Yarl Forum
hi - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: hi (/showthread.php?tid=5662)



hi - sethu - 01-23-2005

உதவி பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் - புனர்வாழ்வுக்கான நிதியம.;

சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் பெறப்படும் நிதி பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் புனர்வாழ்வுக்காக வழங்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி தென்பகுதியிலும் சுனாமியின் தாக்குதலால் சுமார் இருபது வரையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களைத் தொடர்ந்தே அவர்களுக்கு உதவுவதற்காக இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த 2004 டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதிகளைத் தாக்கிய 'சுனாமி'யால் சுமார் இருபது வரையிலான தமிழ் ஊடகவியலாளர்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு தமது ஜீவனோபாயத்தை இழந்த நிலையில் இருக்கின்றார்கள். இவ்விதம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்காக பிராந்திய நிருபர்களாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடமையாற்றியவர்களாகும்.

இவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவது என்பதற்கு அப்பால் இவர்கள் தமது பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்குள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு அவசியமான பக்ஸ் இயந்திரங்கள் தொலைபேசி கணிணி இயந்திரங்கள் கமரா சாதனங்கள் மோட்டார் சைக்கிகள் போன்றவற்றையும் இழந்து நிர்க்கதியான ஒரு நிலைமையில் இருக்கின்றார்கள்.

இவற்ளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமாகவே அவர்கள் தமது பணிகளை மீள ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது. இதற்காக 'பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் புனர்வாழ்வுக்கான நிதியம்' ஒன்றை அமைப்பதென இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தீர்மானித்திருக்கின்றது. இதற்கு உங்களுடைய மேலான பங்களிப்பையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதற்கான உங்களுடைய பங்களிப்பை பின்வரும் எமது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கலாம்.

ளுசi டுயமெய வுயஅடை ஆநனயை யுடடயயைnஉந யுஃஊ ழே: 1001801-6

ர்யவவழn யேவழையெட டீயமெஇ முழவயாநயெ டீசயnஉhஇ 280 புநழசபந சு. னுந ளுடைஎய ஆயறயவாய ஊழடழஅடிழ -13.

மேலதிக விபரங்களுக்கு: செயலாளர் ஆர்.பாரதி: 0777 304010 பொருளாளர் எஸ்.ஸ்ரீகஜன்: 0777 349655 செயற்குழு உறுப்பினர் ஏ.நிக்சன்: 0777 394416

இணைய முகவரி : றறற.ளடவஅய.உழஅ

அல்லது மின்னஞ்சல் முகவரி: வயஅடைஅநனயை@hழவஅயடை.உழஅ


- pepsi - 01-23-2005

****** :roll:

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- Vaanampaadi - 01-23-2005

அந்த எல்லா ஊடகவியளாளர்களும் அந்தந்த ஊடகவியல் நிலையங்களிலும் தொடர்பு கொண்டு அவர்க்ளுக்குரிய நஷ்ட ஈட்டை பெறவேண்டியது தானே........


- Vaanampaadi - 01-23-2005

இதற்கு ஏன் நிதி?????????????????????????


- Vasampu - 01-23-2005

Vaanampaadi Wrote:இதற்கு ஏன் நிதி?????????????????????????



அப்படி போடு அருவாளை ****** தேவைப்பட்டால் வேறு என்ன செய்வது ??????????? :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

**** நீக்கப்பட்டுள்ளது


- Niththila - 01-23-2005

அதுதானே ஏன்?.... ஊரில அண்ணாமாரிடம் நேரடியாகவே உதவி கேட்கலாமே.


- Nellaiyan - 01-24-2005

இந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் ஊடகவியலாளர்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியத்திற்கு எம்மாலான சிறுதொகையை வழங்கி உதவியளிக்க வேண்டியது எமது கடமையாகும். எமது தேசிய விடுதலைப் போராட்டதிலும் இவர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியது. பாரிய வருமானங்கள் அற்ற தொழிலாகவும், அதே நேரம் உயிராபத்துக்கள் நிறைந்த தொழிலாகவும் ஒரு சிறு எண்ணிக்கையான மிகத் திறமையானவர்களே இன்று களத்திலிருந்து உலகிற்கு உண்மைகளை எடுத்து வருகிறார்கள். இவ்வளவு பாரிய, காலத்தின் தேவையான பணிகளைச் செய்யும் இவர்களுக்கு கை கொடுப்பது எமது காலத்தில் நாம் செய்யும் கடமையாகும்.

அதை விடுத்து தூர நோக்கற்ற விமர்சனங்களும், கீழ்த்தரமான வார்த்தைகளும் அவர்களின் மனதை புன்படுத்தவே செய்யும். தயவு செய்து உதவி செய்யாவிடினும் உபத்திரமாவது செய்யாமலிருப்போம்.

