Yarl Forum
இது சரியா?????? தவறா??????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இது சரியா?????? தவறா??????? (/showthread.php?tid=5807)



இது சரியா?????? தவறா??????? - Vaanampaadi - 01-13-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40716000/jpg/_40716791_sun203ok.jpg' border='0' alt='user posted image'>
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா தம்பதியினரின் இரண்டாவது மகன் ஹரி தனது நண்பனின் வினோத உடை விழா(fancy dress party)ஒன்றில் கலந்து கொண்ட இளவரசர் ஹாரி உலகப் போரில் இங்கிலாந்திற்கு எதிராக செயல்பட்ட ஹிட்லர் தலைமையிலான நாசிக் கட்சியின் ராணுவ ஆடையை அணிந்து வந்தார்.

அதே உடையில் மது மற்றும் சிகரெட் குடிப்பதுபோல் பிரபல பத்திரிகை முன் பக்க படம் வெளியிட்டு இருந்தது. இது இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இளவரசர் ஹாரி எழுத்துமூலம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். எந்தவித நோக்கத்துடன் அந்த ஆடையை அணியவில்லை. தவறுதலாக இந்த சம்பவம் நடந்து விட்டது என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

இப்ப அவரை பகிரங்கமாக மன்னிப்புக்கோரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.............இப்படிக்கேட்பது சரியா?????தவறா??????


- thaiman.ch - 01-13-2005

இது இப்ப எங்களுக்கு முக்கியமா??? ஏனைய்யா அடுத்தவங்கட பிரச்சனைய போட்டு கின்டுறீங்கள். தமிழர் எங்களுக்கு எத்தனையோ பிரச்சனை இருக்கு அதை முதல்ல பாப்பம். இது இங்கிலந்து மக்களுக்கும் இளவரசருக்கும் உள்ள பிரச்சனை. இதால எங்களுக்கு ஒரு நன்மையும் இல்ல தீமையும் இல்ல.


- Kishaan - 01-14-2005

என்ன thaiman.ch கதைக்கிறீங்கள்.. எங்கடை பிரச்சனை எங்கட பிரச்சனை எண்டு கடைக்காமல்.
பொதுவா உலக விசியங்களை அறியிறது மூளைக்கு ஆரோக்கியம்தானே...

உலகத்தை பற்றி கொஞ்சம் அறிய முயற்சிக்கலாம்தானே...


- thaiman.ch - 01-14-2005

உலகத்தை பற்றி அறியிறது தப்பில்லை குரங்கு. ஆதுக்குள்ள நாங்க எங்கட தலய நுழைக்க நினைக்கிறது தான் தப்பு. இவர் இப்படி உடுப்பு போட்டது தப்பு தான் அதுக்கு நாங்க என்ன பண்ணுற? இங்கிலன்ட் சனங்கள் தான் இதுக்கு பதிலளிக்னும்.


- இவோன் - 01-14-2005

ஆகவே ஓசாமா பின்லாடன் குறித்து சதாம் குறித்து அதற்கும் அப்பால் சிங்கள இனவாதம் குறித்து இவை எது குறித்துமே பேசக்கூடாது என்கிறீர்களா? பின்லாடன் குறித்து ஆப்கான் சவுதீ மக்களும் சதாம் குறித்து ஈராக்கிய மக்களும் சிங்கள இனவாதம் குறித்து சிங்கள மக்களுமே பேசவேண்டுமாம் ஏனெனில் தமிழருக்கு ஆயிரம் பிரச்சனைகளாம்.. ஏதாவது எழுத வேண்டியாக வேணுமே என்பதற்காக என்பதற்காக எழுதாதீர்கள்


- thaiman.ch - 01-14-2005

அய்யா பேசக்வேண்டாம் என்டு யாரு சொன்னது? இது எங்களுக்கு இப்ப தேவையா என்டு தானே கேட்டேன். சரி நீங்க பேசுங்க. எனக்கு வேற முக்கியமான வேலையள் இருக்கு.