![]() |
|
நேபாளத்தில் மன்னரில் ஆட்சிப்பிடி இறுகுகிறது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: நேபாளத்தில் மன்னரில் ஆட்சிப்பிடி இறுகுகிறது (/showthread.php?tid=5439) |
நேபாளத்தில் மன்னரில் ஆட்சிப்பிடி இறுகுகிறது - Mathan - 02-04-2005 நேபாளத்தில் மன்னரில் ஆட்சிப்பிடி இறுகுகிறது - எதிர்ப்பை ஒடுக்க அடக்குமுறையா? நேபாள மன்னர் ஞானேந்திரா இராணுவத்தின் ஆதரவுடன், ஆட்சியில் தனது பிடியை இறுக்கிவரும் வேளையில், அவரின் செயல்களுக்கு எதிரான கருத்துக்கள், ஈவுஇரக்கமின்றி அடக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. நேபாளத்தின் மையப்பகுதி நகரான பொக்காராவில், சென்ற செவ்வாய்க்கிழமை, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இராணுவம், நள்ளிரவில், மாணவர்களின் விடுதியில் அதிரடிச் சோதனை நடத்தியதாக, நம்பத்தகுந்த தரப்பினர் கூறியதாக, நேபாளத்தின் தேசீய மனித உரிமைகள் ஆணையம் கூறுகிறது. விடுதிக்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்துடன் அழுகுரல்கள் கேட்டதாகவும், பல மாணவர்கள் காயமடைந்திருப்பதாக நம்பப்படுவதாகவும், இந்தத் தரப்பினர் தெரிவித்ததாக, மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. குறைந்தது 250 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் 50 க்கும் அதிகமானோர் இராணுவப் படைமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் மனித உரிமைகள் ஆணையம் கூறுகிறது. தொலைபேசித்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிபிசியின் பிராந்திய நிருபர்கள் எல்லையூடாக இந்தியாவிற்குள் சென்றுதான் செய்திகளை அனுப்புகின்றனர். நேபாளத்தின் மிகப்பெரிய கட்சியான நேபாள காங்கிரஸின் 21 தலைவர்கள் மேற்கு நகரான காஞ்சன்பூரில் கைது செய்யப்பட்டு, கட்சியின் பொதுச் செயலாளரும் இன்னோர் மேற்கு நகரில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக எமது நிருபர்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னர் ஆட்சியைப் பிடித்ததும் ஆற்றிய உரைக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்திருக்கிறது. ஓர் முக்கிய செய்தித்தாளின் அலுவலகத்தில், இராணுவ அதிகாரிகள் கட்டுரைகளை வரிக்கு வரி பரிசோதிக்கின்றனர். இதற்கு அடுத்திருக்கும் தொலக்காட்சி நிலையத்தில் ஆயுதந் தாங்கிய துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. BBC தமிழ் - hari - 02-04-2005 இவன் என்னைவிட மோசமானவன் போல தெரிகிறது! :evil: |