![]() |
|
சென்னையில் இன்று நிலஅதிர்வு ஏற்பட வாய்ப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சென்னையில் இன்று நிலஅதிர்வு ஏற்பட வாய்ப்பு (/showthread.php?tid=5874) |
சென்னையில் இன்று நிலஅதிர்வு ஏற்பட வாய்ப்பு - aathipan - 01-09-2005 சென்னை: "தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநில எல்லையோரங்களில் இன்றோ நாளையோ லேசான நிலஅதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.ஆனாலும் இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,' என்று சென்னைப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியியல் நிபுணர் தெரிவித்துள்ளார். சென்னை, பல்கலைக் கழகத்தின் புவியியல் அமைப்பு சார்பில் நில அதிர்வு குறித்து ஆராய்சியில் ஒரு குழு ஈடுபட்டிருந்தது. இக்குழுவில் டாக்டர் ராஜேஸ்வர ராவ், டாக்டர் கே.கே.சர்மா, டாக்டர் பி.பெரியகாளை ஆகியோர் உள்ளனர். இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லையோரங்களில் இன்று மாலை ஆறு மணியில் இருந்து மறு நாள் காலை ஆறு மணிவரை, ஏதேனும் ஒரு நேரத்தில் நில அதிர்வு ஏற்படும். இந்த நில அதிர்வை பொதுமக்கள் உணர முடியாது. இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த நில அதிர்வு 4.5 ரிக்டர் அளவில் இருக்கும் என்றும் அவர்கள் தரிவித்துள்ளனர். - aathipan - 01-09-2005 17. அந்தமானில் நாளை இரவு காத்திருக்கிறது புது ஆபத்து போர்ட் பிளேர்:சுனாமி பீதியில் நடுங்கிக் கொண்டிருக்கும் அந்தமான், நிகோபார் தீவு மக்களுக்கு நாளை இரவு ஆபத்து காத்திருக்கிறது. அந்தமான், நிகோபார் தீவுகளை சுனாமி அலைகள் ஆட்டிப் படைத்து விட்டன. குறிப்பாக, நிகோபார் தீவு சின்னாபின்னமாகி விட்டது. ஆயிரக்கணக்கில் உயிர் பலி. பொருட்சேதமும் ஏராளம். வீடு, உடமைகள் என்று எல்லாவற்றையும் இழந்த ஆயிரக்கணக்கான மக்கள், முகாம்களில் தங்கியுள்ளனர். பூகம்பம் அவர்களை தினமும் வந்து "தாலாட்டி' செல்கிறது. சுனாமி தாக்கிய டிசம்பர் 26ல் இருந்து நேற்றைய தினம் வரை அந்தமான், நிகோபார் தீவுகளில் 110 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 முதல் 6.5 ரிக்டேர் அளவில் அவைகள் இருந்தன. அவற்றின் தாலாட்டு மேலும் தொடரும் என்று பூகம்பவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இத்தீவு மக்களுக்கு நாளை இரவு முதல் இரண்டு நாட்களுக்கு புதிய ஆபத்து காத்திருக்கிறது. நாளை அமாவாசை. சுனாமிக்குப் பின் அந்தமான் கடல் மட்டம் 0.3 மீட்டர் உயர்ந்திருக்கிறது. கடல் சீற்றம் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது."அமாவாசை தினமான நாளை முதல் புதன்கிழமை வரை கடல் அலைகள் அதிக உயரத்தில் எழும். நாளை இரவு 8 முதல் 10 மணி வரையும், மறுநாள் இரவு 9 முதல் 11 மணி வரையும் அலைகள் அதிக உயரத்தில் எழக்கூடும்' என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இதனால், இத்தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. - Sriramanan - 01-09-2005 என்னப்பா சுனாமி வந்தப் பிறகு நில அதிர்வை முன் கூட்டியே அறியக் கூடிய அளவிற்கு உலகம் முன்னேறி விட்டது போல - sinnappu - 01-09-2005
- Danklas - 01-10-2005 ¿£í¸û ¸Å¨ÄÀ¼§¾í§¸¡ ±øÄ¡ò¨¾Ôõ ¯Å ±í¸¼ ÐôÀ÷ŠÃ¡÷ «øÊ§Áð¼÷м¡÷ «ì…ý¸¢í þƢ ¾ÄÀ¾¢ ´øÄ¢ôÀ¢îº¡ý À¢Ã𺢠¸¨Ä»÷. ÝôÀ£ÃÁÉ¢ÂýÍÅ¡Á¢ þóÐÀò¾¢Ã¢¨¸ åõ, ¦ÀÄ¢ŠÅ¢ºÃÌÁ¡÷. (þý¸×ñ¼÷ ¾¨ÄÂý ÀýÉ¡¨¼ «ÅÕìÌ ÌÎò¾ Àð¼í¸û) Шà (Å¢ºò¨¾ÌÎòÐ º¡ì¦¸¡øÄ¢§À¡ðÎ ÐÅì¸¡Ä þý¸×ñ¼÷ ¦ºö¾ ¦ÀÕ¨Á ¯Ä¸¢§Ä§Â «ó¾ ƒ£Åýà ¦ÀÂâ¨Ä¾¡ý þÕìÌ) «¾üì̧ÁÄ¡¸ ¿¡ö ¦º¡È¢ ¾¡ö ¦ƒÂ ±øÄ¡Õõ §º÷óÐ ¿¼ì¸Å¢¼¡Áø ¾ÎòÐÎÅ¢§Éõ... :evil: :evil: - kavithan - 01-10-2005 Sriramanan Wrote:என்னப்பா சுனாமி வந்தப் பிறகு நில அதிர்வை முன் கூட்டியே அறியக் கூடிய அளவிற்கு உலகம் முன்னேறி விட்டது போல ரொம்ப தான் லொள்ளு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-10-2005 Quote:என்னப்பா சுனாமி வந்தப் பிறகு நில அதிர்வை முன் கூட்டியே அறியக் கூடிய அளவிற்கு உலகம் முன்னேறி விட்டது போல http://webulagam.com/news/parimanangal/050...050105025_1.htm இங்கு மேலதிக தகவல்கள் உண்டு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 01-10-2005 தகவலுக்கு நன்றி அக்கா |