![]() |
|
புத்தாண்டே வருக - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: புத்தாண்டே வருக (/showthread.php?tid=5778) |
புத்தாண்டே வருக - phozhil - 01-15-2005 '2035' ம் சிலை சுமத்திய இடுக்கண் - ஆறாத வடு ; "இடுக்கண் வருங்கால் நகுக"- ஐயன் வள்ளுவன் வாக்கு. நகுவோம்; நலிவு மாறுவோம்; நலம் காணுவோம்: '2036' ம் ஆண்டு சுறவம் முதல் திகதியில் புத்தாண்டை வரவேற்போம்; "வள்ளுவன் குலம் வாழ்வாங்கு வாழி " என முழங்குவோம் .. - kuruvikal - 01-15-2005 புத்தாண்டு கண்டு களம் புகுந்த பொழிலரா...வணக்கம்...தங்கள் வரவு நல்வரவாகுக...! கவித்தமிழ் நாவூற செந்தமிழ் களமூற தாருங்கள் நற்றமிழ்...! நட்புடன் குருவிகள்..! - tamilini - 01-15-2005 Quote:'2035' ம் சிலை சுமத்திய இடுக்கண் - ஆறாத வடு ; பொழில் அவர்கள் பேசியது எதுவுமே புரியல.. 2035 என்ன இடுக்கன் சுமத்தியது.. ?? - kuruvikal - 01-15-2005 அவர் திருவள்ளுவர் (தமிழ் ஆண்டு) ஆண்டைச் சொல்லி கடற்கோள் பேரழிவு தந்த துன்பத்தையும் குறிப்பிடுவதாகவே தோன்றுகிறது...! - tamilini - 01-15-2005 ஓ வள்ளுவர் ஆண்டு 2035 சோ.. அப்ப சரி.. தகவலுக்கு நன்றிகள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eswar - 01-15-2005 இதில இருந்து என்ன தெரியுது. யேசுநாதருக்கு 30 வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் வாழ்ந்திருக்கிறார். தமிழ் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறது.நன்று..... நன்று |