Yarl Forum
வாழ்க்கையின் வெறுமை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வாழ்க்கையின் வெறுமை (/showthread.php?tid=568)



வாழ்க்கையின் வெறுமை - Selvamuthu - 03-11-2006

[size=18]வாழ்க்கையின் வெறுமை

என் இளமைப்புத்தகத்தின்
இரவுப்பக்கங்கள்
வெறுமையாய் கிடக்கின்றன
இன்னும் எழுதப்படாத
ஓர் கவிதையை எண்ணி....

எனது வானம்...
இருள் மூடிக்கிடக்கிறது
இதுவரை காணாத
அந்தப் பௌர்ணமிக்காக...

மெல்ல மெல்ல
காலத்திருடனிடம்
களவு போகின்றன-என்
நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான்
சேர்த்துவைத்த கனவுகளின்
ஒளிநிறமும்....

நிசப்தம் விழுங்கிய
நீண்ட இரவொன்றில்...
நிமிர்ந்து பார்க்கிறேன்
மழை இருள்மூடிய
காரிருள் வானில்
பளிச்செனத் தெரிந்தது
தனிமை மூடிய-எனது
வாழ்க்கையின் வெறுமை.

-ஈழநேசன்-

கள உறவான ஈழநேசனின் கவிதையை
களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே
களமேற்றியிருக்கிறேன்.


- KULAKADDAN - 03-11-2006

ஈழநேசன், உங்க கவிதை என்ன இப்படி வெறுமை பேசுது. வெறுமை என்பது எல்லாருக்கும் சில நேரங்களில் தோன்றலாம்/ இருக்கலாம். எப்போதும் இருக்காதல்லவா?
தொடர்ந்து பல கவிதைகளை தாருங்கள்.


- Rasikai - 03-11-2006

<b>ஈழநேசனின் வாழ்க்கையின் வெறுமை பேசும் கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் செல்வமுத்து. வாழ்க்கையில் வெறுமை இருப்பதும் இல்லாமல் விடுவதும் அவரவர் கைகளில்த்தான் இருக்கிறது. வாழ்க்கையை வெறுமையாக நகர்த்தாமல் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எனது வாழ்த்துக்கள்.</b>


- eezhanation - 03-12-2006

எனது ஆக்கத்தை அழகாகத்தந்த செல்வமுத்து ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.


- eezhanation - 03-12-2006

நன்றி குளக்கட்டான் அவர்களே.., மனதைப்பாதித்த விடயங்கள்தானே ஆக்கங்களில் வெளிப்படும். அதற்காக என் கவிதை பேசுவதுதான் எனது வாழ்க்கை. என எடுத்துக்கொள்ளவேண்டாம்.

மிக்க நண்றி ரசிகை. உங்களின் வாழ்த்துக்களிற்கு. அது சரி ..,என் கவிதை எப்படி என்று ஒன்றுமே சொல்லவிலையே....? Cry Cry Cry


- Selvamuthu - 03-12-2006

உங்கள் இளமைப் புத்தகத்தின் இரவுப் பக்கங்களில் கவிதை எழுத
அந்தப் பௌர்ணமிப்பெண் வரவேண்டும்.
நந்தவனப்புூக்களின் நறுமணமும், கனவுகளின் ஒளிநிறமும் களவுபோகாது
காரிருள் வானம் ஒளிபெற அந்த நிலவுமகள் வரவேண்டும்.

அப்படித்தானே?

வாழ்க்கையின் வெறுமையை நீக்கிட நிச்சயம் வரவேண்டும். அந்த நிலவுலகு மகள் நிச்சயம் வருவார். வரவேண்டும்!

நல்லதொரு கவிதையைத் தந்த ஈழநேசனுக்கு எனது
பாராட்டுக்கள்!


- iniyaval - 03-14-2006

ஈழநேசன் கவி நன்றாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.


- eezhanation - 03-14-2006

<!--QuoteBegin-Selvamuthu+-->QUOTE(Selvamuthu)<!--QuoteEBegin-->உங்கள் இளமைப் புத்தகத்தின் இரவுப் பக்கங்களில் கவிதை எழுத  
அந்தப் பௌர்ணமிப்பெண் வரவேண்டும்.
நந்தவனப்புூக்களின் நறுமணமும், கனவுகளின் ஒளிநிறமும் களவுபோகாது  
காரிருள் வானம் ஒளிபெற அந்த நிலவுமகள் வரவேண்டும்.

அப்படித்தானே?  

