Yarl Forum
மனநோயாளி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மனநோயாளி (/showthread.php?tid=5881)



மனநோயாளி - தமிழரசன் - 01-09-2005

மனநோயாளி

நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி.....!

உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.

திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்.....
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு....... நான்

அவை
வெடித்துச் சிதறி....
- மனநோயாளி - என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா...?
நடிப்புடனா...?


- Mathuran - 01-09-2005

அன்பு வணக்கம் தமிழரசன்,

கவிதை புனைந்த விதம் அழகு. கவிதை தனை தாங்கிநிற்கும் கரு வேதனயின் விம்மல். இக் கவிதைக்கு யார் சொந்தக்காரராக இருந்தாலும். நாம் ஒன்றை புரிந்து கொள்வோம், நாம் இந்த உலகத்திற்கு வந்த பொழுது, தனியாகவே வந்தோம் என எண்ணி. தோல்வியும் வெற்றியும் மனித வாழ்வின் இரு கூறுகள். அதனை கருத்தில் கொண்டு, அடுத்த வெற்றிக்காக எங்களை தயார் படுத்திக் கொள்வோம்.

அன்புடன்
விதுரன்


- tamilini - 01-09-2005

கவிதை நன்றாய் இருக்கு தமிழரசன். தம்பி விதுரனின் அறிவுரையும் அபாரம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 01-09-2005

கவிதைக்கு வாழ்த்துகள் தொடர்ந்து படையுங்கள்


- Mathuran - 01-10-2005

வணக்கம் அக்கா,

நன்றி அக்கா, அவரின் கவி வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன. எவ்வள்வு சோகமும் எதிர்பார்ப்பும் நிறைந்த கவிதை. எனக்கு கவிதை எழுதத் தெரியாது. இருந்தும் கவிதைதனை நன்றாக விரும்பி படிப்பேன். அதிலும் ஒரு இன்பம். எனது இரசனைதனை பாராட்டும் பண்பு உங்களுடயது. அதர்க்கு மீண்டும் எனது நன்றிகள்.

அன்புடன்
விதுரன்