![]() |
|
காலத்தின் தேவைதனை sun t.v உணர தவறிவிட்டது. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: காலத்தின் தேவைதனை sun t.v உணர தவறிவிட்டது. (/showthread.php?tid=5994) |
காலத்தின் தேவைதனை sun t.v உணர தவறிவிட்டது. - தமிழரசன் - 01-01-2005 காலத்தின் தேவைதனை Sun TV உணர தவறிவிட்டது. சமூகவாழ்வியலில் ஊடகம் (ஆநனயை) என்பது மிகமுக்கியமான ஒரு வழிகாட்டியாக விளங்குகின்றது. அந்தவகையில் தொலைக்காட்சி மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது, அதிலும் தமிழு; நாட்டிலிருந்து (South India)அதிகமான உலகநாடுகளில் ஓளிபரப்பாகின்ற suntvதமிழர்களிடையே ஒரு பிரபல்யமான தொலைக்காட்சி அலைவரிசையாக திகழ்கின்றது. அது யராலும் மறுக்கபடாத உண்மை. இவ்வாறன ஒரு தமிழர் சார்ந்த ஊடகம் காலத்தின் தேவைதனை உணர்ந்து, தனது கடமைதனை செய்யத்தவறியிருக்கின்றது. ஆசிய கண்டத்தில் ஏற்பட்ட கடல் பூகம்பத்தால் (TSunami) 125,000 மேலான மனித உயிர்கைளை எம் மானிடசமூகம் இழந்து, உலகமே சொல்லொணாத் துயரத்திலும் சோகத்திலும் மூழ்கியிருக்கின்றது. அதிலும் எமது தமிழ் சமூகம் தமிழ் நாட்டிலும,; இலங்கையிலும் 50,000 மேலான தமிழ் உறவுகளையும,; பல கோடிக்கணக்கான சொத்துக்களையும,; வாழ்விடங்களையும,; இழந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இவ்வாறன ஒரு சூழ்நிலையில் suntvதனது அன்றாட ஒளிபரப்புக்களான களியாட்ட நிகழ்வுகள்;, நகைச்சுவை காட்சிகள், நாடக தொடர்கள், நாளுக்கு ஒரு சுவையாக திரைப்படங்களையும் இடைவிடாது ஒளி பரப்பிக்கொண்டிருக்கின்றது. நேர இடைவெளிக்குள் விசேட செய்திகளென சில பூகம்ப நிகழ்வுளை ஒளிபரப்பிய, மறு விநாடி மன்மதராச போன்ற இளமை துள்ளும் பாடல்களையும், ஊழஅநனல வுiஅநஇ கொண்டாட்டம், நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றது. இவர்களுக்கு இலங்கை தமிழர்களின் அவல ஒலி தான் கேட்கவில்லை என்றுதான் வைத்தாலும்கூட, ஏன் இவர்களுக்கு சென்னையின் அவல ஒலி கூடவா கேட்கவில்லை?... ஆனால் அவர்களுக்கு மெட்டி ஒலி மட்டும் தவறாமல் கேட்கின்றது. அதைவிட நேற Year Special என காலத்திற்கு ஒப்பாத பல நிகழ்ச்சிகளை தயார்படுத்தி வைத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில், குறிப்பாக நடிகர் சிவாஜிகணேசன், தி.மு.க முரசொலிமாறன் போன்றவர்களின் மரணச்சடங்குகளின் போதும், கருணாநிதி பொலிசாரினால் கைது செய்யப்பட்ட போதும் Year Special ஒளிபரப்பாகிய ஒளிபரப்புக்களையும்,அன்று இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை புறக்கணித்தவர்கள், ஏன் இன்று புறக்கணிக்கவில்லை) இன்று அவர்கள் ஒளிபரப்புகின்ற ஒளிபரப்புக்களையும் கருத்தில் கொள்ளும்போதும் ஒன்றைமட்டும் இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது, அதாவது suntv என்கின்ற இவ் தொலைக்காட்சி ஊடகம் வெறுமனே CINEMA என்ற காற்றை சுவாசித்துக்கொண்டு, தி.மு.க என்ற அரசியல் கூட்டணிக்கு வசைபாடிக்கொண்டும், அக் கூட்டணியையும், அது சார்ந்த குடும்பத்தினரையும் வாழவைக்கும் ஒரு நிறம்மாறும் ஒரு பச்சோந்தி இது தானா எம் சன் தொலைக்காட்சியின் மனிதநேயம்.?? நன்றி-நிதர்சனம் - aathipan - 01-01-2005 சன்டிவியின் செய்தி சனலில் முழுவதுமாக சுனாமியால் ஏற்றபட்ட அனர்த்தம்காட்டப்படுகிறது. ஆனால் மற்ற சனல்களில் எல்லாம் அப்படி செய்யமுடியாது என நினைக்கிறேன். எல்லாம் வியாபாரம் தானே!. அத்துடன் நிகழ்ச்சிகளை நிறுத்த முடியாது ஒப்பந்தங்களின் படி விளம்பரங்கள் ஒலிபரப்பவேண்டும். இப்படிப்பல பிரச்சனைகள் இருக்கும். - kumarasamyy - 01-01-2005 :oops: :oops: :oops: :?: :?:
