Yarl Forum
கொழுப்பை கண்டறியும் பெலாட்ரின் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: கொழுப்பை கண்டறியும் பெலாட்ரின் (/showthread.php?tid=5924)



கொழுப்பை கண்டறியும் பெலாட்ரின் - ஊமை - 01-06-2005

நமது உடம்பில் இருக்கும் கொழுப்பின் (கொலஸ்ட்ரோல்) அளவை இதுவரை ரத்தத்தை எடுத்து அதனை சோதித்து பார்த்து கண்டறிந்து வந்தார்கள். இப்போது நவீன ஆராய்ச் சியின் புதிய முறையில் கொலஸ்ட்றோலை கண்டறியும் பெலாட்ரின் என்ற நவீன சோதனை கண்டறியப்பட்டுள்ளது. நமது உடம்பில் எல்.டி.எல் என்கின்ற கெட்டக் கொழுப்பும், ஏச்.டி.எல் என்கின்ற நல்ல கொழுப்பும் உள்ளது. எல்.டி. எல் நமது உடம்பில் அதிகமி ருந்தால் இருதய ரத்தக் குழாய்க ளில் படிந்து இருதய நோய் களை உண்டாக்கும். ஏச்.டி. எல் கொழுப்பு எவ்வளவு அதிகமிருந்தாலும் எந்த பாதிப்புமில்லை. பெலாட்ரின்-
நவீன சோதனை முறையில் ரத்தத்தை உறிஞ்சு எடுத்து சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஈ.ஸி.ஜி எந்திரம் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள பெலாட்ரின் சாதனத்தின் மூலம் நமது உடம்பில் இருக்கும் கெட்டக் கொழுப்பு எவ்வளவு, நல்ல கொழுப்பு எவ்வளவு என்று துல்லியமாக கண்டுபிடித்து விடலாம். இங்கிலாந்தில் ஸ்ரொக் ஹோம் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்தான் இந்த பெலாட்ரின் நவீன கொலஸ்ட்ரோல் கண்டறியும் எந்திரத்தை கண்டறிந்துள்ளனர். வரும் யூன் மாதத்திலிருந்து நடைமுறைக்கு உலகம் முழு தும் இந்த எந்திரம் புழக்கத்திற்கு வரப்போகிறது.