![]() |
|
இலங்கை 2வது நாளாக மழை: மீட்பு பணிகள் பாதிப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இலங்கை 2வது நாளாக மழை: மீட்பு பணிகள் பாதிப்பு (/showthread.php?tid=5980) |
இலங்கை 2வது நாளாக மழை: மீட்பு பணிகள் பாதிப்பு - Vaanampaadi - 01-02-2005 ஜனவரி 02, 2005 இலங்கை 2வது நாளாக மழை: மீட்பு பணிகள் பாதிப்பு கொழும்பு : இலங்கையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் பாதிப்படைந்துள்ளன. அதே நேரத்தில் கடல் கொந்தளிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 30,000த்தை நெருங்கியுள்ளது. இலங்கையில் சுனாமி தாக்குதலுக்கு 29,729 பேர் பலியாகியுள்ளனர். இதில் 12,000க்கும் அதிகமானோர் வடகிழக்குப் பகுதியில் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,240 பேரைக் காணவில்லை. 16,665 பேர் காயமடைந்துள்ளனர். 805,978 பேர் வீடிழந்தனர். மொத்தம் 91,059 வீடுகள் இடிந்தன. 24,942 வீடுகள் சேதமடைந்தன. மீட்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் உதவி புரிகின்றன. இந் நிலையில் நேற்று அங்கு கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளத்தால் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திரிகா அறிவிப்பு: இதற்கிடையே இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, சுனாமி வருவதை முன்னரே அறிந்து கொள்ளும் ஆய்வு மையம் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுனாமி வருவதைத் தெரிவிக்கும் எச்சரிக்கை மையம் எதுவும் இல்லை. விரைவில் இந்தியாவுடன் சேர்ந்து சுனாமி வருவதை முன்னரே அறிந்து கொள்ளும் ஆய்வு மையம் அமைக்கப்படும். விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சவார்த்தை நடத்த தயார் என்றும் தெரிவித்தார். |