Yarl Forum
என்றென்றும் துரோகிக்கு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என்றென்றும் துரோகிக்கு (/showthread.php?tid=5566)



என்றென்றும் துரோகிக்கு - shiyam - 01-28-2005

என்றென்றும் துரோகிக்கு
உனைப்பற்றி எழுதவோ பேசவோ
கூடாது என்றுதான்
நினைத்திருந்தேன்
ஏனெனில்
அதுவும்துரோகம்
எண்றெண்ணுபவன்நான்
இருந்தாலும்..........
எழுந்த அலையில் எம்மினம்
எல்லாம் இழந்து
ஏதிலியாய் நின்றபோது
உலகமே உச்...கொட்டி
உதவிட ஓடியபோது
நீ மட்டும் புதிதாய்
புளுகு செய்திகள்
புனைந்தபடி
புலியை காணவில்லை
அதுவைத்த பொட்டை
காணவில்லையென்று
எசமான் விசுவாசத்திற்காய்
ஏற்ற இறக்கத்துடன்
எத்தனை துதிபாடல்
ஒன்றுமட்டும் நினைவில்வை
காயடிக்கப்பட்ட காளை நீ
சுமையிழுக்கும் வரைதான்
உனக்குணவு பின்
எசமானுக்கு நீ உணவு
காட்டி கொடுத்து வாழ்வதைவிட
தாயை தாரத்தை
கூட்டி கொடுத்து வாழலாம்
தப்பில்லை
ஈழ விடுதலை இன்னமும் உன்
கட்சியின் பெயரில்
வெட்டி எறிந்துவிடு
வேடிக்கையாய் இருக்கிறது


- ¸ÅâÁ¡ý - 01-28-2005

«†¡ «Õ¨Á... Íð¼ ÀÆÁ¡ ͼ¡¾ ÀÆÁ¡?? :roll:


- Niththila - 01-28-2005

நல்லாயிருக்கு கவிதை ஷியாம் அண்ணா 8)


vallthukal - Nitharsan - 01-28-2005

வாழ்த்துக்கள் சியாம் தொடர்ந்து எழுதங்கள்
நேசமுடன் நிதர்சன்


- வியாசன் - 01-28-2005

அருமை அருமை ஆகா என்ன சொற்பதம் . யாரங்கே இந்த கவி வழங்கியவருக்கு அவர் சுட்டிருந்தால் அதற்கு நான்கு பை பொற்காசுகளும் இவரே கவிதையை எழுதியிருந்தால் இரண்டு பை பொற்காசுகளும் வழங்குங்கள்..
இந்த கவிதையில் காட்டப்பட்ட துரோகியை கண்டதும் பிடித்து சக்கரைப்பாகு பூசி எறும்பு புற்றில் இருத்திவிடுங்கள்.. என்ன யோசனை செய்கிறீர்கள் சுட்டபழத்துக்கு அதிக பரிசு கொடுக்கிறேன் என்றா?
இந்தக் கவிதையை படித்ததும் களத்திற்காக சுட்டுக் கொண்டுவந்த பெருந்தன்மை இருக்கிறதே அதற்காகத்தான். உடனடியாக நிறைவேற்றுங்கள் என் ஆணையை


- KULAKADDAN - 01-28-2005

வாழ்த்துக்கள்


- kavithan - 01-29-2005

நன்றாக இருக்கிறது சியாம் அண்ணா.. வாழ்த்துக்கள்...


- shiyam - 01-29-2005

¸ÅâÁ¡ý Wrote:«†¡ «Õ¨Á... Íð¼ ÀÆÁ¡ ͼ¡¾ ÀÆÁ¡?? :roll:
சுட்டு எனக்கு பழக்கமில்லைநானே சமைத்துதான் பழக்கம் சாப்பிடுங்கள் யாராவது சுடப்பட்டது என்று நிருபித்தால் மன்னிப்புடன் எனது கவிதையைநீக்கி விடுகிறேன்