-02-2005 சிங்களப்பகுதியில் கடல் அலையில் அடிக்கப்பட்டு நிர்கதியான பெண்களுடன் சில காடையர்கள் வல்லுறவு புரிந்துள்ளதாகவும் தெரிகிறது. அத்துடன் பொருட்க்களை பறித்து பயமுறுத்தி அனுப்புவதாகவும் செய்திகள் வருகின்றன. இந்தியாவில் பிணங்களில் இருந்து தங்க நகைளை சிலர் திருடிச்செல்வதும் தெரியவந்துள்ளது. - thamizh.nila - 01-02-2005 கடவுள் இப்படி பட்டவர்களை கடலோடு ஏன் எடுக்கவில்லை? :twisted: |