![]() |
|
முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்! (/showthread.php?tid=559) |
முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்! - Rasikai - 03-12-2006 கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை "கம்ப்யூட்டர் புரோகிராமர்" என அழைக்கின்றனர். உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் "அடா பைரன் லவ்லேஸ்" (1816-1852). புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ். தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் "அனலிட்டிக்கல் என்ஜின்" வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார். கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். 1970களின் பிற்பாதியில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை ஒரு கணினி மொழிக்கு "அடா" என பெயர் சூட்டி இவரைக் கௌரவித்தது நன்றி கூடல் - RaMa - 03-12-2006 இணைப்புக்கு நன்றி ரசிகை - iniyaval - 03-14-2006 இணைப்புக்கு நன்றி ரஸ். அப்ப முதலாவதாக ஒரு பெண் தான் அதை வடிவமைத்து இருக்கிறார் எனும் போது பெருமையாக இருக்கிறது. - samsan - 03-14-2006 அடா பைரன் லவ்லேஸ் பற்றிய மேலதிக தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி - ThamilMahan - 03-14-2006 ஓ அடா(ADA) வா? இந்த மொழியில் எழுதப்பட்ட code ஐ நான் maintain Àñ½¢Â¢Õ츢§Èý. ஒருசில º¢È¢Â ҧḢáõ¸¨Çìܼ ±Ø¾¢Â¢Õ츢§Èý. ¬É¡ «¾ý ¦ÀÂ÷ ²üÀð¼ Å¢¾õ þô§À¡¾¡ý ¦¾Ã¢¸¢ÈÐ. ¾¸ÅÖìÌ ¿ýÈ¢ Re: முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர்! - AJeevan - 03-14-2006 நன்றி ரசிகை |