Yarl Forum
சூப்பர் கம்ப்யூட்டர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: சூப்பர் கம்ப்யூட்டர் (/showthread.php?tid=563)



சூப்பர் கம்ப்யூட்டர் - Rasikai - 03-11-2006

<b>வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டர்: </b>

ஜெர்மனி சாதனை
ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது.

பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும்.

அறிவியல் ஆய்வுகளைச் செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது அற்புதமான கருவி. அவர்கள் போட நினைக்கும் கணக்குகளை நொடியில் போட்டு விடையைத் தரும்.

இந்த கணினியைத் தயாரிக்கும் செலவில் 90%-ஐ ஜெர்மனியின் மத்திய அரசும் 10%-ஐ ஜூலிக் நகரம் அமைந்துள்ள ரைன்-மேற்குபாலியா மாநிலமும் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஆனால் இதற்கும் தாத்தா அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கிறது. அதன் செயல்திறன் விநாடிக்கு 367 டெராஃபிளாப்.

http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&


- Eelathirumagan - 03-11-2006

ம்ம்..
கணினிகளின் கணிப்பீட்டு வேகம் கிடுகிடென உயர்கிறது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி ரசிகை.

குவாண்டம் கணினிகள் அறிமுகமாகும்போது அவை இவற்றை தூக்கி சாப்பிட்டுவிடும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Selvamuthu - 03-12-2006

தகவலுக்கு நன்றி சகோதரி இரசிகை.

கணனிகளைப்பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
அடிக்கடி கணனிகள் பற்றிய கட்டுரைகளையும் களத்திலே இணைக்கின்றீர்கள்.
நல்ல முயற்சி.


- iniyaval - 03-14-2006

<!--QuoteBegin-Eelathirumagan+-->QUOTE(Eelathirumagan)<!--QuoteEBegin-->ம்ம்..
கணினிகளின் கணிப்பீட்டு வேகம் கிடுகிடென உயர்கிறது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  தகவலுக்கு நன்றி ரசிகை.

குவாண்டம் கணினிகள் அறிமுகமாகும்போது அவை இவற்றை தூக்கி சாப்பிட்டுவிடும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மைதான் போலும் Confusedhock:
இணைப்புக்கு நன்றி ரஸ்