![]() |
|
சுனாமி எச்சரிக்கை கருவி 1 வருடத்தில் நிறுவப்படும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சுனாமி எச்சரிக்கை கருவி 1 வருடத்தில் நிறுவப்படும் (/showthread.php?tid=5663) |
சுனாமி எச்சரிக்கை கருவி 1 வருடத்தில் நிறுவப்படும் - vasisutha - 01-23-2005 இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை கருவி 1 வருடத்தில் நிறுவப்படும்: ஐ.நா. அதிகாரிகள் அறிவிப்பு ஜப்பான் நாட்டின் கோப் நகரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் 6,433 பேர் பலியானார்கள். பூமி அதிர்ச்சி, புயல், வெள்ளம் போன்ற பேரழிவுகளால் ஏற்படும் உயிர் பலிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி உலக அளவிலான கருத்தரங்கு 5 நாட்கள் அந்த நகரத்தில் நடைபெற்றது. ஐ.நா. சபை ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் 168 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள், விஞ்ஞானிகள், வளர்ச்சித்துறை வல்லுனர்கள், பொருளாதார மேதைகள், உதவி அமைப்பை சேர்ந்தவர்கள் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நேற்று நிறைவடைந்த இந்த கருத்தரங்கில், சமீபத்தில் இந்தியா உள்பட 11 நாடுகளில் ஏற்பட்ட `சுனாமி' பேரழிவால் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியான சம்பவம் தான் அதிகம் ஆக்கிரமித்து இருந்தது. சுனாமி உள்பட இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் உயிர் பலியை குறைக்க துரிதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதை நிபுணர்கள் ஒத்துக் கொண்டனர். `சுனாமி' எச்சரிக்கை கருவிகள் நிறுவ வேண்டிய அவசியம் மற்றும் இன்னும் 10 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் உயிர் சேதத்தை குறைக்க அவர்கள் உறுதி பூண்டனர். `இயற்கை பேரழிவுகள் ஏற்படக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு, அதற்கான எச்சரிக்கை கருவிகள் நிறுவ வேண்டியது அவசியம்' என்று ஐ.நா. சபையின் அவசர நிவாரண உதவி பிரிவு இயக்குனர் ஜேன் ஈகிலேண்ட் நிருபர்களிடம் தெரிவித்தார். `சுனாமி' நமக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய ஒரு எச்சரிக்கை கருவி என்றும் அவர் கூறினார். `இந்தியப் பெருங்கடலில் இன்னும் 12 முதல் 18 மாதங்களில் `சுனாமி' எச்சரிக்கை கருவிகளை நிறுவ ஐ.நா. அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதற்காக சுமார் 40 கோடி ரூபாய் பயன்படுத்தப் படும்' என்று ஐ.நா. சபையின் பேரழிவு குறைப்புத் துறையின் தலைவர் சல்வானோ பிரிசினோ தெரிவித்தார். இந்த தொகையில் பாதியை ஜப்பான் வழங்கும். இந்த `சுனாமி' எச்சரிக்கை கருவிகள், `சுனாமி' ஏற்பட்ட 3 நிமிடத்தில் எச்சரிக்கை செய்யும். malaimalar.com - thamizh.nila - 01-24-2005 கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? பரவாயில்லை இனிமேல் ஒன்று வராமல் தடுத்தாலே போதும்.. |