Yarl Forum
Sherbet or Milk shake; - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: Sherbet or Milk shake; (/showthread.php?tid=5496)



Sherbet or Milk shake; - Niththila - 02-01-2005

ஸர்பத் செய்யிறது எண்டால் தேவையானவை

ஸ்ர்பத் சிரப் தேவையான அளவு (தமிழ் அல்லது இந்தியன் பாகிஸ்தானி கடைகளில் கிடைக்கும்.)

ரின் மில்க் 1 ரின்

தண்ணி டேஸ்டுக்கு ஏற்ப

கசகசா 6 மேசைக் கரண்டி

செய்முறை:

கசகசாவை(தமிழ்க்கடையில் வாங்கலாம்) 2 மணித்தியலத்துக்கு முதல் கொஞ்ச தண்ணியில ஊற விடவும்.

ஒரு பாத்திரத்தில் ரின் பாலையும் தண்ணீரையும் ஸர்பத் ஸிரப்புடன் விட்டுக் கலக்கவும். விரும்பினால் தண்ணியின் அளவைக் குறைத்து நொருக்கிய ஐஸ் கட்டியைப் போடலாம். பின்பு கசகசாவையும் சேர்க்கலாம்.

விரும்பியவர்கள் பலூடாவும் சேர்க்கலாம். இங்க வாற அண்ணாக்களுக்கு பலூடா வீட்டில செய்யிறது கஸ்டம் எனவே இதையும் தமிழ் கடையில் அல்லது பாகிஸ்தான் கடைகளில் வாங்கலாம் பலூடா மிக்ஸ் எண்டு இருக்கும்.


இதை விட ஈஸியான மெதேட்

பால் 1 கிளாஸ்

வனிலா ஐஸ் கிறீம் தேவையான அளவு

மில்க் ஷேக் மிக்ஸ் அல்லது ஸர்பத் மிக்ஸ் தேவையான அளவு

(விரும்பினால் )கசகசா 1 தேக்கரண்டி (இரண்டு மணி நேரம் சிறிது தண்ணி விட்டு ஊறவிடவும்)

சீனி டேஸ்டுக்கு ஏற்ப

பாலை நல்லா கொதிக்க காய்ச்சி ஆறவிடவும் ஆறியபின் மில்க் ஷேக் மிக்ஸ் ஐஸ் கிறீம் சீனி என்பவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

விரும்பினவை கசகசா சேர்க்கலாம்.

செய்து பாத்திட்டு சொல்லுங்கோ. :wink:


- thamizh.nila - 02-01-2005

நித்தி இது நாங்களும் செய்யிறனாங்கள்...நான் சில இடங்களில் கவனித்திருக்கிறேன் , அன்னாசி பழ துண்டுகளும் போடுவார்கள்..


Re: Sherbet or Milk shake; - Mathan - 02-01-2005

Niththila Wrote:விரும்பினவை கசகசா சேர்க்கலாம்.

இந்த கசகசா எப்பிடி இருக்கும்? அந்த சர்பத்தில் மிதக்கும் அதுவா? நீண்ட காலத்திற்கு முன்பு நல்லூர் திருவிழாவில் குடித்தது, அதற்கு பின் கண்ணில் படவே இல்லை, சரி செய்து குடித்து பாப்பம், நன்றி,


- thamizh.nila - 02-01-2005

மதன் அண்ணா - தமிழ் கடைகளில் இருக்கும்..வாங்கி செய்து பாருங்கோ...நல்லூர் திருவிழாவில இதெல்லாம் கிடைக்குமா...சே இதுக்கு தான் எங்கட நாட்டில இருக வேணும்..நான் இதெல்லாம் பார்க்கவே இல்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry Cry ..நித்தி நீங்க?


- Mathan - 02-01-2005

சர்பத், ஐஸ்கிறீம் இல்லாத நல்லூர் திருவிழாவா? போறதே அதுக்கும் அங்க இங்க பாக்கவும் தானே, திருவிழா நேரத்தில் ஸ்கூல் முடிய அப்பிடியே எல்லோரும் போறது தானே.


- Niththila - 02-01-2005

thamizh.nila Wrote:மதன் அண்ணா - தமிழ் கடைகளில் இருக்கும்..வாங்கி செய்து பாருங்கோ...நல்லூர் திருவிழாவில இதெல்லாம் கிடைக்குமா...சே இதுக்கு தான் எங்கட நாட்டில இருக வேணும்..நான் இதெல்லாம் பார்க்கவே இல்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry Cry ..நித்தி நீங்க?

எனக்கும் சரியாக ஞாபகம் இல்லை தமிழ். Cry Cry ஆனா யாழ்ப்பாண ரவுணுக்கு போகேக்க சுபாஸ் மற்றும் றிக்கோ கிறீம் ஹவுஸில குடிச்ச ஞாபகம் இருக்கு. :wink:


- thamizh.nila - 02-01-2005

ஓ நீங்களும் குடிச்சு இருக்கிங்களா?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி சரி அடுத்த முறை போற போது பார்க்கிறேன்.


Re: Sherbet or Milk shake; - Niththila - 02-01-2005

Mathan Wrote:
Niththila Wrote:விரும்பினவை கசகசா சேர்க்கலாம்.

இந்த கசகசா எப்பிடி இருக்கும்? அந்த சர்பத்தில் மிதக்கும் அதுவா? நீண்ட காலத்திற்கு முன்பு நல்லூர் திருவிழாவில் குடித்தது, அதற்கு பின் கண்ணில் படவே இல்லை, சரி செய்து குடித்து பாப்பம், நன்றி,

நீங்க சொன்னது தான் கசகசா . கறுப்பாக இருக்கும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->