![]() |
|
அந்த முதலிரவில்... ... .. .. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அந்த முதலிரவில்... ... .. .. (/showthread.php?tid=5523) |
அந்த முதலிரவில்... ... .. .. - KULAKADDAN - 01-30-2005 <b>விரியும் சிறகுகள் எனும் பிரியாவிடை மலரிலிருந்து பெறப்பட்டது... ஏழுதியவரின் பெயர் தெரியவில்லை..</b> <img src='http://www.yarl.com/forum/images/avatars/16902519003ee9bb5100038.jpg' border='0' alt='user posted image'> <b>அந்த முதலிரவில்... ... .. .. </b> நிச்சயதார்த்தம் நிகழ்ந்து விட்டது இனி அலட்டி என்ன பயன். ஏக்கமாய் ஊர் சுற்றி என் பொழுதை கழித்து விட்டு.. கடைசியில் பார்ப்போம் என்று நானும்.. கண் வளர்ந்தேன். பகல் அன்று வீடெல்லாம் ஒரே கூட்டம் ஓடி ஆடி பெடிசனங்கள் உற்சாக ஓதல்களால் பாவி என் ஆவி கூட பதை பதைக்கதொடங்கியது. ஓடி ஓடி பல மூத்த சீனிய நண்பரின் சேதி கேட்டேன் ! அவள் எப்படி வருவாள்! என்னென்ன கேட்பாள் என்ன நான் சொல்ல வேணடும்! எப்படி தொடங்குவது ! எப்படி முடிப்பது! ஒரு நூறு கேள்வி கேட்டு ஓயாமல் கேட்டு நினறேன் அனுபவத்தில் மூத்தவர்கள் ஆதரவாய் தட்டி மெல்ல பயம் கொள்ள வேண்டாம்... பக்கத்தில் நாம் இருப்போம் என.. பவிசாய் சொல்லிடவே பாய்ந்து வந்த கோபமதை.. பக்குவமாய் அடக்கி விட்டு இன்னுமா தெரியாது- சீனியசே இது எல்லாம் தனியாக செய்வதையா! துணை கேட்டால் துளங்காது! துள்ளுகிற நினைவை தட்டி சுறுக்காய் சொல்லுமையா! குறு நகையாய் தன் நினைவை மீட்டி - அவர் அவசரமாய் நீ பாய்ந்து எடுத்து விடல் முறையன்று அதரவாய் நீ பார்த்து ஆராய்ந்து பின் கதைத்து... நேசமுடன் நீ எழுதும் புதுக்கவிதை போல் தொடங்கு வேகமாய் பாய்வதால் புரியாது உன் அறிவு ஆறுதலாய் அனுசரித்து ஆங்காங்கே தரித்து நின்று நேசமுடன் நீ எழுது... .. .. அத்தனையும் கேட்ட பயம் அங்கலாய்ப்பில் போய் ஒதுங்கி பித்தனை போல் நானும் போய் அறையை மூடிவிட்டேன் புதிதான அவள் கசங்கா புது மணமே வீசி நின்றாள் அரிதாக நான் பர்த்த அவள் விடயம் -அது புதிது தெரியாது இருந்தென்ன தெரிந்து தான் ஆக வேண்டும்.. உறவாடி உறவாடி -இரவுகளில் தனியாடி களைத்தேன் அவள் ஒவ்வொரு இதழ்களும் புதிதாய் தொடுவதற்கே அரிதாய் கோடிட்டு கோடிட்டு படித்தேன் முடியவில்லை ஓரிரவில் பார்த்தது பாதி பார்க்காதது பாதியாய் பகல் எழுந்தேன் இனி என்ன முதலிரவில் படித்ததை வைத்து பரீட்சை எழுதி முடிப்பது தான் பாக்கி! - KULAKADDAN - 01-30-2005 http://www.yarl.com/forum/images/avatars/ இவ்விணைப்பு மேலே இடபடவேண்டியது இங்கு தவறுதலாக இடப்பட்டு விட்டது தவறுக்கு வருந்துகிறோம் - kuruvikal - 01-30-2005 சோதனைக்கு முதல் நாளிரவு...புத்தகம் படிச்சா இப்படித்தாங்க.... பாடம் படிப்பிக்கும் போதே படிச்சிக்கிட்டா..இந்த அவஸ்தை தேவையில்லை...! மாணவனை அவனாகவும்...புத்தகத்தை அவளாகவும் வைத்து நல்ல கவிதை எழுதி இருக்காங்க வாழ்த்துக்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 01-31-2005 தம்பி குளக்காட்டான் பரீட்சைக்கு முன்னர் இணைப்பு இணைக்கிறதையே மாத்தி இணைத்துவிட்டீர் பரீட்சைக்கு எப்படி மாத்தி பதிலை எழுதப்போகிறீரோ? நடக்கட்டும் :roll: :roll: :roll: :roll: - KULAKADDAN - 01-31-2005 viyasan Wrote:தம்பி குளக்காட்டான் பரீட்சைக்கு முன்னர் இணைப்பு இணைக்கிறதையே மாத்தி இணைத்துவிட்டீர் பரீட்சைக்கு எப்படி மாத்தி என்ன அங்காலை எழுதியதன் மறுதாக்கமோ....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:பரீட்சைக்கு எப்படி மாத்திமுதலில் ஆக்க பூர்வமாக விமர்சியுங்கள் அல்லது.. நகைச்சுவையையாக விமர்சியுங்கள்.............. :evil: இதுவரை பார்த்ததில் உங்களுக்கும் அதற்கும் எட்டா பொருத்தம்.... :twisted: முதலில் நீங்க திருந்துங்கையா பெரியவரே..... :wink:
- ragavaa - 01-31-2005 கற்பனை அருமை. - hari - 01-31-2005 கவிதைக்கு நன்றி குளக்கட்டான்! - KULAKADDAN - 01-31-2005 நன்றி <b>ragavaa,மன்னா</b>, கவிதை எழுதியவருக்கு.............நன்றி - Mathan - 01-31-2005 நல்லாருக்கு, ஒரே கவிதையில் பரீட்சை முதல் இரவையும் திருமண முதல் இரவைவும் நினைக்க வைக்கின்றது. நன்றீ குளக்காட்டான் - kavithan - 02-02-2005 நன்றி குழை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |