![]() |
|
வெளிநாட்டு உதவிகளைப் புலிகளிடம் நேரடியாகக் கையளிப்பதில்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வெளிநாட்டு உதவிகளைப் புலிகளிடம் நேரடியாகக் கையளிப்பதில்லை (/showthread.php?tid=5879) |
வெளிநாட்டு உதவிகளைப் புலிகளிடம் நேரடியாகக் கையளிப்பதில்லை - Vaanampaadi - 01-09-2005 வெளிநாட்டு உதவிகளைப் புலிகளிடம் நேரடியாகக் கையளிப்பதில்லை வீரவன்ஸவின் யோசனைக்கு அரசுத்தரப்பு பச்சைக்கொடி ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான வெளிநாட்டு உதவிகளைப் புலிகளிடம் நேரடியாகக் கையளிப்பதில்லை என இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஐனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இடம்பெற்ற விசேட அனர்த்த நிர்வாகச் செயல ணிக் கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எடுக்கப் பட்டது. ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸவினாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐ.தே.கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய அமைச்சர் பேரியல் அச்ரப் நாடாளுமன்ற உறுப் பினர்களான உடுவே தம்மாலோக தேரர் கீதாஞ் சன குணவர்த்தன விமல் வீரவன்ஸ ஆகியோர் உட்படப்பலர் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் விமல் வீரவன்ஸ மேலும் கருத்துத் தெரிவிக்கையில் - நாட்டுக்குள் வரும் சகல நிவாரணப் பொருள் களையும் விமானப்படையும்ää கடற்படையும் சோத னையிட வேண்டும். சேதமடைந்த வீடுகளை மீள நிர்மாணிக் கும் போது ஒரு சதுர அடிக்கான செலவைக் கணக்கீடு செய்து நிர்மாணப் பணிகள் ஆரம் பிக்கப்படவேண்டும். அதன் மூலம் ஊழல் மோச டிகள் இடம்பெறுவதைத் தடுக்கமுடியும் என் றார். இவரது யோசனைகள் அக்கூட்டத்தில் ஏற் றுக்கொள்ளப்பட்டதாக அறியப்படுகின்றது. அதேவேளை விடுதலைப் புலிகளுக்கு நேரடி யாக உதவி வழங்க வேண்டும் என்று யாழ். விஜயத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் என்று கூட்டத்தில் கிளப்பப்பட்ட சர்ச்சைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜய சூரியா பதிலளிக்கையில் - ரணில் அவ்வாறு பேசவில்லையென்றும் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்; தார். நன்றி: உதயன் - hari - 01-09-2005 எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! - sinnappu - 01-09-2005 Quote:ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான வெளிநாட்டு உதவிகளைப் புலிகளிடம் நேரடியாகக் கையளிப்பதில்லை என இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. ஏனென்டால் இதுக்கு முன்னம் எல்லாம் நேரடியாத்தானே குடுத்தவை வேலையை பாருங்கப்பா :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - thamizh.nila - 01-09-2005 தாத்த சொல்றது சரி...இது என்ன புதுசா? - Danklas - 01-10-2005 º¢ýÉôÒ Quote:ஏனென்டால் இதுக்கு முன்னம் எல்லாம் நேரடியாத்தானே குடுத்தவை வேலையை பாருங்கப்பா ÌÚõÒ... À¡ðʧ¡¼ ¸¨¾ì¸¢ÈÁ¡¾¢Ã¢ ±ôÀ×§Á ¾¡ò¾×ìÌ ÌÚõÒ¾¡ý.. :evil: :evil: - sinnappu - 01-10-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எட உந்தபடத்தை மாத்தப்பு<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/flat3.gif' border='0' alt='user posted image'>
|