Yarl Forum
பிரபாகரன் குறித்த செய்தி வாபஸ்: இலங்கை வானொலி பல்டி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பிரபாகரன் குறித்த செய்தி வாபஸ்: இலங்கை வானொலி பல்டி (/showthread.php?tid=5870)



பிரபாகரன் குறித்த செய்தி வாபஸ்: இலங்கை வானொலி பல்டி - Vaanampaadi - 01-09-2005

ஜனவரி 09, 2005

பிரபாகரன் குறித்த செய்தி வாபஸ்: இலங்கை வானொலி பல்டி

கொழும்பு:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த செய்தியை இலங்கை வானொலி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

கடந்த 26ம் தேதி இலங்கையைத் தாக்கிய சுனாமிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோர் பலியாகியிருக்கலாம் அல்லது காணாமல் போனவர்கள் பட்டியலில் அவர்கள் இடம் பெற்றிருக்கலாம் என்று இலங்கை அரசுக்குச் சொந்தமான இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் நேற்று செய்தி வெளியிட்டது.

இந்த செய்திக்கு விடுதலைப் புலிகள் உடனடியாக மறுப்பும், கடும் கண்டனமும் தெரிவித்தனர். துயரமான இந்த நேரத்தில் இலங்கை அரசு இதுபோன்ற விஷமத்தனமான பொய்ச் செய்தியை பரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில், பிரபாகரன், பொட்டு அம்மன் குறித்து வெளியிட்ட செய்தியை வாபஸ் பெறுவதாக இலங்கை வானொலி இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை கொழும்பு நகரில் இலங்கை வானொலி நிறுவனத்தின் உயர் அதிகாரி வெளியிட்டார்.

இருப்பினும், எதற்காக செய்தி வாபஸ் பெறப்படுகிறது என்ற விளக்கத்தை இலங்கை வானொலி தெரிவிக்கவில்லை.

Source: Thatstamil