- ஊமை - 01-01-2005 <!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->சன்டிவியின் செய்தி சனலில் முழுவதுமாக சுனாமியால் ஏற்றபட்ட அனர்த்தம்காட்டப்படுகிறது. .<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதென்ன செய்திச் சனல் அப்படியொரு பிரிவு தனியாக இயங்குகிறதா ? தகவல் தாருங்கள் - Nanthaa - 01-01-2005 <!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->சன்டிவியின் செய்தி சனலில் முழுவதுமாக சுனாமியால் ஏற்றபட்ட அனர்த்தம்காட்டப்படுகிறது. ஆனால் மற்ற சனல்களில் எல்லாம் அப்படி செய்யமுடியாது என நினைக்கிறேன். எல்லாம் வியாபாரம் தானே!. அத்துடன் நிகழ்ச்சிகளை நிறுத்த முடியாது ஒப்பந்தங்களின் படி விளம்பரங்கள் ஒலிபரப்பவேண்டும். இப்படிப்பல பிரச்சனைகள் இருக்கும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஒப்பந்தக்காறருக்கு உயிர் போகாதோ :? :? :? சண்ரீவியில் இருக்கின்ற ஆதியின் அபாரமான விசுவாசத்துக்கு வாழ்த்துக்கள். நன்னா தொடருங்கோ உங்க ஆராதனையை ஆதிபன் :twisted: :twisted: :twisted: - tamilini - 01-02-2005 ம் இங்க இருக்கிற தொலைக்காட்சிகள் கிட்டத்தட்ட 5 நாள்கள் யாவற்றையும் நிறுத்தினவர்கள் தானே.. ஆனால் அவர்கள் நியு}ஸ்க்க தனியா ஒரு சனல் வைத்திருப்பதனால் தான் செய்யலையோ தெரியலையே..! - aathipan - 01-02-2005 சன் டிவிக்குச்சொந்தமாக பல சனல்கள் பலமொழிகளில் உண்டு. தமிழில் மட்டும் நான்கு உண்டு கே டிவி சன் டிவி சன் நியூஸ் மற்றும் எஸ்சிவி(இதுவும் சன்டிவியுடையது என்று பேச்சு. இது உள்ளுர் சனல்). இதில் சன் செய்திகள் என்ற சனலில் எப்போதும் சூடான செய்திகள் விவாதங்கள் நடக்கும் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்வார்கள். மற்ற சனல்கள் எந்தக்காரணத்திற்காகவும் நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்தாது. இந்தியாவில் விபத்துக்கள் அனர்த்தங்கள் சகஜம் எங்கோ ஒரு மூலையில் எப்போதும் விபத்து நடந்துகொண்டுதான் இருக்கும். அதற்கெல்லாம் அவர்கள் தமது சேவையை நிறுத்த முடியாது. உதாரணமாக மெட்டியொலி தாயரிப்பாளருடன் அவர்கள் ஒப்பந்தம் செய்து இருப்பார்கள். சொன்ன படி ஒளிபரப்புவராக அப்படி நடக்காத ஒளிபரப்ப தவறினால் ஒப்பந்தமீறலாக கருத வாய்ப்புண்டு. அது தவிர அது வியாபார சனல். நிதர்சனம் போன்றதல்ல. அவர்களிடம் நாம் இதை எதிர்பார்க்க முடியாது. உண்மையைச்சொல்லப்போனால் மற்ற சனல்களை விட சன்டிவிமேல். ஜெயாää ராஜ்ää விஜய் போன்றவை எந்த மாற்த்தையும் செய்யவில்லை. செய்திகளில் மட்டும் காட்டினார்கள். மற்றபடி ஏதும் செய்தி கிடைத்தால் அதை திரையில் ஓடவிடுவதுடன் சரி. சன் டிவிக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. திமுக அனுதாபியும் அல்ல நான். உண்மையைச்சொன்னேன் அவ்வளவுதான். - Thusi - 01-03-2005 சரி அவங்கள் தான் தங்கடை நிகழ்ச்சிகளை விடாமல் ஒளிபரப்புகிறார்கள் என்றால் இங்குள்ளவர்கள் சிலர் (அநேகமாய் பலராய்தான் இருக்கும்) தவிக்கும் உறவுகளைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பதைவிடவும் மெட்டிஒலியில் வரும் கதாநாயகிகளுக்காய் கண்ணீர் வடிப்பதே தமது கடமையென்றிருக்கும்போது யாரை நோவது? இது ஒன்றும் நான் கற்பனையில் எழுதவில்லை. எனது கண் முன்னால் நடந்ததைத்தான் எழுதுகின்றேன். - kuruvikal - 01-03-2005 நடந்து முடிந்ததற்கு ஒப்பாரி வைத்துத்தான் ஆகப் போவதென்ன...