Yarl Forum
புத்தகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: புத்தகம் (/showthread.php?tid=5889)



புத்தகம் - Thusi - 01-08-2005

புத்தகம் - படித்ததில் பிடித்தது.

புத்தக வாசனை வரும்போதெல்லாம்
பள்ளிக்கூட வாத்தியார்கள்
பிரம்போடு வருகிறார்கள்.

ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது
ஒரு உலகம் திறந்து கொள்கிறது.
ஒரு புத்தம் எரிகிறபோது
ஒரு அனுபவம் எரிகிறது.

எது எடுத்தாலும் பத்து ரூபாய் கடை
எல்லாப் புத்தகங்களையும்
நின்று கொண்டே படிக்கிறது
வறுமை.

பெரிய பெரிய புத்தகம் எழுதுகின்றவர்கள்
புண்ணியம் செய்கிறவர்கள்.
ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்
உருட்டிய சப்பாத்திகளை
எடுத்து வைக்க அவைதான்
வசதியாக இருக்கின்றன.

புத்தகங்களை
சரியாக விமர்சிப்பது
கறையான்கள் மட்டுமே.
சில புத்தகங்களை
கரைத்துக் குடிக்கின்றன.
சில புத்தகங்களை
கடித்துக் குதறுகின்றன.

புத்தக வரிகளில்
கோடு போட்டுப் படிக்கிறவர்கள்
எங்கேயோ இருக்கும் எழுத்தாளனுக்கு
இங்கிருந்தே கைகுலுக்குகிறார்கள்.

குற்றவுணர்ச்சியுடன் படிக்கட்டில்
கால் வைக்காமல்
புத்தகம் திருடுவது
பெரிய கலை.
மாற்றான் அலமாரிப் புத்தகத்திற்கு
மணம் அதிகம்.

உரத்த குரலில்
உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்
நான் படித்த புத்தகங்களில் பாதி
அடித்த புத்தகங்கள்.


கவிதை – நா.முத்துக்குமார்.


- kavithan - 01-08-2005

அருமையாக இருக்கிறது கவிதை .. வாழ்த்துக்கள்


- Aalavanthan - 01-09-2005

நன்றி