வாழ்க்கையின் வெறுமையை நீக்கிட நிச்சயம் வரவேண்டும். அந்த நிலவுலகு மகள் நிச்சயம் வருவார். வரவேண்டும்!

நல்லதொரு கவிதையைத் தந்த ஈழநேசனுக்கு எனது
பாராட்டுக்கள்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->







[size=18]அப்படித்தான்.


- eezhanation - 03-14-2006

quote="iniyaval"]ஈழநேசன் கவி நன்றாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.[/quote


<span style='font-size:25pt;line-height:100%'>மிக்கநன்றி இனியவள் தொடர்ந்து எழுத் முயற்சிக்கிறேன்</span>


- ப்ரியசகி - 03-14-2006

Quote:மெல்ல மெல்ல
காலத்திருடனிடம்
களவு போகின்றன-என்
நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான்
சேர்த்துவைத்த கனவுகளின்
ஒளிநிறமும்....

அழகான வரிகள் ஈழநேசன்..
அழகான கவி கூட..உங்கள் வாழ்க்கையின் வெற்றிடம் சீக்கிரமாய் நிரம்பிட..என்னோட வாழ்த்துக்கள்..
நிரம்பினதும் கவி எழுதாமல் விட்டுடாதைங்கோ.. தொடர்ந்தும் எழுதுங்கோ..


- eezhanation - 03-15-2006

ப்ரியசகி Wrote:
Quote:மெல்ல மெல்ல
காலத்திருடனிடம்
களவு போகின்றன-என்
நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான்
சேர்த்துவைத்த கனவுகளின்
ஒளிநிறமும்....

அழகான வரிகள் ஈழநேசன்..
அழகான கவி கூட..உங்கள் வாழ்க்கையின் வெற்றிடம் சீக்கிரமாய் நிரம்பிட..என்னோட வாழ்த்துக்கள்..
நிரம்பினதும் கவி எழுதாமல் விட்டுடாதைங்கோ.. தொடர்ந்தும் எழுதுங்கோ..
மிக்கநன்றி ப்ரியசகி..... இதுபோன்ற உற்சாகமான பாராட்டுக்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து எழுதுவேன்.


- Rasikai - 03-15-2006

eezhanation Wrote:மிக்க நண்றி ரசிகை. உங்களின் வாழ்த்துக்களிற்கு. அது சரி ..,என் கவிதை எப்படி என்று ஒன்றுமே சொல்லவிலையே....? Cry Cry Cry

ஓ கவிதை சூப்பர்.மன்னிக்கவும் அன்று சொல்லாததுக்கு :oops:


- shanmuhi - 03-15-2006

இளமைப்பருவத்தின் வெறுமை எழுதப்படாத கவிதையாக வடித்தது அருமை.

வாழ்க்கையின் ஏக்கங்கள் பௌர்ணமி நிலவில்... பட்டு மழை இருள் மூடிய காரிருள் வானில் வாழ்க்கையின் வெறுமையை ஒப்பிட்டு வடித்தமை அற்புதம்.
வாழ்த்துக்கள்...

மேலும் தொடருங்கள்...


- RaMa - 03-16-2006

ஈழநேசனின் வாழ்க்கையின் வெறுமை கவிதை நல்லாயிருக்கு. இது உங்கள் வெறுமை மட்டும் இல்லை நம்முடையதும் தான்.
வாழ்த்துக்கள். தொடர்ந்து தாருங்கள்.


- Snegethy - 03-16-2006

ஆகா வாழ்க்கையில் வெறுமையா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கரு வெறுமை பேசினாலும் கவிதை நிறைவா இருக்கு. ஒளி நிறம் என்றால் என்ன?


- eezhanation - 03-18-2006

நன்றி....நன்றி...நன்றி...,ரசிகை, ஷன்முகி, ரமா. உங்களுடைய பராட்டுக்கள், என்னை இன்னும் இன்னும் எழுதத்தூண்டுகின்றன,


- eezhanation - 03-18-2006



Snegethy Wrote:ஆகா வாழ்க்கையில் வெறுமையா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கரு வெறுமை பேசினாலும் கவிதை நிறைவா இருக்கு. ஒளி நிறம் என்றால் என்ன?



நன்றி ஸ்னேகிதி..., ஒளி- வெளிச்சம், நிறம்-வர்ணம். இங்கே நான் 'ஒளிநிறம்' என்ற சொல்லை, ஒளிபொருந்திய வர்ணங்கள் அல்லது பிரகாசமான வர்ணங்கள். என்னும் அர்த்தத்தில் பயன் படுத்தி இருக்கின்றேன்.