![]() |
|
கண்ணில் தெரியும் கதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: கண்ணில் தெரியும் கதைகள் (/showthread.php?tid=5495) |
கண்ணில் தெரியும் கதைகள் - Mathan - 02-01-2005 கண்ணில் தெரியும் கதைகள் <img src='http://www.icuiti.com/image/Sean-iPOD.jpg' border='0' alt='user posted image'> மடிக்கணினியின் மூலம் இணையத்தில் உலாவிக்கொண்டே காரில் (தானே ஓட்டாதபோது ) போகலாம், ஆனால் கணினி மூடியே இருக்கும். செல்பேசியில் ஓடும் குறும்படத்தை முழுத் திரையரங்க அனுபவத்துடன் நடந்துகொண்டோ, ஓடிக்கொண்டோ பார்க்கலாம். (விவகாரமான மேட்டரா இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் பார்க்க முடியும் ) காரின் பின்சீட்டில் தொல்லைதரும் குழந்தைகளை சாந்தப்படுத்த கனமான டிவிடி ப்ளேயர்கள் வேண்டாம். பெரிய 14/15 அங்குலத் திரையை ஒளிர்விக்கவே தன் சேமக்கலனின் ஆற்றலில் பெரும்பகுதியை செலவிடும் மடிக்கணினிகள் இனி மணிக்கணக்கில் நிற்காமல், மின்னேற்றம் பெறாமல் இயங்கலாம். இதெல்லாம் எப்படி? எப்போது? நான் வசிக்கும் ரோச்சஸ்டர் உலகின் ஒளிப்பிம்பவியலில் முக்கியமான இடத்தைப் பெற்ற (Imaging capital of the World) ஒன்று. முதல் ஒளிநகல் நிறுவனமான ஸெராக்ஸ்(Xerox), நிழற்படவியலில் முத்திரை பதித்த கொடாக்(Kodak), கண்ணில் அணியும் கண்னாடிகள்/காண்டாக்ட் லென்ஸ்/லேசர் திருத்தம் இவற்றில் சாதனை புரியும் பாஷ்&லோம்ப்(Bausch&Lomb) இந்த மூன்று முக்கியமான நிறுவனங்கள் இங்கே தான் உள்ளன. இந்த வரிசையில் கண்ணில் அணிந்துகொள்ளும் விடியோத்திரை தயாரிகும் ஐக்விட் என்ற நிறுவனம் பற்றி இன்று உள்ளூர் டிவியில் செய்தியொன்றைக் கண்டேன். ஆர்வமும் வியப்பும் தந்தது அவர்கள் வெளிக் கொண்டுவந்திருக்கும் திரை. <img src='http://www.icuiti.com/image/V920-Labeled.jpg' border='0' alt='user posted image'> இதில் காணப்படும் பிம்பம் 11 அடி தூரத்தில் உள்ள திரையில் இருப்பதுபோல மாயத்தோற்றம் கொண்டதாக இருக்கும். பார்க்கத்தான் பொடிசு, 11 அடிதூரத்தில் சுமார் ஐந்தரை அடி அளவில் ஒரு திரையில் படம் விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்குமாம். மேலும் விவரங்களுக்கு அவர்கள் இணையத்தளத்தைப் பார்க்கலாம். http://www.icuiti.com/play.html ஆர்டர் போட்டால் குறைந்தது 3 வாரம் காத்திருக்கவேண்டுமாம். அத்தனை டிமாண்டாம்! ஒன்று விலை $500 அதாவது ஏறக்குறைய 25 000 ரூபாய்! ஆனால் பொடிஜாமானக் கிறுக்கனான எனக்கு பார்க்கப் பார்க்க ஆசையாய் இருக்கிறது. ஹும்.. ஒருநாள் $100க்குக் கீழே வரும் அப்போது வாங்கிக்கலாம். நன்றி - காசி - Mathan - 02-01-2005 மேலதிக விபரங்கள் ஆங்கிலத்தில் ,,,, http://www.icuiti.com/Library/V920%20Web%2...%20Brochure.pdf |