![]() |
|
இந்திய அரசுடன் பேசத் தயார் விடுதலைப்புலிகள் விருப்பம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இந்திய அரசுடன் பேசத் தயார் விடுதலைப்புலிகள் விருப்பம் (/showthread.php?tid=5753) |
இந்திய அரசுடன் பேசத் தயார் விடுதலைப்புலிகள் விருப்பம் - Vaanampaadi - 01-17-2005 இந்திய அரசுடன் பேசத் தயார் விடுதலைப்புலிகள் விருப்பம் நடந்ததை மறப்போம் நிபந்தனையின்றி பேசுவோம் கொழும்பு, ஜன.17- இலங்கை தமிழர்கள் உரிமைக்காக, இந்திய அரசுடன் பேச்சு நடத்த விடுதலைப்புலிகள் இயக்கம் விருப்பம் தெரிவித்து உள்ளது. இலங்கை தமிழர்கள் உரிமைக்காக நீண்டகாலமாக விடுதலைப்புலிகள் இயக்கம் போராடி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே 20 ஆண்டுகள் நடந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2 ஆண்டுக்கு முன் நார்வே அரசு மேற்கொண்ட சமரச முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதி பேச்சு தொடங்கியது. அதுவும் இப்போது தடைபட்டுள்ளது. மீண்டும் அமைதி பேச்சு நடத்தும் முயற்சியில் நார்வே ஈடுபட்டு இருக்கிறது. அடுத்த வாரம் நார்வே வெளியுறவு மந்திரி ஜhன் பீட்டர்சன்- விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் சந்தித்து பேசுவார்கள் என்று புலிகள் இயக்கத்தை சேரந்த புலித்தேவன் கூறினார். இந்த நிலையில் இந்திய அரசுடன் பேச்சு நடத்த விடுதலைப்புலிகள் இயக்கம் விருப்பம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது கடந்த காலத்தில் நிகழ்ந்த மரணம் தற்போதைய வாழ்வை பாதிக்கிறது. எனவே நடந்ததை மறப்போம். நிபந்தனையின்றி பேசுவோம். இந்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயார். இதற்கு எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம். இந்தியா வின் ஒருமைப்பாடு, இறையாண்மையை நாங்கள் மதிக் கிறேhம். அமைதி, நீதிக்காக போராடும் தமிழ் மக்களை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியாவை கேட்டு கொள்கிறேhம். விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு தடை விதித்து உள்ளது.அதை நீக்கினால் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளும் தடையை நீக்க வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேhம். இவ்வாறு கூறினார். ஈழ தமிழ் கவிஞர் நித்தியானந்தன் கூறுகையில், ராஜPவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினியை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மன்னித்து உள்ளார். அது எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. தற் போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் எங்கள் கோரிக்கையை பரிசிலித்து, விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ் மக்களிடம் மீண்டும் உறவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேhம் என்றhர். இந்தியா பதில்; கடந்த 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜPவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. இப்போது புலிகளின் இந்த கோரிக்கையை ஏற்கும் நிலையில் இந்திய அரசு இல்லை. இலங்கை தமிழர்களுடன் உறவு ஏற்படுத்தி கொள்ள தயார். ஆனால் அவர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக விடு தலைப்புலிகளை அங்கீகரிக்க இயலாது என்று இந்திய அரசு கூறுகிறது. Source: Dinakaran - selvanNL - 01-17-2005 Åö¸ø À𼨼 ¿¡ö «ö (þó¾¢Âý) þ¾üÌ ºÃ¢Â¡É ÅÆ¢ «¦Áâ¸Û¼ý ´òШÆôÀÐ... À¡÷ò¾£í¸û ¾¡§É «¦Áâ¸ñ¼ À¨¼¸û þÄí¨¸ìÌûÇ ¸¡¨ÄÅîº ¯¼É þó¾¢Âý Àð¼ À¼... :oops: :evil: |