![]() |
|
பகலில் வழங்கி இரவில் மீளப் பெற்றனராம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பகலில் வழங்கி இரவில் மீளப் பெற்றனராம்! (/showthread.php?tid=5411) |
பகலில் வழங்கி இரவில் மீளப் பெற்றனராம்! - Vaanampaadi - 02-06-2005 சுனாமி அனர்த்த நிவாரணக் கொடுப்பனவை பகலில் வழங்கி இரவில்மீளப் பெற்றனராம்! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு சுனாமி நிவாரணக் கொடுப்பனவுகளைப் பகலில் கொடுத்துவிட்டு இரவில் வீட்டைத் தட்டி எழுப்பி மீளப்பெற்றனராம் அதிகாரிகள். இச்சம்பவம் களுவாஞ்சிக்குடி பிரதேச செய லர் பிரிவிலுள்ள குருக்கள் மடத்தில் இடம் பெற்றுள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட குருக்கள் மடம்துறையடி வீதியைச் சேர்ந்த 15 பேர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இரா.மனோகரனிடம் இது தொடர் பான எழுத்துமூல முறைப்பாடு ஒன்றும் சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதா வது:- சுனாமியால் பாதிக்கப்பட்ட குருக்கள் மட துறையடி வீதியிலுள்ள 15 பேருக்குச் சமையல் உபகரணங்களை கொள்வனவு செய்ய 2 ஆயி ரத்து 500 ரூபாவும் 375 ரூபா பெறுமதியான நிவாரண முத்திரையும் வழங்கப்பட்டது. 31.01.2005 அன்று பகல் கையொப்பமிட்டு அப்பிரதேச கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி ஊழியர் ஆகியோர் இந்தக் கொடுப் பனவுகளை வழங்கினர். பின்னர் அன்று நள்ளிரவு 12 மணியளவில் பிரஸ்தாப 15 பேரது வீடும் தட்டப்பட்டது. அவர் களை எழுப்பி பகல் வழங்கிய கொடுப்பனவை யும் முத்திரைகளையும் தருமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனை அடுத்து உணவு முத்திரைகளை யும் சமையல் உபகரணங்களுக்கான கொடுப் பனவுகளையும் மீள ஒப்படைத்த இவர்கள்ää மறுநாள் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலரிடம் முறைப்பாடு செய்யவெனச் சென்றுள்ளனர். இவ்வாறு முறைப்பாடு செய்யச் சென்றவர் களைக் கொடுப்பனவை வழங்கியதாகக் கூறப் படும் அதிகாரிகள் பிரதேச செயலரிடம் முறைப் பாடு செய்யவிடாமல் தடுத்துவிட்டனர் என் றும் - இதனை அடுத்தே மனித உரிமை ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. உதயன் - Thaya Jibbrahn - 02-06-2005 இவர்களை ஈராக் தீவிரவாதிகள் செய்வது போல் தலை துண்டித்து கொன்றாலும் பாவமில்லை. - MEERA - 02-06-2005 இவர்கள் பரவாயில்லை கொடுத்துவிட்டு இரவில் பறிக்கிறார்கள் சிலர் கொடுக்காமலே பறிக்கிறார்கள். |