நடந்ததற்கு நடக்க இருக்கிறத்திற்கு இழப்பீடும் விளக்கமும் தேடுவதுதான் இப்ப தேவை... என்று எண்ணிவிட்டார்கள் போலும்...! மற்றவர்களின் துக்கத்தை தம்மோடு பகிர்ந்து கொள்வது ஒரு மனிதப் பண்பு மட்டுமல்ல..காக்கைக்குக் கூட இருக்கு...அது அவைக்கு எச்சரிக்கையும் கூட...ஒரு முறை ஒரு விலங்குகள் சரணாலயத்திற்கு சில அவதானிப்புக்களுக்காக சென்ற போது அங்கே கூட்டில் வாழ்ந்த சக குரங்கு காயப்பட்டு விட்டது என்பதற்காக சக குரங்குகள் உணவே உண்ணவில்லை....காயப்பட்ட குரங்கைப் பிடித்து அதற்கு மருந்து போட்டு பண்டேஷ் பண்ணிவிட்ட பின்னர்தான் குரங்குகள் உணவுண்டன....மனிதருக்குள்...இந்தளவு ஒற்றுமை...மற்றவர்களின் உணர்வுகளோடு ஒருமிக்கும் தன்மை இருக்குமோ என்பது கேள்விக் குறிதான்....????! இப்போ உலகில் மனிதர்களின் நடவடிக்கைகள் வெளித் தோற்றத்துக்காகவே அன்றி மனப்பூர்வமானதாக மற்றவர்களின் மனநிலையறிந்து அதற்கேற்பதாக இருப்பதாகத் தெரியவில்லை...மனிதன் அப்படித்தான் மாறிக் கொண்டு வருகிறான்... பலதும் வெளிவேஷம்...! - vasisutha - 01-03-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 01-04-2005 :| - shiyam - 01-04-2005 சண் தொலைக்காட்சி மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து தொ:காட்சியுமே மானம் விற்று வயிறு கழபுபவைதான் காசிற்காய் கட்டியிருக்கும் கோமணத்தையும் விப்பவர்கள் - aathipan - 01-04-2005 இன்று சன்டிவியில் இருந்து முல்லைத்தீவில் ஏற்பட்ட பாதிப்புகளைக்காட்டினார்கள். விடுதலைப்புலிகளின் பேட்டியையும் காட்டி உண்மை நிலையை உலகத்தமிழர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அதற்கு நன்றி. - tsunami - 01-12-2005 சன் டிவியின் பல அலைவரிசைகள் உண்டு அதில் சினிமா நாடகம் காட்டும் அலைவரிசை தமிழர் பகுதி எல்லாம் மிகக்குறைந்த விலையிலும் அல்லது இலவசமாகவும் அதனை மீள் ஒளிபரப்பு செய்வதற்கு சில வியாபாரிகளுக்கு இந்திய உளவு நிறுவனமான றோ ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாக நான் தமிழீழம் போனபோது கதைத்துக்கொண்டார்கள். அதில் உண்மை இருக்குப்போல எனக்கும் படுகிறது ஏன்என்றால் தமிழர் தாயகப்பகுதியில் பல தனியார்களிடம் சன்டிவி மீள்ஒளிபரப்பு செய்யப்படும் சாதனங்களும் அதற்கான அனுமதியும் இலவசமாக வழங்கி இருக்கிறார்கள் சிலர் இந்த சனல்களை கேபிள்கள் மூலமும் வீடுகளுக்கு கொடுத்து வருகின்றார்கள். யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் ஒரே தினத்தில் படங்கள் வெளியிடப்படுகின்றன..... இது எல்லாவற்றுக்கும் பின்னால் தமிழர்களை திசை திருப்புகின்ற இந்திய புலனாய்வுப்பிரிவின் கைகள் இருப்பதை நன்கு அவதானித்தால் கண்டுபிடிக்க முடியும்...... எல்லாக்காரண காரியங்களுக்கும் ஒரு அரசியல் பின்னணி இருப்பதை நீங்கள் காணும் ஒவ்வொரு விடயங்களிலும் அவதானியுங்கள்..... உங்களை அறிவுள்ளவர்களாக மாற்றிக்கொள்ளுங்கள் என்னை தொடர்ந்தும் பேசாதையுங்கோ..... நான் செய்த பாவங்களில் இருந்து என்னை விடுவிக்க எனக்கு சந்தர்பங்கள் தாருங்கோ...... |