மு.கு: இங்கு சேது என்ற நபர், இதை இங்கு பிரசுரித்தத்தற்கான காரணம் அவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்யும் நோக்கிலல்ல! என்பதை யாருக்கும் புரியக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். அதுகும் இங்கு பிரசுரித்த தலைப்பானது "கி" . தன்னை ஒரு தமிழ் ஊடகவியலாளரென கூறும் ஒருவருக்கு இந்த நிதி சேகரிப்பானது நகைச்சுவையாக தெரிகிறதா? இல்லை நகைப்பாக தெரிகிறதா?


- sethu - 01-24-2005

உண்மையில் நான் நக்கலுக்கு கி என்ட அடயாளம் போடவில்லை உதவி என்டு போட்டன் அதை சின்ன பெட்டியில் எளுதிபோட்டு பெரிய பெட்டிக்குள் எனது தகவலை கட் பேஸ் பன்னிப்போட்டு பாக்க உதவி என்ட சொல் சின்ன பெட்டிக்குள் மறைந்து விட்டது எனக்கு அது தெரியாது அனுப்பினன் ஏதோ எறர் என்டும் தலைப்பை எளுதுமாறும் கெட்டுது அதுக்க சும்மா கி என்டு பொட்டன் அதுக்கு இவ்வளவு வளக்கமாää ஆண்டவா அதுபோக பலரும் கிழ்தரமான கருத்துகளை எளுதி இருக்கிறார்கள் உண்மையில் எனது தகவல்கள் எதவும் நான் இதிலை போடல்லை அதே நேரம் அண்மையில் நெருப்பில் வந்த செய்தி அதாவது நடேசனின் பணத்துடன் சேது தலைமறைவு என்டது பொய்யான தகவல். அதை நடேசனின் மனைவியும் மறத்திருக்கிறது சங்கத்தின் நிதி நிலவரங்கள் சங்கத்தின் இனையத்தில் இருக்கிறது. தற்போது அந்த இனையத்தில் விசேட அறிக்கை போடப்பட்டிருக்கிறது. ஆகவே தற்போதைக்கு பாக்க முடியாது. தயவு செய்து தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவும்.


- vasisutha - 01-24-2005

Nellaiyan Wrote:இங்கு சேது என்ற நபர், இதை இங்கு பிரசுரித்தத்தற்கான காரணம் அவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்யும் நோக்கிலல்ல! என்பதை யாருக்கும் புரியக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். அதுகும் இங்கு பிரசுரித்த தலைப்பானது "கி" . தன்னை ஒரு தமிழ் ஊடகவியலாளரென கூறும் ஒருவருக்கு இந்த நிதி சேகரிப்பானது நகைச்சுவையாக தெரிகிறதா? இல்லை நகைப்பாக தெரிகிறதா?

நீங்கள் சொல்வது புரியவில்லை நெல்லையன். சேது ஹாய் (hi) என்று தானே எழுதியிருக்கிறார். கி என்று எழுதவில்லையே? ஹாய்(hai) என்பதன் சுருக்கம் தானே hi? :roll:


- MEERA - 01-24-2005

******** நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- வியாசன் - 01-24-2005

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- MEERA - 01-24-2005

என்னை பற்றி எழுதுவதை விட விடயத்தை பற்றி எழுதுவதே நல்லது.
நான் எனக்கு நேரம் கிடைக்கும் போது தான் எழுதலாமே தவிர .........
****

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- Niththila - 01-24-2005

What is happening here explanation please?

sorry for writing in english something wrong with my bamini font it doesn't seem to be working


- shiyam - 01-24-2005

ஆகா யானை வரும்பின்னே மணியேசை வரும் முன்னே சேது வரும் போதுதான் மீரா வருவார் சரி எம் பத்திரிகை யாளரை கொச்சை படுத்த கூடாது எனவே அவர்களின் நிழலிலும் சிலர் இளைப்பாறி போகட்டும் துரோகிகளாயிருந்தாலும் சரி எம்பத்திரிகையாளர்கள் ஆலமரங்கள் இவர்கள் காளான்கள்


- Niththila - 01-24-2005

எனக்கு இன்னும் விளங்கேல்லை....ஆனா சில தேசத்துரோகிகளும் இங்க வருகினம் போல. கவனமாக இருக்க வேண்டும். :evil: :evil:


- aswini2005 - 01-25-2005

shiyam Wrote:ஆகா யானை வரும்பின்னே மணியேசை வரும் முன்னே சேது வரும் போதுதான் மீரா வருவார் சரி எம் பத்திரிகை யாளரை கொச்சை படுத்த கூடாது எனவே அவர்களின் நிழலிலும் சிலர் இளைப்பாறி போகட்டும் துரோகிகளாயிருந்தாலும் சரி எம்பத்திரிகையாளர்கள் ஆலமரங்கள் இவர்கள் காளான்கள்

ஆரைச்சொல்றியள் சியாமண்ணா ? காளானெண்டு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சின்னப்புத்தாத்தா மப்பு முறிய ஓடிவரப்போறார். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Niththila - 01-25-2005

தாத்தாவையும் ஆச்சியையும் தான் ரெண்டு நாளாய்க் காணேல்லையே :?