![]() |
|
இலங்கையில் 12 மீன்பிடி துறைமுகங்கள் அழிந்தன - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இலங்கையில் 12 மீன்பிடி துறைமுகங்கள் அழிந்தன (/showthread.php?tid=5969) |
இலங்கையில் 12 மீன்பிடி துறைமுகங்கள் அழிந்தன - Vaanampaadi - 01-03-2005 சுனாமி தாக்குதலால் இலங்கையில் 12 மீன்பிடி துறைமுகங்கள் அழிந்தன கொழும்பு, ஜன. 3_ இலங்கையில் சுனாமி பேரலைத் தாக்குதலால், அந்த நாட்டில் மொத்தம் உள்ள 14 மீன்பிடி துறைமுகங்களில் 12 அழிந்து போயின. கொழும்பு அருகே உள்ள முட்வால், மன்னார் தீவில் உள்ள கல்பிட்டியா ஆகிய மீன்பிடித் துறைமுகங்கள் மட்டும் சேதம் இல்லாமல் தப்பித்தன. மற்ற அனைத்தும் முற்றிலும் அழிந் தன. இவற்றை மீண்டும் புனரமைக்க 3 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப் படும் என்று இலங்கை அரசு அறிவித்து உள்ளது. மொத்தம் உள்ள 30 ஆயிரம் மீன்பிடி படகுகளில் 75 சதவீதம் முற்றிலும் அழிந்து போய்விட் டன. யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பருத்தித்துறையில் இருந்து தெற்கு மாநிலத்தில் உள்ள கல்லே மாவட்டம் வரை ஒரு லட்சத்து 71 ஆயிரம் மீனவர்கள் இருந்த னர். அவர்களில் 90 சதவீதம் பேர் சுனாமியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். விடுதலைப்புலிகளின் பகுதி யில் முல்லைத் தீவில் மட்டும் ஆயிரத்து 500 மீன்பிடி படகுகள் இருந்தன. அவற்றில் 14 தான் எஞ்சி இருக்கின்றன என்று கடற் புலிகள் பிரிவுத் தலைவர் சூசை தெரிவித்தார். நன்றி: தினதந்தி |