Yarl Forum
சுமை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சுமை (/showthread.php?tid=5444)



சுமை - shiyam - 02-04-2005

சுமை
சுகமானதா
இழப்பில் ஏன்
அழுகிறீர்கள்
சுமை சோகமானதா
காதலை ஏன்சுமக்கிறீர்கள்
சுமையை வெறுக்கிறீர்களா
கர்ப்பத்தை ஏன் காக்கிறீர்கள்
சுமை இன்பமென்றால்
பிரிவில் புலம்புகிறீர்கள்
சுமைகள் சிலவிரும்பியே
சுமக்கிறோம்
உறவுகள் நண்பர்கள்
சில விருமபாமல்
சுமக்கிறோம்
எங்கள் அந்தரங்கங்கள்
நாம் பிறந்ததே
சுமக்கத்தான்
சுகமோ சோகமோ
இரண்டும்
இறக்கிவைக்க முடியாதவை


- kavithan - 02-04-2005

எல்லாம் சுகமானது
ஆனால், சுமையானது.
வாழ்வில்
பிறந்ததில் இருந்து
இறக்கும் வரை "சுமை"
தொடர்கிறது.
ஆனால்,
சுமப்பவர்களும்
சுமக்கும் சந்தர்ப்பங்களும் வேறுபடுகின்றது.
அத்தோடு அவை அனைத்தும்
சங்கிலித்தொடர்போல்
சுற்றி சுற்றி வருகின்றது.
அம்மா பிள்ளையை சுமக்கிறாள்
பிள்ளை கொஞ்சம் வளர்ந்து
புத்தகப்பையை சுமக்கிறது.
தந்தை பிள்ளையின் செலவுகளை சுமக்கிறார்
அக்கா தங்கையின்
தம்பியின் வீட்டு பாடங்களை சுமக்கிறா.
உறவுகள் இன்ப துன்பங்களை சுமக்கின்றன.
நண்பர்கள் நட்பை சுமக்கிறார்கள்
காதலர்கள் காதலை சுமக்கிறார்கள்.
மனைவி கணவனையும்
கணவன் மனைவியையும் சுமகிறார்கள்
மகன் மகள்
தாய் தந்தையை சுமக்கிறார்கள்.
இறுதியில்
நால்வர் பெட்டியில் சுமக்கிறார்கள்.
இப்போது ஊர்திகளும் சுமக்கின்றன
உயிரற்ர உடல்களை.



மனச்சுமையை
சுவையாக
சுமையாய்
கூறிய சியாம் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் .. தொடருங்கள்


- hari - 02-04-2005

சியாம், மந்திரி இருவருக்கும் எனது வாழ்த்துக்களும்! பராட்டுக்களும்! உரித்தாகட்டும்!


- tamilini - 02-04-2005

நல்ல கவிதை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 02-04-2005

குருவிகள் இதையெலாம்
மூளையில் சுமக்குதுகள்
சுமை சுமையாய்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 02-04-2005

சுமை பற்றி நீங்கள் இருவரும்,
சுமந்துவந்த கவிதைகள் சுமை
நீக்கும் மருந்தானால் சுகமே
சுமை என்னும் சொல்லை சுமந்து
நல்ல சுவையான கவி ஒன்றை தந்தீர்.
வாழ்த்துக்கள் இருவருக்கும்.
சுமை என்னு கவிதனை படித்த பின்பு
சீ..யாம் என்ன செய்வோம் என
சுமையோடு விடைபெறுகின்றேன்

சுமையுடன் மதுரன்